” மது அருந்தினால் …. தாம்பத்தியத்தை இழப்பீர்கள் ” …..!!!வாழ்க்கை அனுபவஸ்தர் – வைரமுத்து கூறுகிறார் …..

…………………………………………….

………………………………………………

மது அருந்துவதால் ஏற்படக்கூடிய கேடுகளைப்பற்றி, பலரும் –
பல காரணங்களையும் சொல்வார்கள் – கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால், முதல் முறையாக, அனுபவஸ்தர் வைரமுத்து அவர்கள்
என்ன காரணத்தை முன் வைக்கிறார், அவர் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் …. பாருங்கள் ….!!!

மற்ற எல்லா கேடுகளையும் விட, இவர் முக்கியமாக
உணர்வது இந்த கேட்டைத்தான்…!!!

அண்மையில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் – தமிழ் பதிப்பில்
வெளிவந்த ஒரு செய்தி கட்டுரை கீழே –

……………….

கவிஞர் வைரமுத்து அண்மையில் குமுதம் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் பேசும் போது, “நமது வாழ்க்கை எந்த மாதிரியான சுற்றுப்புறத்தில் வளர்கிறது என்பதுதான், நம் ஒழுக்கத்தினுடைய
மிகப்பெரிய குணம். என்னிடம் ஒழுக்கத்தைப் பற்றி கேட்கும் பொழுது,
சாட்சி இல்லாத இடத்தில் ஒழுக்கமாக இருப்பது என்று சொல்லி இருக்கிறேன்.

நான் தனியாக இருந்திருக்கிறேன். 7 நட்சத்திர ஹோட்டல்களில் எல்லாம் என்னை வெளிநாட்டு நண்பர்கள் தங்க வைத்திருக்கிறார்கள். அங்கு நிறைய பழங்கள், குளிர்பானங்கள் மது பாட்டில்கள் உள்ளிட்ட பலவை இருக்கும். குறிப்பாக, மதுவில் விலையுயர்ந்த மதுபானங்கள் இருக்கும்.

அதனை நான் பார்த்து அதன் நிறங்களில் வேறுபாடு இருக்கிறதா என்று ரசிப்பேன். அவ்வளவுதான் எனக்கும் மதுவுக்கும் இடையே உள்ள ஈடுபாடு.
அந்த நிறங்களிலிருந்து, கவிதைக்கு ஏதாவது சாரம் கிடைக்கிறதா என்று பார்ப்பேன்.

நான் இந்த உலகத்தில் மிகவும் அதிகமாக, இது இந்த நிறம் என்று சொல்ல முடியாத நிறங்கள், அதாவது அந்த நிறங்களை பெயர் சொல்லி அழைக்க முடியாது. அது, அப்படியான ஒரு நிறத்தில் இருக்கும். அப்படித்தான் தனியாக இருக்கும் பொழுது, என்னால் ஒழுக்கமாக இருக்க முடிகிறது.

சிறு வயதிலிருந்து மதுவால் சீர்குலைந்த குடும்பங்களை, மனிதர்களை நான் பார்த்து வளர்ந்து இருக்கிறேன். அவர்கள் படும் அவமானங்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் குடும்பத்தில் ஏற்படுகிற குழப்பங்களை கண்டிருக்கிறேன்.

நீங்கள் போதை பழக்கத்திலிருந்து வெளியேறாக விட்டால் உங்கள்
இல்லற வாழ்க்கைக்கு கூட பிரச்சினை ஏற்படும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

உங்களை நம்பி வரும் பெண்ணை நீங்கள்
முழுமை செய்யாதவனாக இருப்பீர்கள் என்றால்,
அவளுக்கு நீங்கள் துரோகம் செய்கிறீர்கள் என்று
அர்த்தமாகும். ஒரு பெண்ணை நிறைவு செய்வதும்,
முழுமை செய்வதும் அவளை மதிக்கின்ற பணிகளில்
ஒன்றாகும்.

மனைவிக்கு மலர்களை வாங்கித் தருவது, தங்கம் வாங்கித் தருவது,
இனிப்பு வாங்கி தருவது மட்டுமே ஒரு கணவனின் பெரும் செயல் அல்ல.

உங்களிடம் அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்பது
உங்களுக்குத் தெரியும். அதை நீங்கள் முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென்றால், போதை பழக்கத்தை விட்டு தயவு செய்து
வெளியேறுங்கள். நிகழ்கால தாம்பத்தியத்தை
அது பாதிக்காவிட்டாலும், எதிர்கால தாம்பத்தியத்தை
அது கண்டிப்பாக பாதிக்கும்.

தாம்பத்தியம் குறைபட்டு போனால் வாழ்வில் ஒரு குறை வரும்.
இந்தக் குறை உங்களை எந்தெந்த துன்பங்களுக்கு இட்டுச்
செல்லும் என்பது உங்களுக்கே தெரியாது . சில ஆண்கள் மற்றும்
பெண்களின் வாக்குமூலங்களை கேட்டு, சில துயரங்களை நான் உணர்ந்திருக்கிறேன். அந்த துயரங்களுக்கு புதிய தலைமுறை
ஆட்பட்டு விடக்கூடாது” என்று பேசினார்.

………….
https://tamil.hindustantimes.com/amp/entertainment/vairamuthu-latest-interview-about-disadvantages-of-drugs-importance-of-sex-satisfaction-for-youngsters-131698061866600.html
.
……………………………………………………………………………………………………………….…….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to ” மது அருந்தினால் …. தாம்பத்தியத்தை இழப்பீர்கள் ” …..!!!வாழ்க்கை அனுபவஸ்தர் – வைரமுத்து கூறுகிறார் …..

  1. Karthikeyan Palanisamy's avatar Karthikeyan Palanisamy சொல்கிறார்:

    சாத்தன் வேதம் ஓதுகிறது

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    //என்னிடம் ஒழுக்கத்தைப் பற்றி கேட்கும் பொழுது, சாட்சி இல்லாத இடத்தில் ஒழுக்கமாக இருப்பது என்று சொல்லி இருக்கிறேன்.// அடடா.. இது இத்தனை வருடங்கள் யாருக்கும் தெரியாமல் போய்விட்டதே.

    //அதன் நிறங்களில் வேறுபாடு இருக்கிறதா என்று ரசிப்பேன். அவ்வளவுதான் எனக்கும் மதுவுக்கும்// – அடடா என்ன ஒரு ரசிகன்.

    //மனைவிக்கு மலர்களை வாங்கித் தருவது, தங்கம் வாங்கித் தருவது,
    இனிப்பு வாங்கி தருவது மட்டுமே// – யார் மனைவிக்கு என்று சொல்லியிருந்து அதை சென்சார் செய்திருக்கிறார்களா?

    /பெண்களின் வாக்குமூலங்களை கேட்டு, சில துயரங்களை நான் உணர்ந்திருக்கிறேன். // – இது என்னவாக இருக்கும்? படிக்கிறவர்களுக்காவது புரிகிறதா?

    கா.மை. சாருக்கு நகைச்சுவை உணர்வு குறைவோ என்று எனக்குத் தோன்றும். அந்தக் குறையை ஈடுசெய்வதற்காக இந்தப் பதிவோ?

  3. Tamil's avatar Tamil சொல்கிறார்:

    மதுவை விற்பது இவர் விகடகவியாக இருக்கும் திராவிட ஆட்சி அதை முதலிலேயே நிறுத்தச் சொல்லுங்கள் தமிழகம் உருப்படும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.