நம்மை பயமுறுத்தும் – முதுமை – துவங்குவது – 27 வயதில் என்றால் நம்புவீர்களா ….???

…………………………………..

………………………………….

நமது பொதுவான கருத்து, முதுமை என்பது 50 வயதுக்கு மேல்,
லேசாகத் துவங்கி, 60 வயதுக்கு மேல் உணரத் துவங்குவோம்
என்பது தான்.

இங்கே சொல்லப்போகும் சில தகவல்கள் பலருக்கு
வியப்பளிக்கலாம்.

சிலரிடம் வெளிப்படையாகவே காண முடிகிறது….

இளம் வயதிலேயே தலைமுடி நரைப்பது,
தோல் சுருக்கம் ஏற்படுவது,
முதுமை தோற்றம் எட்டிப்பார்ப்பது என
இந்த காலத்து இளைஞர்கள்,
பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.
இவை அனைத்திற்கும், அவர்களது தவறான உணவு பழக்கம்
மற்றும் வாழ்க்கை முறை முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் இயற்கையாக நமது உடலில் முதுமை எட்டிப்பார்ப்பது
எப்போது ….?

நாம் நினைப்பது போல், உடலின் அனைத்துப் பகுதிகளும்
50-60 வயதில், ஒரே சமயத்தில் முதுமை அடைந்து விடுவதில்லை.

முதுமைக்கான அறிகுறிகள் 27 வயது முதலே தொடங்குவதாக
வெர்ஜினியா பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள்.

18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட 2000 ஆண், பெண்களை கொண்டு
7 ஆண்டுகளாக நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது இந்த உண்மை.

ஏன் அப்படி …?
27 வயதில் உடலில் பாதிக்கப்படும் செல்களின் எண்ணிக்கை
இறக்கும் செல்களை விட குறைவாக இருப்பதே
இதற்கு காரணம் என்கிறார்கள்.

பொதுவாக நாம் நினைப்பது போல்,
உடல் முழுவதும் ஒரே சமயத்தில் முதுமை அடைவதில்லை.
நமது உடல் பாகங்கள் ஒவ்வொன்றும் எப்போது முதுமை அடையத்
துவங்குகிறது. என்பதை சில ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.
அவற்றில் சில –

இதயம் மற்றும் இரத்தக்குழாய்கள் 40 வயது முதலே மூப்படைய
துவங்குகிறது.

மூளை 20 வயதிலேயே மூப்படைய துவங்குகிறது.
நுரையீரல்-20 வயதிலேயே மூப்படைய துவங்குகிறது.

பொதுவாக நமது சிறுநீரகங்கள் 50 வயதை யொட்டி மூப்படைய
துவங்குகிறது, நமது கல்லீரல் 70 வயதில் மூப்படைய துவங்குகிறது.

ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை வழங்கும் வால்நட் பருப்பை
போன்ற வடிவிலுள்ள மிகச்சிறிய சுரப்பியான புரோஸ்டேட் சுரப்பி
50 வயதில் மூப்படைய துவங்குகிறது.

நமது உடலிலுள்ள எலும்புகள் 35 வயதிலிருந்தே தங்களது பலத்தை
இழக்கத் தொடங்குகின்றன….. நமது சதைகளும், எலும்பு இணைப்புகளும்
30 வயதில் மூப்படைய தொடங்குகின்றன.

நமது ஆரோக்கியமான கால்கள் தங்களது பலத்தை இழக்கத் துவங்குவது
நமது 40 -வது வயதிலிருந்து.

மனிதனின் ஆரோக்கியமான செரிமான சக்தி அதன் பலத்தை
இழக்கத் துவங்குவது – 50 வயதில்.

தோல் தன்னுடைய 20 வயதின் தொடக்கத்திலேயே மூப்படைய
துவங்குகிறது.

சரி இந்த பாதிப்புகளை தடுக்க வழி உண்டா ….?

உடல் பாகங்களிலுள்ள செல்களின் வேகமான அழிவும்,
அதனால் உடலினுள் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளும் தான்
வயோதிகத்தின் அறிகுறிகள்.

இதனை குடலில் தோன்றும் –
ஆரோக்கியமான நுண்ணுயிரிகளால் தடுக்க முடியும்.

அதற்கு பழங்களும், காய்கறிகளும் நிறைந்த உணவுகளால்
மட்டுமே முடியும். அதன் மூலம் முதுமை பற்றி கவலைப்படாமல்
ஆரோக்கியமாக வாழலாம் என்கிறார்கள் அயர்லாந்து கார்க்
பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

இளம் வயதிலேயே முதுமையான தோற்றத்தை உண்டாக்கும்
சில உணவுகளைப் பற்றி தெரிந்து கொண்டுஅவற்றை தவிர்ப்பதன் மூலம், செயற்கையாக உருவாகும் முதுமை தோற்றத்தை தவிர்க்கலாம்.

குளிர்பானங்களை தொடர்ந்து குடித்தால் உடலில் உள்ள நீர் வற்றி,
சருமம் பாதிக்கப்படும். இதனால் விரைவில் வயதான தோற்றம் ஏற்படும்.

பாஸ்ட் புட், பீட்சா, பர்க்கர் போன்ற துரித உணவுகளை சாப்பிட்டால்,
கொழுப்பு அதிகமாகி, ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனாலும்
வயதான தோற்றம், வெகுவிரைவிலேயே ஏற்படும்.

இறைச்சி உணவுகளை அதிக அளவில் உட்கொள்வதால் உடலில்
நச்சுகள் அதிகரித்து கொழுப்பு அதிகரிக்கிறது. இதனால் வைட்டமின்
டி சத்து குறைந்து முதுமை நிலையை, இளமையிலேயே அடைய
காரணமாகிறது. உப்பு அதிகமாக சேர்த்துக்கொண்டாலும்
அது ஆபத்து தான். உப்பு அதிக ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.
இதன்காரணமாக, தோலின் இறுக்கமான தன்மை சுருங்கி
வயதானவர்கள் போன்ற தோற்றம் விரைவில் ஏற்படும்.

மது அருந்துபவர்களுக்கு அதிகமாக தண்ணீர் இழப்பு ஏற்படும்.
இதனால், விரைவிலேயே தோல் பாதிக்கப்பட்டு, வயதானவர்கள்
போன்ற தோற்றத்தை பெறுவார்கள். அதனையும் தவிர்க்க வேண்டும்
என்கிறார்கள்.

போதுமா… இளமையில் முதுமை …!!!

.
……………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to நம்மை பயமுறுத்தும் – முதுமை – துவங்குவது – 27 வயதில் என்றால் நம்புவீர்களா ….???

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கா.மை. சார்… இந்த அனாலிஸிஸ் எல்லாமே தவறு. முதுமை, நம் மனதில்தான் துவங்குகிறது. என் அனுபவத்தில் சொல்கிறேன்.

    நான் சந்தித்தவர்களில் சிலர், எந்தக் காரணம் கொண்டும் வயதானது போலவே இருக்கமாட்டார்கள், அவர்கள் தங்களைவிட இளையவர்களிடம் வெகு சகஜமாகப் பழகுவார்கள் (இளையவர்கள் என்றால் 40 வயது குறைவானவர்கள்), மனதை இளமையாகவே வைத்துக்கொள்வார்கள். நான் பெரியவன், அனுபவஸ்தன் என்ற எண்ணமே அவர்களிடம் இருக்காது. இதற்கு மாறாக பலர், 4 வயது அதிகமாக இருந்தாலே, ‘நான் உன்னைவிடப் பெரியவன்’, ‘உன் வயது என் அனுபவம்’ என்று எதற்கெடுத்தாலும் மனதில் தாங்கள் பெரியவர்கள் என்பதுபோலப் பேசுவார்கள். அவர்கள் இளமையிலேயே முதுமையானவர்கள்.

    மனதை இளமையாக வைத்துக்கொண்டால் (நான் அப்படி வைத்துக்கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்) முதுமை நம் அருகிலேயே வராது. அதற்கு ஏற்றார்ப்போல் நம் தோற்றமும் மாறும்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன் ,

      மனதை பொறுத்த வரையில் நீங்கள் சொல்வது உண்மை.

      முதியவர்களும் கூட மனதால் இளையவராக இருக்கலாம்.

      ஆனால், உடலை, உடலின் பாகங்களை பொறுத்த வரை
      இது நடக்காது.

      பழுதடைந்த இதயம், கண்கள், நுரையீரல், கிட்னி,
      ஸ்பைனல் கார்டு போன்றவற்றை வைத்துகொண்டு –
      நானும் இளமை தான் என்று எவராலும்
      துள்ளி ஓட முடியாது.; அங்கே நிஜம் தான் பேசும்.

      நீங்களும் இதுபோல் பாதிக்கப்பட்டவர்களை
      பார்த்திருப்பீர்கள்..என் கருத்தை ஒப்புக்கொள்வீர்கள்
      என்றே நினைக்கிறேன்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.