………………………………..

……………………………………

………………………………………
கேரளாவில் ஓணம் கொண்டாட்டத்தின் அங்கமாக நடைபெற்ற
மெகா திருவாதிரை நடனம், உலக சாதனைகளில் ஒன்றாக இடம்
பிடித்திருக்கிறது.
கேரளத்தின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று திருவாதிரை நடனம்.
ஓணம் பண்டிகையின் அங்கமாக நடைபெறும் இந்த நடன விழாவில்
திரளான பெண்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி பாடலுடன் ஆடலாய்
கவனம் ஈர்ப்பார்கள்.
அப்படி திருச்சூரில் பெண்களுக்கான குடும்பஸ்ரீ அமைப்பினர்
ஒருங்கிணைத்த – சுமார் 10 ஆயிரம் பெண்களை
இலக்காகக் கொண்டு திட்டமிடப்பட்ட திருவாதிரை நடனவிழாவில்,
7 ஆயிரத்துக்கும் மேலான பெண்கள் திரண்டதில் உலக சாதனை
படைத்தது. நிறைவாக 7,027 பெண்கள் பங்கேற்றனர்.
பெண்கள் திரளாக பங்கேற்கும் உலகின் மிகப்பெரும் நடன விழாவாக,
இந்த நிகழ்வு லிம்கா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், டேலண்ட் வேர்ல்ட்
ரெக்கார்ட்ஸ் ஆகிய சாதனைகளில் இடம் பெற்றது.
திருச்சூர் குட்டநெல்லூர் அரசுக் கல்லூரி மைதானத்தில், மாவட்ட
அளவிலான ஓணம் கொண்டாட்டமாக, கேரள சுற்றுலா துறையுடன்
இணைந்து மாவட்ட நிர்வாகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.
பாரம்பரிய உடை அணிந்து, பின்னணியில் பாடல் ஒலிக்க,
7000+ சேச்சிகள் ஒரே இடத்தில் கூடி திருவாதிரை நடனமாடும் இந்த
காட்சியை ட்ரோன்கள் உதவியுடன் படம் பிடித்தனர்.
காணொலி – ( முழு திரையில் பாருங்கள்… !!!)
………………………
.
………………………………………………
.
…………………………………………………..



நிஜமான சாமியாரா இல்லை ….