………………….

………………….
ஆண்டிமுத்து ராசாவின் பினாமி சொத்துக்கள் 15-ஐ முடக்கி
இருப்பதாக 2 நாட்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை அறிவித்தது.
அவ்வளவு தானா ..???
இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த வழக்குகள் எல்லாம்
நீடித்துக்கொண்டே இருக்கப்போகின்றன …???
இந்த வழக்கின் துவக்கத்திலேயே நிகழ்ந்த ஒரு பரிதாப
சம்பவத்தை அண்மைய அறிவிப்பு நினைவுபடுத்துவதாக
இருக்கிறது…இன்றைய இளைஞர்களில் பெரும்பாலோர் இதைப்பற்றி
அறிந்திருக்கவே வாய்ப்பில்லை..
2 ஜி வழக்கில் சம்பந்தப்பட்டு பின்பு தற்கொலையால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் வகையில் மரணமா – என்று அவிழ்க்கப்படாத முடிச்சாகவே இன்னமும் இருக்கிறது சாதிக் பாஷாவின் மரணம்.,
இங்கே இந்த காணொலியில் அது குறித்த ஒரு விவரமான அலசல் மூத்த பத்திரிகையாளர் க்ரைம் செல்வராஜ் அவர்களால், மேற்கொள்ளப்படுகிறது. விரிவான விவரங்கள் தெரிந்து கொள்வதில் ஆர்வம் மற்றும் நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம்.
……………………
.
…………………………………………………………………………



ஒரு கேள்வி… மகளிருக்கு 33 சதம் இட ஒதுக்கீடு கொடுக்கவில்லையே என்று திமுக இவ்வளவு கவலைப்படுகிறதே… அவ்வளவு ஆர்வம் இருந்திருந்தால், வரும் தேர்தலில் சட்டம் இல்லாமலேயே 33 சதம் பெண் எம்.பி. வேட்பாளர்களை திமுக நிறுத்துமா? கூட்டணிக் கட்சிகளையும் வற்புறுத்துமா?
என்னுடைய கருத்து – அரசியல் மகளிருக்கான களம் அல்ல…
அவர்கள் அதிலிருந்து ஒதுங்கியிருப்பதே அவர்களுக்கு நல்லது.
அபூர்வமாக சில பெண்களுக்கு, அதற்கேற்ற மனப்பக்குவமும்,
உறுதியும், விருப்பமும் இருக்கும். அவர்கள் வரலாம்….
மற்றபடி, நான் – என் சகோதரியோ, மனைவியோ, மகளோ
அரசியலுக்கு வருவதை ஊக்குவிக்க மாட்டேன்.
மகளிர் பிரகாசிக்க வேறு பல துறைகள் இருக்கின்றன.
இது – சாக்கடை.
.
சாக்கடையாக நாறிக்கொண்டிருக்கும் அரசியல் களம் கொஞ்சம் கொஞ்சமாக மாறவேண்டுமானால் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படவேண்டும் என்பதே என்னுடைய கருத்து. பெண்களுக்கு மட்டுமே இயற்கையாகவே அடுத்தவர்மேல் அக்கறை கொள்ளும் குணம் மேலோங்கி இருக்கும். அரசியல் களம் மேம்பாடு அடைய வேண்டுமானால் இத்தகைய குணம் இருப்பவர்கள் மேலும் மேலும் அரசியலுக்கு வரவேண்டும். சமூக அக்கறை உள்ள காவிரி மைந்தனுக்கு இதில் மாற்றுக்கருத்து இருப்பது எனக்கு வருத்தமே. இந்த வகையில் 50 சதவீதம் பெண்களை அரசியலுக்குக் கொண்டுவரும் சீமானின் உறுதியை நான் வியந்து பாராட்டுகிறேன்.
நண்பரே,
நீங்கள் அரசியல் சுத்தப்படுவதற்கு முக்கியத்துவம்
கொடுக்க நினைக்கிறீர்கள்….
நான் – பெண்களின் பாதுகாப்பும், மானமும்,
மரியாதையும் உறுதி செய்யப்பட வேண்டுமென்று
நினைக்கிறேன்…..
இரண்டில் எது முக்கியம் …???
நீங்களே சொல்லுங்களேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இரண்டும் முக்கியம்தான். அரசியல் சுத்தப்பட்டால் பெண்களின் பாதுகாப்பும், மானமும், மரியாதையும் தானாகவே உறுதி செய்யப்பட்டுவிடும். அதுவரை பெண்களை சமுதாய அக்கறை உள்ளவர்கள்தான் தக்க ஊக்கமும் பாதுகாப்பும் அளித்து முதன்மைப்படுத்த வேண்டும். பெண்களுடைய பங்களிப்பு அதிக அளவில் இல்லையெனில் அரசியல் சுத்தப்பட வாய்ப்பே இல்லை.