………………………………………..

………………………………………….
பொதுவாக ‘துக்ளக்’ ரமேஷ் பாஜக ஆதரவாளர் தான்
என்றாலும் கூட, செய்திகளை -அலசும் போது –
முடிந்த வரையில், நேர்மையாகவே அலசுகிறார்.
அதில் – அவர் ஏதும் பாரபட்சம் காட்டுவதில்லை.
கீழே விரிவாக அலசுகிறார் – மைனாரிடி ஓட்டுகள் யாருக்கு
போகுமென்று …..
……………………………………………………………………………….
.
……………………………………………………………………………………………………………………………………………….



பொதுவாக மதம் மாறியவர்கள், தாங்கள் மாறிய மதத்திற்கு அளவுக்கு அதிகமாக விசுவாசம் காட்டுவார்கள், காட்டுவதாக காண்பித்துக்கொள்வார்கள். இப்போது எடப்பாடி அவர்கள், சிறுபான்மையினர் வாக்குகளுக்காக, நேரடியாக முஸ்லீம் கைதிகள் என்று ஆதரவு தெரிவிப்பதும் அதன் காரணமாகத்தான். ஆனால் எடப்பாடி இப்படிச் செய்வது, என்னைப் பொறுத்த அளவில், இந்து வாக்கு வங்கியை, அதிமுகவை விட்டு விலகச் செய்யும்.
துக்ளக் ரமேஷின் பார்வை சரிதான். பாஜகவை விட்டு அதிமுக விலகி வந்ததால் இரண்டு நடக்கும்.
1. திமுகவின் ஆட்சி மோசமாக இருப்பதால், அதில் வெறுப்படைந்த, ஆனால் பாஜகவிற்கு வாக்களிக்கக்கூடாது என்று நினைக்கும் சிறுபான்மையினருக்கு ஒரு போக்கிடம் இருக்கிறது.
2. ஆட்சியின் தன்மையைவிட, நம் சமூகம் மதம்தான் முக்கியம் என்று எண்ணுபவர்கள், நிச்சயம் அதிமுக பக்கம் சாயமாட்டார்கள்.
எனக்கென்னவோ, எடப்பாடி தலைமையில், அதிமுக, கட்சி சாராத இந்து உணர்வுள்ளவர்களின் வாக்குகளை மொத்தமாக இழக்கும் என்று தோன்றுகிறது. ஜெ மீது இருந்த நம்பிக்கை, எடப்பாடி மேல் இருக்காது என்று நினைக்கிறேன்.
தலைப்பைத் தொடாத ஒரு சப்ஜெக்ட். அதிமுகவினர் நிச்சயம் ஓபிஎஸ் அவர்களை ஆதரிக்க மாட்டார்கள். அதனால் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனைச் சேர்த்துக்கொள்வதால், பாஜகவிற்கு பிரயோசன்ம் இருக்காது என்றே நான் நினைக்கிறேன். From strategy point of view, அது அதிமுகவை இன்னும் பலவீனப்படுத்தலாம்.
அது சரி.. ‘இவங்களால சி.எம். ஆகலை’ என்ற படத்தை இந்த இடுகையில் ஏன் சேர்த்தீர்கள்?
.
புதியவன்,
// அது சரி.. ‘இவங்களால சி.எம். ஆகலை’ என்ற படத்தை இந்த இடுகையில் ஏன் சேர்த்தீர்கள்? //
எடப்பாடி எந்த அளவுக்கு உண்மையானவர்,
தன்ன உயர்த்தி விட்டவர்களுக்கு விசுவாசமானவர்,
நேர்மையானவர் – என்பதை நினைவுபடுத்த வேண்டாமா ….??
முக்கியமாக, உங்களைப்போன்ற பலர், எடப்பாடியாரைப்பற்றி
மிகவும் ஒசத்தியாக நினைத்திருந்தீர்களே….!!!
அதற்காகத் தான்…..😊
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கா.மை. சார்…. எனக்கு அப்போது மிக மிக முக்கியமாகத் தெரிந்தது அதிமுகவின் வளர்ச்சி மற்றும் survival. அதுக்கு ஓபிஎஸ் அவர்கள் சரிப்பட்டு வரமாட்டார்.Tainted சசிகலாவும் சரிப்படமாட்டார் (அவருடைய நிழலாக ஜுனியர் எடப்பாடிதான் டி.டி.வி). அதனால் எனக்கு எடப்பாடியார் மிக முக்கியமாகத் தெரிந்தார். அவர் நான்காண்டுகளை, மத்திய பாஜக உதவியோடு ஜெ அவர்களின் கௌரவமான வெற்றி குலையாமல் அதிமுகவைக் காத்தார். அவ்வளவுதான் விஷயம்.
இப்போது அதிமுக என்பதன் conceptஐ அழிக்குமாறு அவர், முஸ்லீம்கள் என்பதால் முஸ்லீம் கைதிகளை விடுவிக்க வேண்டும், இந்துக்கள் பற்றிப் பேசினால் எங்கே மைனாரிட்டி வாக்குகள் போய்விடுமோ என்று சென்னிமலை போன்றவற்றில் மௌனம் காப்பது, சென்ற தலைவர்களை உள்ளே சேர்க்கமாட்டேன் என்று தன் அப்பன் வீட்டுச் சொத்தாக அதிமுகவை நினைப்பது, தற்போது CAA போன்ற விஷயங்களில் கூட்டணி தர்மத்துக்காகச் செயல்பட்டேனே தவிர அவற்றை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றெல்லாம் பேசுவது, என்று செயல்படும்போது, அதிமுகவை அழிக்க முனைகிறார் என்றே எனக்குத் தோன்றுகிறது.
‘நல்லவன்’, திமுக ஒட்டுண்ணி மாத்திரம்தான், ஏதோ இளையராஜா மீது ஈகோ பிரச்சனைதான் என்று நினைத்திருந்தவன், Me Too மூலம் சந்தி சிரித்த பிறகு, ஸ்த்ரீ லோலன், அந்த வேலையை தனக்கு வாழ்வளித்த ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்திலேயே காட்ட முயன்று அதனால் தன் திரைவாழ்வையே அழித்துக்கொண்டவர் என்று தெரியும்போது, அவர் மீது நமக்கு வெறுப்பும் கோபமும் ஏற்படுவதில்லையா? ‘அன்று’ பூங்கதவே தாழ் திறவாய் பாடலை ரசித்தாயே, ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது’ என்ற பாடலைப் புகழ்ந்தாயே, ‘சர சர சாரக் காற்று வீசும்போது’ பாடல்வரிகளை சிலாகித்தாயே என்று சொன்னால் அதற்கு என்ன பதில் சொல்லுவது?
.
😊
.
//எடப்பாடி எந்த அளவுக்கு உண்மையானவர்,
தன்ன உயர்த்தி விட்டவர்களுக்கு விசுவாசமானவர்,
நேர்மையானவர் – என்பதை நினைவுபடுத்த வேண்டாமா ….??//
எடப்பாடி சசிகலா காலில் விழுந்ததை வேண்டுமானால் நாம் குறை சொல்லலாம் ஆனால் அவர் முதல்வரானது ஒவ்வொரு எம்எல்ஏ -க்கும் பல கோடி ரூபாய் கொடுத்து என்பது அனைவரும் அறிந்ததே.
எடப்பாடி ஏதோ மனித புனிதர்களை ஏமாற்றியது போன்று ஏன் நாம் அவரை கேவலப்படுத்த வேண்டும்? அவர் காலில் விழுந்தது இவர்களை அடியோடு குழி தோண்டி புதைக்க என்றால் அதற்காக நாம் அவரை பாராட்டத்தான் வேண்டும்.