……………………………………

……………………………………..
( கீழே இருப்பது நான் எழுதியது என்று யாரும் நினைத்து விடாதீர்கள்….
என் விமரிசனம் இதில் எதுவுமே இல்லை;
யாமொன்றும் அறியோம் – பராபரமே…!!!
முழுக்க முழுக்க, தலைப்பு உட்பட
செய்தித்தளத்தில் வந்திருப்பவையே …!!!!!!!!! )
சென்னை: வருமான வரித்துறை சோதனை மூலம் தமிழ்நாட்டின்
தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ள அமைச்சர் எ.வ.வேலு,
ஒரு காலத்தில் மோட்டார் பம்பு செட் மெக்கானிக்காகவும்,
பேருந்து நடத்துநராகவும் இருந்தவர் என்பது எத்தனை பேருக்கு
தெரியும் என்று தெரியவில்லை.
இதனிடையே அமைச்சர் எ.வ.வேலுவின் பின்னணி குறித்து
சுருக்கமாக இங்கே –
மோட்டார் மெக்கானிக்: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு
அருகே உள்ள சே.கூடலூர் என்ற கிராமத்தை பூர்விகமாக கொண்டவர் எ.வ.வேலு. ஆரம்பக் காலங்களில் பம்புசெட் மோட்டார் மெக்கானிக்காக
இருந்த இவர், ஒரு கட்டத்தில் பேருந்து நடத்துநராக வேலைக்கு சேர்ந்தார்.
எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக அறியப்பட்ட எ.வ.வேலு, நடத்துநராக இருந்துக்கொண்டே அதிமுகவிலும் ஆக்டிவாக செயலாற்றினார். பஸ் கண்டக்டராகவே எவ்வளவு நாட்களுக்கு தான் இருப்பது என யோசித்த எ.வ.வேலு அதிமுகவில் எம்.எல்.ஏ. சீட் கேட்டு விருப்பமனு கொடுக்கிறார்.
ஆனால் அவருக்கு எம்.ஜி.ஆர். வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனாலும்
மனம் தளராத எ.வ.வேலு, அடுத்த தேர்தலில் ப.உ.சண்முகத்தை பிடித்து
அவர் மூலம் 1984-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சீட் வாங்கி அதிமுக எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றார். இவருக்கு சீட் கொடுக்க ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆரிடம் ஆட்சேபனை தெரிவித்த போது ப.உ.சண்முகம் தான் ‘கெட்டிக்காரப் பையன் ‘ என பரிந்துரைத்து சீட் வாங்கிக் கொடுத்தார்.
ஜானகி ஆதரவாளர்: தனக்கு கிடைத்த எம்.எல்.ஏ. பதவி மூலம்
அதிமுகவில் அன்றைக்கு அமைச்சர்களாக இருந்த பலருடனும் நெருக்கம்
காட்ட ஆரம்பித்தார் எ.வ.வேலு. பொன்னையன், முத்துசாமி என முக்கியத் துறைகளின் அமைச்சர்களை பிடித்து தனது தொகுதிக்கு ஏராளமான பணிகளை செய்து கொடுத்து லோக்கலிலும் தனக்காக செல்வாக்கை பெருக்கிக்கொண்டார்.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ஆதரவாளராக மாறிய எவ வேலு ஜெயலலிதாவை மிகக் கடுமையாக எதிர்த்தார். எம்.ஜி.ஆரின் உடல்
கொண்டு செல்லப்பட்ட ராணுவ வண்டியில் ஜெயலலிதா ஏறிவிடாதவாறு கடுமை காட்டினார். ஜானகி அணியும் ஜெயலலிதா அணியும் ஒரு
கட்டத்தில் ஒன்றிணைந்ததால் இனி அதிமுகவில் தமக்கான எதிர்காலம் இருக்காது எனக் கருதி நடிகர் பாக்யராஜ் கட்சி, பிறகு ரஜினி ஆதரவு நிலைப்பாடு என பல நிலைப்பாடுகளை எடுத்தார். ஆனால் எதுவுமே
ஒர்க் அவுட் ஆகாததால் பேசாமல் திமுகவில் ஐக்கியமாகிவிடுவது
என முடிவெடுத்த எவ வேலு திமுகவில் இணைந்து 2001 முதல் 2021 வரை
திமுக சார்பில் போட்டியிட்டு வருகிறார்.
பணத்தால் வளைப்பு: எதையும் பணத்தால் வளைக்க முடியும் எனக்
கருதுபவர் எவ வேலு. இதனால் திமுகவில் சேர்ந்தவுடன் தன்னை
கட்சிக்கு புதுசா வந்தவன் என யாரும் விம்ர்சித்துவிடக் கூடாது
என்பதற்காக அந்தக் காலத்திலேயே கட்சியினருக்கு படியளப்பதில்
தாராளம் காட்டினார். அதேபோல் எப்போதுமே சுறுசுறுப்பாக ஆக்டிவாக கட்சியில் இயங்கிக் கொண்டிருப்பார்.
கருணாநிதியை பொறுத்தவரை சோர்வடையாமல் சுறுசுறுப்பாக
பணியாற்றும் கட்சிக்காரனை கைதூக்கி விடக் கூடியவர். தொழில் சாம்ராஜ்யம்: அந்த வகையில் தனது சுறுசுறுப்பு ஃபார்முலா மூலம் திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளர் பதவியை
கு.பிச்சாண்டியிடம் இருந்து பறித்து தன் வசம் ஆக்கிக் கொண்டார்
எ.வ.வேலு. அதன் பிறகு அடுத்தடுத்து திமுகவில் வளர்ச்சி கண்ட வேலு,
2006ல் உணவுத்துறை அமைச்சரானார்.
தொடர்ந்து டிவி சீரியல் தயாரிப்பு, உண்டு உறைவிட பள்ளி, கல்லூரி
என தனது தொழில் சாம்ராஜ்யங்களை டெவலப் செய்து கொண்டார்.
திமுகவின் கஜானா: இதனிடையே இன்றைய காலக்கட்டத்தில் திமுகவின் கஜானாவாகவும் அறியப்படுகிறார் அமைச்சர் எவ வேலு. செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்திய போதே, எப்படியும் தன் வீட்டுக்கும் ரெய்டு வருவார்கள் என்பதை முன்கூட்டியே யூகித்தவர் தான் வேலு… !!!
லிங்க் – Read more at: https://tamil.oneindia.com/news/chennai/minister-ev-velu-was-once-a-motor-pump-set-mechanic-and-a-bus-conductor-553813.html?story=1
.
………………………………………………………………………………………………..……..



நிஜமான சாமியாரா இல்லை ….