‘ திக் – திக் ‘ – விமான விந்தைகள் –

………………………………………………….

…………………………………………………

நிறைய தடவைகள் விமானப் பயணம் சென்றிருந்தாலும் கூட,
இப்போதும் – சில காட்சிகளை காணும்போது, மனம்
பதை பதைக்கிறது.

அய்யோ – என்ன ஆகுமோ என்று திகைக்கும்போதே,
மிக சாமர்த்தியமாக, அந்த சிக்கல்களிலிருந்து அவை
விடுபடுவதை காணும்போது, மிகவும் த்ரில்லிங்க்’காக இருக்கிறது…

அத்தகைய சில சாகச காட்சிகளை, நண்பர்களும் ரசிக்கவென்று
சிறு காணொளிகளிலிருந்து இங்கே திரட்டித் தந்திருக்கிறேன்….

…………………………………………………………………………………………..

தீ பிடித்துக்கொள்ளும் பறந்து கொண்டிருக்கும் விமானம் –

………….

…………………………….
மோத வரும் பெரிய விமானம் –
………….

…………………………..
ஒரு விமானம் கடத்தப்படுகிறது ( ஹைஜேக்கிங்….)
……..

……………………………….

தரை இறங்க முடியாமல் தத்தளிக்கும் விமானம் –

………………………………………………………………………


ராணுவ டேங்க்’கை விழுங்கும் விமானம் –
…………

…………………………………………………………………………………………….……
கோப்ரா லேண்டிங் –
………

………………………………………………………………………………………………………….


Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to ‘ திக் – திக் ‘ – விமான விந்தைகள் –

  1. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இங்கு மனிதாபிமானம் செத்து விட்டது ….
    வெட்கங்கெட்ட, சுயநலவாத – உலக நாடுகள் அதை
    வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன –

    …………………………….

    .
    …………………………………………………….

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      என்ன காரணத்தை இஸ்ரேல் முன்வைத்தாலும் அதனை ஜீரணிக்க முடியவில்லை. ஹமாஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்கள் எப்போதுமே அப்பாவிகளையே கேடயமாக வைத்து இயங்குபவை. இருந்தாலும் பிறந்த குழந்தைகளுக்கு இன்குபேட்டருக்கான மின்சாரம்கூட இல்லாமல் செய்வதா மனிதாபிமானம்?

      இதனைக் கேட்கும் தகுதியுள்ள ஒரே நாடு அமெரிக்காதான். அதுகூடவா நுழைந்து செயல்படவில்லை? இது அப்பாவி பாலஸ்தீனியர்களுக்கு (அதாவது பாலஸ்தீனியர்களில் அப்பாவிகளுக்கு) செய்யப்படும் அநீதி

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    நான் எட்டு வருடங்களுக்கு முன்பு, பஹ்ரைனிலிருந்து ஹீத்ரூ விமான நிலையத்துக்கு கல்ஃப் ஏரில் பயணித்தேன். கடுமையான இடி மின்னல் போன்ற காலநிலை. புறப்பட்டு ஒரு மணி நேரத்தில், விமானம் மேலும் கீழும் ஆடுகிறது. அது என் முதல் அனுபவம் (மோசமான பருவநிலையில் விமானத்தில் பயணிப்பது). உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயணிக்கவில்லை, பயத்தில், மூன்று சீட்டுகள் இருந்த பின்பகுதியில் போய்ப் படுத்துவிட்டேன்.

    என் நண்பன் ஒருவன் அவனது சகோதரன் ஹீத்ரூ-சென்னை விமானத்தில் வந்தபோது, ஏதோ பிரச்சனை காரணமாக, 30 ஆயிரம் அடியிலிருந்து நொடியில் சில ஆயிரம் அடிக்கு விமானம் கிட்டத்தட்ட விழும் நிலைக்கு வந்தது, அனைவரும் மரணம் நிச்சயம் என்று நினைத்தனர், எப்படியோ பிழைத்துவிட்டனர் என்றான்.

    பிரச்சனை இல்லாத நேரத்தில் விமானப்பயணம் நன்றாக இருக்கும்.

  3. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.