மணல் வேண்டுமா -??? உடனே முந்துங்கள் -கணக்கில் வராத 1.5 லட்சம் லோடு மணல்-அமலாக்கத்துறை மேற்பார்வையில் விற்பனை….

………………………….

………………………………

( உடனடியாக மணல் வாங்குபவர்கள் …. கொடுத்து வைத்தவர்கள்….
“மேல் கொண்டு” எதுவும் கொடுக்காமல் வாங்கலாம்…!!! )

சென்னை: திடீர் சோதனை நடந்த குவாரிகள், யார்டுகளில் கணக்கில் வராமல் இருப்பு வைக்கப்பட்ட மணல், அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் லாரிகளுக்கு வழங்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில், அரசு மணல் குவாரிகளில் அள்ளிப்போடும் பணிக்காக, ஒப்பந்ததாரர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில், சட்ட விரோத பண பரிமாற்ற புகார் எழுந்த நிலையில், ஒப்பந்ததார்களின் இடங்களில்
அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

குவாரிகள், யார்டுகளில் சோதனை நடந்த போது, ஒப்பந்ததாரர்களின்
ஆட்கள் ஓட்டம் பிடித்தனர். சோதனை முடிந்த நிலையில், இந்த யார்டுகள் மீண்டும் செயல்படவில்லை.

அதேநேரத்தில் இந்த யார்டுகளில், கணக்கில் வராமல் மணல் இருப்பு வைக்கப்பட்டதாக அமலாக்கத்துறை புகார் தெரிவித்த நிலையில்,
அதற்கு விளக்கம் அளிக்க முடியாமல், தமிழக அரசு அதிகாரிகள்
தவித்து வருகின்றனர்.

………..

இந்நிலையில், யார்டுகளில் கணக்கில் வராத மணலை
ஆன்லைன் விற்பனை திட்டத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான பணிகள் துவங்கியுள்ளன. முறைகேடு புகாரில் சிக்கிய யார்டுகளில், 1.5 லட்சம் லோடு மணல் இருப்பதாக தெரிய வருகிறது.
இந்த மணல் முறையாக கணக்கில் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

தற்போது, அமலாக்கத்துறை மேற்பார்வையில்,
நீர் வளத்துறை அதிகாரிகள், ஆன்லைன் முறையில் பதிவு
செய்தவர்களுக்கு மணல் வழங்கி வருகின்றனர்.
அரசு நிர்ணயித்த விலையில், முறையான நடை சீட்டு அடிப்படையில், வரையறுக்கப்பட்ட அளவு மணல் மட்டுமே லாரிகளுக்கு வழங்கப்படுகிறது. நாளொன்றுக்கு, 100 முதல், 150 லோடு மணல் வழங்கப்படுகிறது.

.
https://m.dinamalar.com/detail.php?id=3461999
………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.