……………………………………………….

……………………………………………….
குமுறிக்கொண்டிருந்தது வெடித்து விட்டது …
எடப்பாடியாரின் அதிமுக – பாஜக-வுடன் உறவை முறித்துக்
கொண்டு விட்டது….
இனி என்னவெல்லாம் ஆகும் …?
- உடனே அல்ல …. இன்னும் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு,
தங்கள் ஆதரவாளர்களை திரட்டி, ஒருங்கிணைத்துக் கொண்ட
பிறகு – இரண்டு ” மணி ” களும், வெளியே வந்து,
எடப்பாடியார் ஒரு சர்வாதிகாரி, தன் இஷ்டம் போல் எதையும்
தீர்மானித்துக் கொள்கிறார். அவர் பின்னால் போனால்,
கட்சி காணாமல் போய் விடும் என்று கூறி அதிமுக-வின்
4-வது பிரிவை ( முதல் மூன்று – எடப்பாடி, ஓபிஎஸ், டிடிவி)
வெற்றிகரமாக் கொடிதூக்கி உயர்த்திப் பிடித்து துவக்கி வைப்பார்கள்…. - தேர்தலில் அவர்கள் பாஜக-வுடன் கூட்டணி வைப்பார்கள் என்று
சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. - திமுக தனது பழைய கூட்டணி கட்சிகளுடன் சீட்டைக்
குறைத்தால், அவை முறைத்துக் கொண்டு வெளியேற
எடப்பாடியார் வலைவீசி காத்திருப்பார்
– - விசிக, மதிமுக அப்படிச் செல்ல வாய்ப்புண்டு. கம்யூனிஸ்டுகளும் கூட.
- தேமுதிக, தமாகா, பாமக – அநேகமாக பாஜகவுடன்
போக வாய்ப்புண்டு. ஓபிஎஸ், டிடிவி – உறுதியாக
பாஜகவுடன் தான்.
இந்த நிலை ஏற்படுமானால் – திமுக கூட்டணி 39-க்கும்
39 தொகுதிகளிலும் அவசியம் வெற்றிக்கொடி நாட்டும்….😊😊😊
பாஜக கூட்டணியும் சரி, எடப்பாடியார் கூட்டணியும்
சரி – பூஜ்ஜியம் தான்.😢😢
இந்த நிலையைத் தவிர்க்க –
நிஜமாகவே இன்னமும் 2 சூழ்நிலைகளால் சாத்தியப்படும்…..
ஒன்று – ஆசை காட்டியோ, பணம் கொடுத்தோ, பயமுறுத்தியோ –
திமுக-வை இரண்டாகப் பிளப்பதில் பாஜக வெற்றி பெற்றால் …..
இரண்டு – காங்கிரசை திமுக கூட்டணியை விட்டு வெளியேறி
தங்களுடன் சேர்க்கும் முயற்சியில் எடப்பாடியார் வெற்றி பெற்றால்….
( பாஜக, திமுகவை பிளப்பதில் வெற்றி பெற்றால், காங்கிரசை
தங்களுடன் இழுப்பதில், எடப்படியார் மிகச்சுலபமாக
வெற்றி பெற்று விடுவார்….)
இதெல்லாம் ஜஸ்ட் இன்றைய தேதிக்கான அனுமானங்கள் தான்….
- தேர்தலுக்கு இன்னமும் 7 மாதங்கள் இருக்கையில் –
பாஜக கையில் பலம் வாய்ந்த இரண்டு ஆயுதங்கள் இருக்கையில் –
என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்….😊😊😊
.
…………………………………………………..



எது எப்படி இருந்தாலும், பாஜகவின் வாக்கு வலிமை தெரிந்துவிடும். அது முக்கியமா இல்லை பாஜக விற்கு எம்.பி.க்கள் கிடைப்பது முக்கியமா என்று என்னைக் கேட்டால், வாக்கு வலிமைதான் முக்கியம். இது சட்டமன்றத் தேர்தல் கூட்டணியில் எதிரொலிக்கும். அப்படி இல்லை என்றால், பாஜக+அதிமுக சில பல எம்.பிக்கள் பெற்றாலும் அதனால் தமிழக பாஜக என்ற கட்சிக்கு உபயோகம் இல்லை. பாஜக கூட்டணி இல்லை என்றால் இன்னும் சில பல எம்.பிக்கள் கிடைத்திருப்பார்கள் என்று அதிமுகவும், தனித்துப் போட்டியிட்டிருந்தால் இதே அளவோ இல்லை இதற்குச் சிறிது அதிகமாகவோ எம்பிக்கள் கிடைத்திருக்கும், அல்லது, அதிமுக தொண்டர்கள் வாக்களிக்கவில்லை என்ற லாவணிதான் நாம் கேட்க முடியும்.
காங்கிரஸ் ஒருவேளை திமுகவை விட்டு விலகி அதிமுகவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தால், அப்போது பாஜக தனித்து நிற்பதுதான் அந்தக் கட்சிக்கு நல்லது.