………………………………..

………………………………
சொத்துக்குவிப்பு வழக்கில் – அமைச்சர்கள் கீழமை நீதிமன்றத்தால்,
முறை தவறி விடுவிக்கப்பட்ட தீர்ப்பை பார்த்த பிறகும், நான் கண்களை மூடிக்கொண்டிருந்தால் கடமை தவறி விடுவேன் என்று சென்னை
உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதால் தாமாக முன் வந்து
இந்த விசாரணையை மேற்கொண்டிருப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்….
2006 இருந்து 2011 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற திமுக ஆட்சி காலத்தில், அமைச்சர்களாக இருந்த தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீது,
- வருமானத்திற்கு எதிராக சொத்து சேர்த்ததாக 2012 -ஆம் ஆண்டு வழக்கு
பதிவு செய்யப்பட்டது. அப்போதே, இவ்வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க
வேண்டும் என்று அவர்கள் தரப்பிலும், அவர்களது குடும்பத்தினர் தரப்பிலும் எதிர்வழக்கு தொடுக்கப்பட்டது.
கிடப்பில் கிடந்த இந்த வழக்குகள், 2021- ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு
வந்த பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வேண்டுகோளை
ஏற்று, கீழமை நீதிமன்றம்,
அவர்களையும் அவர்களது குடும்பத்தினர்களையும் விடுதலை செய்தது.
முதலில் 2012-ல், அவர்கள் மீது வழக்கு பதிந்த அதே லஞ்சஊழல்
ஒழிப்பு பிரிவு, ஆட்சி மாறியதும், அவர்கள் விடுதலை செய்யப்பட்டதை,
எதிர்த்து, அப்பீல் செய்வதை தவிர்த்து விட்டது. எனவே,
குற்றம் சாட்டப்பட்டவர்கள், முற்றிலுமாக விடுதலை பெற்று –
தொடர்ந்து, சுகமாக மந்திரிகளாக வலம் வந்தனர்.
சாதாரணமாக, அரசு வழக்குகளில், கீழமை நீதிமன்றத்தில்
அரசுக்கு எதிரான தீர்ப்புகள் வந்தால், ஆட்டோமேடிக்’காக,
அரசு, அடுத்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யும்…. இது தான்
நடைமுறை.
ஆனால், லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையால் இந்த வழக்குகளில்,
மேல்முறையீடு செய்யப்படாத நிலையில், சென்னை உயர்நீதிமன்ற
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள், இவ்வழக்கினை தாமாக
முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார்.
எம்.பி, எம்.எல்.ஏ.க்களின் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி என்ற வகையில்
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னதாக பொன்முடி வழக்கை தாமாக
முன்வந்து விசாரித்திருந்தார்.
அப்படி தற்போது அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும்
கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வழக்கையும் விசாரணைக்கு எடுத்து இருக்கின்றார்.
இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது சொத்துக்குவிப்பு
வழக்கில் இருந்து அமைச்சர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி தெரிவித்தார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு,
வழக்குகள் விசாரணை தொடங்கிய போது,
தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், இப்படி தாமாக முன்வந்து விசாரணை நடத்துவது தவறான முன்னுதாரணமாகி விடும். லஞ்ச ஒழிப்பு போலீசார் இதன் மூலம் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று வாதிட்டார்.
( லஞ்ச ஒழிப்பு போலீசார் இதன் மூலம் அதிர்ச்சி ……..👌👌👌 )
இதற்கு பதில் அளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடே சன் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தவறு நடக்கும்போது கண்ணை முடிக்கொண்டு இருக்க முடியுமா? ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிபதி அளித்த தீர்ப்பை படித்து விட்டு 3 நாட்கள் நான் தூங்கவில்லை. அமைச்சர்கள் விடுவிக்க கோரி மனு அளித்தபோது முதலில் எதிர்ப்பு தெரிவித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை அதிகாரி பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்புக்கு ஒரு வடிவத்தை வைத்துக்கொண்டு தேதியை மட்டும் மாற்றி தீர்ப்பு கூறியது போல தெரிகிறது. யார் அதிகாரத்துக்கு வந்தாலும் வழக்கை நீர்த்துப் போகச் செய்கிறார்கள்.
சிறப்பு நீதிமன்றங்களில் வழக்குகள் நடத்தப்படும் விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதாலேயே தாமாக முன் வந்து விசாரணை நடத்தப்பட்டது.
நீதிமன்றம் என்பது கட்சிக்கோ, அரசுக்கோ உரித்தானது அல்ல. குப்பனுக்கும், சுப்பனுக்கும் உரித்தானது. அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் ஒரே மாதிரியாக உள்ளன. இதனை பார்த்ததும் கண்ணை மூடிக்கொண்டிருந்தால் கடமையில் இருந்து தவறியது போல் ஆகி விடும். எனவே இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரும் 2 அமைச்சர்களும் உரிய பதில் அளிக்க உத்தரவிடுகிறேன்.
– வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு, பதிலளிக்க மட்டுமே உத்தரவிடப்படுகிறது என்றும் எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை
என்றும் தெரிவித்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,
ஏற்கெனவே அமைச்சர் பொன்முடி மீதான வருமானத்திற்கு அதிகமாக
சொத்து சேர்த்த வழக்கை மறுவிசாரணைக்கு இதேபோல இந்த நீதிமன்றம்
எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக கீழமை நீதிமன்றம் விசாரித்து வழங்கும் குற்றவியல்
சம்பந்தப்பட்ட வழக்குகளில், தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டால்தான், அதன் அடிப்படையில் அவ்வழக்கு
மறுவிசாரணைக்கு தாக்கல் செய்யப்படும்.ஆனால்,
பொன்முடி சம்பந்தப்பட்ட வழக்கில் நீதிமன்றங்களில் வழக்கு
மாற்றப்பட்டதில் முறைகேடு இருக்கின்றது என்று கூறப்பட்டு, அதன் அடிப்படையில்தான் மீண்டும் வழக்கானது விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
….
..
………………………………………………………………………………………………………………………………..



உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…