அண்ணாமலை திட்டமிட்டு குறி வைக்கப்படுவது தெரிகிறதா ….???பின்னணியில் யார் …???

…………………………………………………………………….

……………………………………

……………………………………..

( இது சாம்பிளுக்கு தான்… )

…………………………………………………………………..

தமிழகத்தின் பல ஊடகத் தலைப்புகளை பார்த்தாலே தெரியும்….
அத்தனை பேருக்கும் குறி ஒன்றே தான் ….!!!

அண்ணாமலையை பேட்டி காணும் ஊடக நிருபர்கள் கேட்கும் கேள்விகளைப் பார்த்தாலே, அவர் திட்டமிட்டு அவமானப்படுத்தப்படுவது புரியும்….

ஏன் இப்படி ….?


அண்ணாமலையை அகற்ற பலர் துடிக்கின்றனர் புரிகிறது…

இருந்தாலும், இதில் அதிகம் துடிப்பது யார் ….? யூகிக்க முடிகிறதா ….???

இவர்கள் துடிப்பது அண்ணாமலையின் 2024 பாராளுமன்ற
தேர்தல் ரோல் காரணமாக அல்ல…24 தேர்தல் இவர்களது குறிக்கோள் அல்ல.

அதற்கும் அப்பால் – 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில்
அண்ணாமலையால் தங்களது கனவு சிதையும் என்று
தவிப்பவர்களாகத் தான் இருக்க முடியும் …?

திமுக அல்லவென்றால் அது வேறு யாராக இருக்க முடியும்….?

ஏகப்பட்ட சமூக ஊடகங்களை விலைக்கு வாங்கக்கூடிய
அளவிற்கு வசதி படைத்தவர் வேறு யாராக இருக்க முடியும்…!!! ???

சுலபமாக யூகித்து விடலாமே…..!!!

அண்ணாமலையின் லேட்டஸ்ட் செய்தியாளர் கூட்டம் காணொலி கீழே –

…………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to அண்ணாமலை திட்டமிட்டு குறி வைக்கப்படுவது தெரிகிறதா ….???பின்னணியில் யார் …???

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    அண்ணாமலை இன்று குறிவைக்கப்படவில்லை. எப்போது அவர் வித்தியாசமானவர், மக்கள் அவரை விரும்ப ஆரம்பிக்கிறார்கள் என்று தெரிந்ததோ அப்போதிலிருந்தே குறிவைக்கப்படுகிறார்.

    ஊடகங்களைக் கையில் வைத்திருக்கும் கட்சி ஆரம்பத்திலிருந்தே இதனைச் செய்துவந்திருக்கிறது. அண்ணாமலையை உணர்ச்சிவசப்பட வைத்து அவரை அரசியலிலிருந்து நீக்கவேண்டும் என்பதற்காகவே ஒரு ஆண் மற்றும் பெண் ஊடகவியலாலர், சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில், மரியாதையில்லாமல் போடியத்தின் மீதே காலைத் தூக்கிப்போட்டுக்கொண்டு கேள்விகள் கேட்டனர். அண்ணாமலை சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுகிறார், அதன் காரணம் அவர் வயது மற்றும் இதற்கு முன்பு வகித்த பதவி. ஆனால் பெரும்பான்மையான நேரங்களில் அவர் நிதானமாகவும், மரியாதையுடனும் பதில் சொல்கிறார். அவர் அளவிற்கு எந்த அரசியல்வாதியும் ஊடகங்களிடம் பேசியதில்லை. விஜயகாந்தை எரிச்சல்/கோபப்படுத்தியதுபோன்ற தெக்கினிக்கை அண்ணாமலையிடமும் செய்துபார்க்கின்றனர். அவரைப் பற்றி ஏராளமான பொய்ச்செய்திகள். ஊடகவியலாளர்களின் கேள்விகளையே பாருங்களேன், ஒருவருக்கும் தமிழகம் நல்லா இருக்கணும், மக்கள் நல்லா இருக்கணும் என்ற அக்கறை கிடையாது (விதிவிலக்குகள் உண்டு). நீங்கள் ஏன் மஞ்சள் சட்டை போட்டிருக்கிறீர்கள், ஏன் செருப்பை அணிந்திருக்கிறீர்கள், உங்களை பதவியிலிருந்து தூக்கிவிட்டால் என்ன செய்வீர்கள்….இதைப்போன்ற அறிவுத்தெளிவான கேள்விகளை மாத்திரமே கேட்கின்றனர். அண்ணாமலை பதவியிலிருந்து போனால் இன்னொருவர் வருவார், இவர்களை இவர்களது நிறுவனம் வெளியேற்றினால் நடப்பதைப் போல… ஆனால் மக்கள் மனதில் அண்ணாமலை இருப்பார், இந்த ஊடகவியலாளர்களை அவர்கள் வீட்டு நாய்கூட மதிக்காது என்பதை யார் இவர்களுக்குச் சொல்வது? ஒருத்தராவது, திமுக இந்த இந்த ஊழல் செய்கிறதே, மின் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறதே… அதற்கு உங்கள் ரியாக்‌ஷன் என்ன என்று என்றைக்காவது கேட்டிருக்கிறார்களா?

    பாஜகவிற்கு ஜிங் சக் போட்டுக்கொண்டிருந்த எஸ் வி சேகர், காயத்ரி, ராமசுப்ரமணியன் போன்றோர், வெட்கம் கெட்டு, திமுகவிற்கு ஆதரவாகப் பேசுகின்றனர். இவர்கள் வாய் கூசாமல், அண்ணாமலை பிராமணர்களுக்கு எதிரி என்றெல்லாம் சொல்கின்றனர். அதிலும் எஸ்.வி.சேகர், மக்கள் வெறுப்பை, தான் சாகும் சமயத்தில் சம்பாதிக்கணும் என்ற ஒற்றை நோக்கில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

    அண்ணாமலை அவர்களின் அனாலிஸிஸ் பற்றி சிறிய காணொளித் துணுக்கைப் பார்த்தேன். முடிந்தால் பகிர்கிறேன். அண்ணாமலை வெகு அபூர்வமாக வரும் தலைவர். சாதி அரசியலுக்கு அப்பாற்பட்டவராகத்தான் அவரைப் பார்க்க முடிகிறது. (ரஜினிகாந்த் இழந்த வாய்ப்பு)

    ஸ்டாலினுக்கு அண்ணாமலையின் வளர்ச்சி மட்டுமல்ல, அவரது அறிவு மாத்திரமல்ல, அவருக்கு இருக்கும் பவர் (அது மத்திய பாஜக தலைமையினால் வருவது) பொறாமையளிக்கிறது. அண்ணாமலை, திமுக செய்யும் ஊழல்களை expose செய்கிறார். ஒருவனுக்கு அளவிற்கு அதிகமாகச் சொத்து இருப்பதை அண்ணாமலை சொன்னால், லஞ்சம் வாங்கிக்கொள்ளும் ஊடகங்கள், அது வெறும் சொத்துக்கணக்கு என்று கூசாமல் திமுகவிற்கு ஜால்ரா தட்டுகின்றனர். பாரம்பர்ய விகடனை பாலசுப்ரமணியத்தின் பையன் ஸ்ரீநிவாசன் அழித்ததுபோல், தந்தி….என்று ஒவ்வொரு ஊடகங்களும் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்கின்றன. எடப்பாடி அவர்களுக்கு, அண்ணாமலை ஒரு threat.

    மக்கள் ஆதரவு வாக்காம மாறுமா என்பது மாத்திரம்தான் என் சந்தேகமாக இருக்கிறது, ஆனால் அண்ணாமலை அதைப்பற்றிச் சிறிதும் சந்தேகப்படவில்லை. அவர் சொல்கிறார், 55 சதத்திற்கு அதிகமானவர்கள் 40 வயதுக்குக் குறைவானவர்கள். அவர்கள் சோஷியல் மீடியாவின் மூலம் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்கின்றனர். அவர்களை காசு கொடுத்து ஆட்டுவிக்கும் ஊடகங்கள் மூலம் ஏமாற்றமுடியாது என்கிறார்.

    திமுகவின் இந்து எதிர்ப்பு, ஊழல் ஆட்சி, குடும்பத்திற்காக லட்சம் கோடிகள் அளவில் சொத்து சேர்ப்பது என்பதை வெறுக்கும் ஒவ்வொரு வாக்காளரும் அண்ணாமலைக்கே (நான், பாஜகவிற்கே என்று எழுதவில்லை) வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அண்ணாமலையை மாற்றவேண்டும் என்று கட்சியிலேயே பழம் தின்று கொட்டை போட்ட ‘வயதானவர்கள்’ ஆசைப்படுகின்றனர். அண்ணாமலையின் புகழைச் சகித்துக்கொள்ளாத பல அரசியல்வாதிகள் அவருக்கு எதிராகச் செயல்படுகின்றனர். (மோடிக்கு எதிராகச் செயல்பட்டதைப் போன்று). அவற்றையெல்லாம் மீறி அண்ணாமலை பெரிய அளவிற்கு வளருவார் என்று நம்புகிறேன். அண்ணாமலையை கழற்றிவிட்டால் (கவர்னர், ராஜ்யசபா எம்பி, மத்திய அமைச்சர் என்றெல்லாம் வெளியில் ஜிகினா வேலை செய்து), பாஜக தமிழகத்தில் எப்போதும்போல் 3 சதத்தைத் தாண்டாது.

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

  3. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    “அதிமுக பிரதமர் வேட்பாளர்..”

    ………………

    ……………..

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      பாஜகவை விட்டு விலகினால், அதிமுக இழந்த செல்வாக்கை மீட்கும் என்று எடப்பாடி நினைக்கிறார். சிறுபான்மையினரின் வாக்குகள் வந்துவிடும் என்று நம்புகிறார். அவருடைய ஜால்ராக்கள், ஜெ. 1 1/2 கோடித் தொண்டர்கள் என்ற நிலையை எய்தச் செய்ததை எடப்பாடியார் 2 கோடி என்று உயர்த்தினார் என்று சொல்கின்றனர்.

      அதிமுக தனித்து நிற்பதை நான் மிகவும் வரவேற்கிறேன். அது நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு எவ்வளவு வாக்குகள் பெற்றுத்தரப் போகிறது என்பதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அதிமுகவின், பாஜகவின் தனி பலம் தெரிந்தால்தான் தமிழகத்துக்கு நல்லது. திமுகவின் பலம் 22-25 சதம் என்பதை எல்லோரும் அறிவோம். தனித்து நின்றால் திமுக பப்படம் என்பதையும் அறிவோம். (இப்போது தேர்தல் வந்தால் இந்த சதவிகிதம் இன்னும் குறையும். ஆனால் மக்கள் திமுக மீதான வெறுப்பை எந்தக் கட்சியைச் சார்வதன் மூலம் காட்டுவார்கள் என்பதுதான் எனக்குப் புதிராக இருக்கிறது. பாஜக அதிமுக சேர்ந்து நின்றால் திமுக போல வாக்குச் சதவிகிதப் பொய்யைத்தான் நாம் கேட்டுக்கொள்ள முடியும், கூடவே சிறுபான்மையினரின் வாக்கு எங்களுக்கு பாஜகவால் கிடைக்கலை, நடுநிலை மக்களின் வாக்குகள் கிடைக்கலை என்ற ஓலத்தையும்)

  4. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    ஊடகங்கள் எவ்வாறெல்லாம் எழுதுகின்றன, திமுகவிற்காக அவர்கள் என்ன நிலைக்கும் இறங்கத் தயாராக இருக்கின்றார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. திமுகவை சந்தோஷப்படுத்திப் பணம் பெறுவது தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

    அண்ணாமலையை மோடி அமித்ஷா பார்க்க மறுத்துவிட்டார்கள். போய் நிர்மலாவைச் சந்தி என்று சொன்னார்கள். நிர்மலா சீதாராமன் கடுமையாகப் பேசினார். நள்ளிரவில் அமித்ஷாவைச் சந்தித்த அண்ணாமலை. ராஜினாமா செய்கிறாரா? அண்ணாமலையை ஒதுக்கிவிட்டு தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு. பாஜக மேலிடம் அதிமுகவை மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டும் போனை எடுக்காத எடப்பாடி… என்று தோன்றினபடியெல்லாம் செய்திகள் வெளியிடுகின்றன (தினமலர் மாத்திரமே விதிவிலக்கு).

    இதையெல்லாம் பார்க்கும்போது, அண்ணாமலை மேலும் மேலும் உயர்ந்து வருகிறார் என்றே எனக்குத் தோன்றுகிறது. It will be very difficult to be in his shoes. அவர் ஒருவேளை சாதித்துவிட்டால், அவர் காலை நக்கவும் இந்த ஊடகங்கள் தயங்காது, தந்தி உட்பட.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.