……………………………………..

………………………………………
“நெனச்சது ஒண்ணு… நடந்தது ஒண்ணு ” என்று கிடந்து தவிக்கப் போகிறார் எடப்பாடியார் என்று கடுமையாகச் சாடுகிறார் துக்ளக் ரமேஷ்.
எடப்பாடியாரின் அதிமுக, பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டதன் பின்னணியை விவரமாகப் பேசுகிறார் இந்த காணொலியில்….
ஆவேசமான அட்டாக் ……!!!
………………………………………



அதிமுக, பாஜக சேர்ந்து இருந்தால், திமுகவிற்கான மாற்றாக மக்களுக்குத் தெரிந்திருக்கும், அதனால் திமுகவின் மீது கடுமையான அதிருப்தியில் இருக்கும் மக்கள் அந்தக் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். தற்போதைய பிரச்சனை, இரண்டு தலைவர்கள் இருப்பதும் (எடப்பாடி, அண்ணாமலை), அதில் எடப்பாடி, அதிமுகவின் பிரிந்த தலைவர்களைச் சேர்த்துக்கொள்ளமாட்டேன் என்று (ஓபிஎஸ், தினகரன்) அடம்பிடிப்பதும்தான். ஓபிஎஸ்/தினகரன் இருவரும் அதிமுகவிற்கான முக்குலத்தோர்களின் வாக்குகளைப் பிரிக்கிறார்கள். இது அதிமுகவிற்கான பலவீனம். எடப்பாடி அவர்களும் இன்னும் பெரிய தலைவராக ஆகவில்லை. அண்ணாமலையின் நோக்கம் பாஜகவை வளர்ப்பது மாத்திரம்தான். (நான் நம்புகிறேன், அவர் முதலமைச்சர் ஆகணும் என்ற ஒற்றை நோக்கிலோ இல்லை தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற நோக்கிலோ இவற்றைச் செய்யவில்லை). அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து கொடுக்கும் பிச்சையை வாங்கிக்கொண்டால், அணி வெற்றிபெறும், ஆனால் தமிழகத்தில் பாஜக வளரவே வளராது..
கடந்த இரண்டு வருடங்களாக அண்ணாமலை மாத்திரம்தான் (சீமானை நான் சேர்த்துக்கொள்ளவில்லை, அவருடைய கருத்தில் அவர் நிலையாக இல்லை) எதிர்கட்சித் தலைவராகச் செயல்பட்டிருக்கிறார். அதுபோல ஊடகங்களில் சவுக்கு சங்கர் மாத்திரமே (தினமலரைத் தவிர்த்து) ஓரளவு நியாயமாகச் செயல்பட்டிருக்கிறார்.
இந்தப் பின்னணியில், மோடி/அமித்ஷா இருவரின் ஆதரவு முழுமையாக இருக்குமானால், அண்ணாமலையின் வழியில் பாஜகவை தமிழகத்தில் வளர்க்க முடியும். அதற்கு முதலில் அண்ணாமலையின் செல்வாக்கு தெரியவேண்டும். அதனால் பாஜக தனித்துப் போட்டியிடுவதுதான் நல்லது. ஏற்கனவே தமிழகத்திலிருந்து பாஜகவிற்கு எம்பிக்களே கிடையாது. அதனால் பாஜக கவலைகொள்ள வேண்டியதில்லை. தமிழக காங்கிரஸ் போல, ஒட்டுண்ணியாக இருந்து இரண்டு சீட் வெற்றி பெறணும், தான் எம்பி ஆகிவிட்டால் அமைச்சர்தான் என்று சுயநலத்துடன் இருப்பவர்களைப் புறம் தள்ளி (நியாயமா பாஜக, இல கணேசன் போன்றவர்களைக் கடாசி இருக்கவேண்டும்) அண்ணாமலை வழிதான் செல்லணும்.
துக்ளக் ரமேஷின் பேட்டிகளைப் பார்த்துக்கொண்டுதானிருக்கிறேன். அவர் அனேகமாக சரியாகத்தான் சொல்கிறார். என்னுடைய அனுமானம் சரியாக இருக்குமானால், அண்ணாமலை வளரும் தலைவர், எடப்பாடியின் ஆதரவுத்தளம் போகப்போகச் சுருங்கும். திமுக பெரும்பாலும் வெற்றிபெற்றாலும், தமிழக மக்களுக்கு சட்டமன்றத் தேர்தலுக்கு என்ன செய்யவேண்டும் என்ற தெளிவு கிடைக்கும். எடப்பாடிக்கும், ஜெ. காலம் போல, குறைந்த அளவு சிறுபான்மையினர் கூடத் தங்களை (அதிமுக) ஆதரிக்கவில்லை என்பது புரியும். (ஒருவர் சொல்கிறார், திமுக கூட்டணி 28 சதம், அதிமுக கூட்டணி 23 சதம், அண்ணாமலை/சீமான் சேர்ந்து 33 சதம்-இதில் அண்ணாமலை இன்னும் வளர்ந்துகொண்டு போகிறார், மத்தவங்கள்லாம் (நடிகர் விஜய்-10 சதம் என்கிறார் 🙂 ) வட்டச் செயலாளர் வண்டுமுருகன் ரேஞ்ச்தான் என்று. https://www.youtube.com/watch?v=USBbwaFp5fg
எனக்கென்னவோ அதிமுகவின் இரண்டாம் கட்ட (எல்லாருமே இரண்டாம் கட்ட என்று சொல்லிவிடாதீர்கள்) தலைவர்களில் சிலர் பாஜக ஆதரவு நிலை எடுப்பார்கள் என்று தோன்றுகிறது. பாராளுமன்றத் தேர்தலில், 33, 25, 20, 8 சதம் என்ற மாதிரி நிலைமை வந்து திமுக வெற்றி பெற்றால், அடுத்தது அண்ணாமலைதான் 2026ல் (அதுவரை பாஜக தலைவர்கள் கட்சியை வளர்க்கணும் என்று நினைத்து தமிழக பழம் பெருச்சாளிகளை, முரளி மனோகர், அத்வானி போன்றவர்களை ஒதுக்கியதுபோல ஒதுக்கினால்) என்று தோன்றுகிறது. பாராளுமன்றத் தேர்தலின் வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்ததுதான் இந்த நிலைமை.