……………………………………………….

………………………………………………..
” தைரியம் இருந்தால், மோடி, அமீத் ஷாவை எதிர்த்து –
எடப்பாடியாரை ஒரு வார்த்தை பேசச்சொல்லுங்கள் பார்க்கலாம்.
அண்ணாமலை எகிறி அடிப்பார்…..”
” வெத்து வேட்டு, செல்லாத நோட்டு- எடப்பாடியார் “-
பிச்சு உதறுகிறார் ரவீந்திரன் துரைசாமி.
ஒரு சுவாரஸ்யமான உரையாடல்.
ரவீந்திரன் துரைசாமி – ஒரு தரப்பாக பேசுவது போல்
தெரிந்தாலும் –
நிறைய உண்மைகளும் இருக்கின்றன அவரது வாதத்தில் ….
காணொலி கீழே –
………………………
.
……………………………………………………



இந்தக் காணொளியை நான் கேட்டேன். நிறைய ஊகங்கள்தாம் இருக்கின்றன. ரவீந்திரன் நியாயமான விமர்சனம்/கருத்துகள் வைக்கவில்லை.
எடப்பாடி அவர்கள் அரசியல் சாமர்த்தியத்தோடு (தற்போது கட்சிக்கும் யாருமே இதை எதிர்க்காதபடி) இந்த முடிவை எட்டியிருக்கிறார் (வேறு வழியில்லாமல்).
1. அண்ணாமலை வளர்கிறார். அவர் ஆட்சிக் கட்டிலில் இருந்ததில்லை. ஊழலைப் பற்றி நிறையப் பேச முடியும். அவரது வாதங்களும், எதைப் பற்றியும் விவரமாகப் பேசுவதும், தைரியமாக அணுகுவதும் அவரது புகழை வளர்க்கிறது. அவருக்குக் கொடுத்த பொறுப்பை உணர்ந்து அதற்கு ஏற்றபடி கட்சியை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல முயன்றிருக்கிறார் (இது கட்சிக்குள்ளேயே பலருக்கு வயிற்றெரிச்சலை உண்டாக்கியிருந்தாலும், மோடி/அமித்ஷா சொன்னதை அவர் மேற்கொண்டிருக்கிறார்). சில நேரங்களில் அவர் பட் பட் என்று பேசுவது, அவரது இமேஜை உயர்த்தினாலும், கட்சிக்குச் சிக்கல் வந்திருக்கிறது. ஆனால் என்னால் அண்ணாமலையின் integrity யை சந்தேகப்பட முடியவில்லை.
2. அதிமுகவிற்கு உள்ள வாக்கு வங்கியில் (100 என்று வைத்துக்கொண்டால்), 30 சதமாவது, திமுக வெறுப்பு வாக்குகள். அதிமுகவின் வாக்கு வங்கி இப்போது 80,15,5 என்ற விகிதத்தில் பிரிந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். தற்போதைய நிலையில், திமுக எதிர்ப்பு வாக்குகள் அண்ணாமலைக்குத்தான் போகும் என்று தோன்றுகிறது. எடப்பாடிக்கு 20-25 சதம் வாக்குகள் கிடைக்கும், பாஜகவிற்கு 10 சதம் வாக்குகளும், திமுக கூட்டணிக்கு 35-40 சதம் வாக்குகளும் இருக்கும். அதனால் பாராளுமன்றத் தேர்தலில் திமுகவே வெற்றிபெறும் (தற்போதைய நிலையில்). பாராளுமன்றத் தேர்தலில் மோடி பிரதமரா என்ற கேள்வி இருப்பதால், இந்த 10 சதம், 15 சதமாக ஆனாலும் நான் ஆச்சர்யப்படமாட்டேன். But DMK won’t get that kind of lead this time like last 2019..
3. எடப்பாடியின் கொங்குப் பகுதியில் அண்ணாமலை வளர்கிறார். அண்ணாமலைக்குப் பதில் யாராக இருந்தாலும், பாஜக இன்னொரு காங்கிரஸ் கட்சி போல தமிழகத்தில் ஆகியிருக்கும். ஆனால் அண்ணாமலை பாஜகவின் வாக்கு வங்கியை வளர்த்திருக்கிறார் (இது என் அனுமானம். இப்படி இல்லை, பாஜக 3 சதத்திற்கு மேல் வளரவில்லை என்று எஸ்விசேகர், ராமசுப்ரமணி போன்றவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் மக்களின் எழுச்சியை அண்ணாமலை நடைப்பயணத்தில் காணமுடிகிறது, அதிலும் பெண்கள், இளையவர்கள்)
4. எடப்பாடியினால் பாஜக எதிர்ப்பு நிலை எடுக்க முடியாது. அவர் ‘ஜெ’ அல்ல. (எம்ஜிஆரே ‘ஜெ’ அளவு உயர்ந்ததில்லை). அதனால் அவரை நம்பி, சிறுபான்மையினரின் வாக்குகள் போகாது. ரவீந்திரன் சொல்வதைப் போல நாம் தமிழர் வளர்ந்துவிட்டதாக நான் எண்ணவே இல்லை. அது 7 சதம் வாக்குகள்தாம் வாங்கும் (தனித்து நின்றால்).
நான் எடப்பாடி அவர்கள் இடத்தில் இருந்திருந்தால், இப்போது இந்த முடிவு எடுத்திருக்க மாட்டேன் (unless I had an assurance from Congress that it would come to ADMK front. Even then, lot of time is there). நான் அண்ணாமலையாக இருந்திருந்தால் இந்த நிலைமைக்கும் கொண்டுசென்றிருக்க மாட்டேன். அண்ணாமலை, அதிமுகவின் ஜெ மற்றும் அண்ணாவைப் பற்றிச் சொன்னது தவறு (Facts ஆக இருந்தாலும் சொல்லக்கூடாது) I feel, an army leader can’t fight two enemies at a time, as he is only an emerging leader. Also one can’t hurt the sentiments of a party’s cadre, thereby ending the opportunity of the cadre’s to accept Annamalai as a leader in future.