…………………………………………..

……………………………………………
டி.என்.சேஷன் அவர்களைப்பற்றிய சில சுவாரஸ்யமான
விஷயங்கள் –
1955-ஆம் ஆண்டு பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட ஐஏஎஸ்
அதிகாரியான டி. என். சேஷன், 1990ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி, இந்தியாவின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
நாடு முழுவதும் பல தேர்தல் திருத்தங்களைக் கொண்டுவந்தவர் சேஷன்..
டி.என். சேஷனை விட வேறு எந்த அதிகாரியும் இவ்வளவு புகழ்
பெற்றதில்லை. இந்திய அரசியல்வாதிகள் – கடவுளுக்கும்
டி.என்.சேஷனுக்கும் மட்டுமே பயப்படுவார்கள் என 90-களில்
வேடிக்கையாகப் பேசப்பட்டது.
சேஷனுக்கு முந்தைய தேர்தல் ஆணையர்கள் அனைவரும் அரசின் விருப்பப்படியே செயல்பட்டு வந்தனர்.
சேஷன் ஒரு நல்ல அதிகாரியாக அதிகாரத்தின்
தலைமை இடத்திற்கு வந்தார்.
சேஷன் எந்த துறையில் பணிபுரிந்தாலும் அந்த துறையில்
திருத்தங்கள் ஏற்பட்டது அவருடைய புகழின் மற்றுமொரு காரணம்.
ஆனால் 1990-களில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலால்
சேஷன் மந்திரிகளின் பகையைச் சம்பாதித்தார்.
ஒரு சமயம் , அவர், ”நான் காலை உணவாக அரசியல்வாதிகளை சாப்பிடுவேன்” என கூறினார். அவ்வாறு கூறியது மட்டுமில்லாமல்
செய்தும் காட்டினார். இதனால் அவர் அல்சேஷன்
என்றும் அழைக்கப்பட்டார்.
1992 உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தலின்போது, முதன்முதலாக,
மாவட்ட மாஜிஸ்ட்ரேட், காவல்துறை அதிகாரிகள் மற்றும்
சுமார் 280 தேர்தல் அலுவலர்கள் அனைவரும் தேர்தல் முடியும்வரை
தனக்கு கீழ் செயல்பட வேண்டும் என விளக்கினார்.
சேஷன் தன்னுடைய சுயசரிதையை எழுதினார் ஆனால் அதை
வெளியிட அவர் தயாராக இல்லை. அவ்வாறு வெளியிட்டால் நிறையப்
பேர் பாதிக்கப்படுவார்கள் என நினைத்தார். தன்னுடைய மகிழ்ச்சிக்காக
மட்டுமே எழுதியதாக அவர் தெரிவித்தார்.
1995 – ஐஏஎஸ் பிரிவில் இந்தியாவில் முதலிடம் பெற்றவர் சேஷன்.
இந்தியாவில் அனேக உயர்பதவியிலிருந்துவிட்ட சேஷன் சென்னை போக்குவரத்துத் துறையில் 2 வருடங்கள் பணியாற்றியதையே
சிறந்ததாகக் கருதினார்.
சேஷன் அந்த பதவியிலிருந்தபோது 3000 பேருந்து மற்றும் 40 ஆயிரம் பணியாட்கள் அவரின் கட்டுபாட்டில் இருந்தனர். ஒரு நாள் அவரிடம்
ஒரு ஓட்டுநர், “பேருந்தின் இன்ஞ்சினைப் பற்றியும், பேருந்து எப்படி
ஓட்டுவது குறித்தும் உங்களுக்குத் தெரியாதென்றால் உங்களால்
எப்படி ஓட்டுநரின் கஷ்டத்தைப் புரிந்துகொள்ள இயலும்?”
எனக் கேள்வி எழுப்பினார்.
இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார் சேஷன். பேருந்தை
ஓட்டுவதற்கு மட்டுமல்லாமல் பணிமனையில் நீண்டநேரம் செலவிட்டார்.
அவர் தன்னால் இன்ஞ்சினை கழட்டி மீண்டும் மாட்டமுடியும்
எனக் கூறினார். ஒரு முறை நடுரோட்டில் ஓட்டுநரை நிறுத்தி
பயணிகள் நிறைந்த பேருந்தை 80 கிலோமீட்டர் வரை ஓட்டிசென்றார்.
தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர் அடையாள அட்டையை அவசியமாக்கியது சேஷன் ஆகும்.
இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு இது மிகவும் செலவு ஏற்படுத்தக்கூடிய
ஒரு முடிவு என்று அரசியல்வாதிகள் இதை எதிர்த்தனர்.
வாக்காளர்கள் அடையாள அட்டை வாங்கவில்லை என்றால்
1995ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவில்
தேர்தல் நடைபெறாது என்று கூறினார்.
பல தேர்தல்களை மக்கள் அடையாள அட்டை எடுக்கவில்லை
என்பதற்காகவே தள்ளிவைத்தார்.
அவர் தேர்தலில் வேட்பாளர்களின் செலவுகளைக் குறைத்தார்.
ஒரு பத்திரிகையாளர், “நீங்கள் ஏன் எப்போதும் கடுமையாக நடந்து கொள்கிறீர்கள்” எனக் கேட்டபோது, “சட்டம் என்ன சொல்கிறதோ
அதையே நான் செய்கிறேன். இந்த சட்டம் பிடிக்கவில்லையென்றால்
சட்டத்தை மாற்றுங்கள். ஆனால் சட்டம் இருக்கும்வரை அதை நான் கடைப்பிடிப்பேன்” எனப் பதிலளித்தார்.
1996- ல், டி.என்.சேஷனுக்கு ரேமன் மெக்ஸஸ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது….
………………………………………………………………………………….
தூர்தர்ஷனின் நீண்டகால படைப்பாளியான ராஜீவ் மெஹ்ரோத்ரா
டி.என்.சேஷன் அவர்களுடன் நிகழ்த்திய ஒரு
விவரமான பழைய பேட்டி –
(ஆனால், இது 2 வாரங்களுக்கு முன்னர் தான் யூ-ட்யூபில்
வெளியாகி இருக்கிறது….)
சேஷன் பற்றி தெரிந்தவர்களுக்கு –
இந்த பேட்டி பிடிக்கும்.
……………………….
.
………………………………………………………………………………………………………………………………….



சேஷன் அவர்கள் வளைந்து கொடுக்கவில்லை. அப்படி இருக்கக்கூடாது என நான் நினைக்கிறேன் மற்றபடி சிறந்த அதிகாரி.
இவருக்குப் பிறகு தேர்தல் கமிஷனராக ஒருவர் இருந்தால் ஆபத்து என நினைத்து மூவர் குழுவை சோனியா அமைத்து நீர்த்துப்போகச் செய்தார்
ரொம்ப கரெக்ட்…..!!! ஆனால், அந்த மூவருமே அரசாங்கத்துக்கு ஜால்ரா போடுபவர்களாக இருக்க “ஆவனவற்றை” பின்னால் வந்த வேறோருவர் செய்தார்…. 😊
சோனியா காலத்திலும் அப்படித்தான். சட்டத்தை மாற்றியதால், பிறகு வந்தவர்கள் அதனை உபயோகித்துக்கொள்கின்றனர். ஒன்றை மூன்றாக்கியது crime தானே (ஊழலில் ஈடுபடுவதற்காக)
ஒவ்வொரு துறையிலும் கட்சி உறுப்பினரே, அனுதாபியே தலைவராக இருப்பதை தமிழகத்தில் காணுகிறோமே… அதுபோல