…………………………………………..

……………………………………………
டெல்லியில், ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ள
இடத்தில் வைப்பதற்காக தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில்,
முழுக்க முழுக்க வெண்கலத்திலால் ஆன பிரமாண்டமான நடராஜர் சிலை தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
ஜி 20 கூட்டமைப்பில் இந்தியா அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில்,
கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான்,
மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, தென்கொரியா,
துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை
அங்கம் வகிக்கின்றன.
ஜி20 மாநாட்டின் அரங்கில் வைப்பதற்காக பிரமாண்டமான நடராஜர் சிலை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில்
தங்கம், வெள்ளி, லெட், காப்பர், டின், பாதரசம், இரும்பு, ஜிங் உள்ளிட்ட
எட்டு பொருட்களின் கலவையில் வெண்கலத்தாலான 28 அடி உயரம்
கொண்ட பிரம்மாண்டமான சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 19 டன் எடை கொண்ட இந்த சிலை தான் உலகிலேயே
மிகப்பெரிய நடராஜர் சிலை என கூறப்படுகிறது. ரூ.10 கோடி மதிப்பிலான
இந்த சிலையை சுவாமிமலையைச் சேர்ந்த புகழ்பெற்ற தேவசேனாதிபதி ஸ்தபதியின் மகன்கள் ஸ்ரீகண்ட ஸ்தபதி, ராதாகிருஷ்ண ஸ்தபதி மற்றும்
சுவாமிநாத ஸ்தபதி ஆகியோர் கலை நயத்துடன் வடிவமைத்துள்ளனர்.
அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில் இந்த சிலை டெல்லிக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜி-220 மாநாடு நடைபெற உள்ள டெல்லி
பிரகதி மைதானத்தில் இந்த சிலை வைக்கப்பட உள்ளது. இதுபற்றி
ஸ்ரீகண்டஸ்தபதி, ”இந்த சிலையை சிதம்பரம் கோனரிராஜபுரம் ஆகிய
ஊர்களில் உள்ள நடராஜர் மற்றும் பிற சோழர் கால நடராஜர் சிலைகளை அடிப்படையாக வைத்து வடிவமைத்துள்ளோம்” என்றார்.
இந்த சிலையை வடிவமைத்து கொடுக்க மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்திடம் இருந்து கடந்த 2023 பிப்ரவரி மாதம் ஆர்டர் வந்தது.
இந்த பணியை முடிக்க 6 மாதங்கள் ஆகியுள்ளது. சிலை டெல்லிக்கு
போய்ச் சேர்ந்ததும், நாங்களும் அங்கு சென்று இறுதி கட்டமாக சில பணிகளை முடிக்க உள்ளோம்” என்று கூறுகிறார்.
………………………………………………………………………………………
.
……………………………………………………………….…..



நம் நாட்டு கலாச்சாரத்தை வரலாற்றை முன்னிலைப்படுத்துவது பாராட்டத்தக்கது.
நம் உலோகச் சிற்பங்களைப் பற்றி நிறைய எழுதலாம். கோவில் திருமேனிகள் அவ்வளவு அழகாகச் செய்யப்பட்டுள்ளன. அந்தக் கலைத்திறமை வழி வழியாக வந்திருக்கிறது.
பொதுவா, கோவிலுக்கான திருமேனிகள் செய்யும்போது, இத்தனை கிலோவில் அமையும் என்று சரியாகச் சொல்ல முடியாது. 30 கிலோ என்று நினைப்பது 40 கிலோவாகிவிடும். இதனை, ‘அமைவது’ என்பார்கள். நடராஜர் திருமேனி 30 கிலோவில் செய்துதாருங்கள் என்று சொன்னால், கிலோவிற்கு இத்தனை என்று பேசிக்கொண்டு, எப்படி வருகிறதோ அதற்கேற்றவாறு பணம் பெற்றுக்கொள்வார்கள். அந்த அந்தக் கோவிலுக்கு இப்படி அமைகிறது என்பார்கள்.
Great news! Very talented people who have sculpted this