காரித்துப்புகிறது சுப்ரீம் கோர்ட் ….!!!

…………………………….

……………………………..

மிகக் கடுமையான வார்த்தைகளால், சுப்ரீம் கோர்ட் மணிப்பூர்
நிர்வாகத்தை சாடி இருக்கிறது. மணிப்பூர் போலீசின் கையாலாகதத்தன்மை
சகித்துக் கொள்ள முடியாதது… கற்பழித்த கூட்டத்திடமே, கற்பழிக்கப்பட்ட
பெண்களை ஒப்புவித்த கயமை சகிக்க முடியாதது.

பல விவரங்களை கோரியுள்ள சுப்ரீம் கோர்ட், மணிப்பூர் டிஜிபி
ராஜீவ் சிங் அவர்களை நேரில் ஆஜராகும்படி உத்திரவிட்டிருக்கிறது.

தமிழ்ப் படுத்தினால், சரியாக வராது என்பதால், டைம்ஸ் ஆஃப் இந்தியா
செய்தியை அப்படியே கீழே தந்திருக்கிறேன்…

…………………………….

‘Complete break down of constitutional machinery’:
SC lashes out at Manipur government over ethnic
violence

TIMESOFINDIA.COM / Updated: Aug 1, 2023, 17:00 IST

NEW DELHI: The Supreme Court on Tuesday came down
heavily on the Manipur government as well as the
police over the “complete break down of constitutional machinery” in the strife-torn state from May
till July. It also summoned the Manipur DGP to
explain why “tardy probe” was carried out by the
state police in cases of violence.

“The state police appears to be incapable of
investigating the cases. There is no law and order
left (in the state). If law and order machinery
cannot protect people, where will they go for
protection,”a bench headed by CJI
D Y Chandrachud said.

The bench, also comprising Justice J B Pardiwala and
Justice Manoj Misra, was hearing a batch of petitions concerning the violence in Manipur.

The apex court criticised the Manipur police for
the poor law and order situation in the state,
saying it is “incapable of investigation”.

During the hearing, the court also summoned
Manipur DGP Rajiv Singh and sought his personal
presence on Monday to understand why “tardy”
probe was carried out in cases of “heinous nature”.

It asked the DGP to submit a tabulated data of FIRs
based on the nature of offences. “We will decide future course of action on that day,” the top court said.

‘Investigation is so lethargic …’

The bench, which had called as “deeply disturbing”
the May 4 video of two women being paraded naked,
sought details from the state government about
the date of occurrence of the incident and
registration of ‘zero FIR’ and regular FIR
in the case.

It also wanted to know how many accused were named
in the over 6,000 FIRs registered so far and the
steps taken for their arrest.

“The investigation is so lethargic,
FIRs are registered after so long,
arrests not made, statements not recorded…
There is a complete breakdown of law and order
and constitutional machinery in the state,”
a bench headed by Chandrachud remarked orally.

“One thing is very clear that there is long delay
in registering FIR in video case,” Chandrachud
remarked orally.

As the hearing began, the Manipur government told
the bench it has lodged 6,523 FIRs after ethnic
violence erupted in Manipur in May.

Solicitor General Tushar Mehta, appearing for the
Centre and the Manipur government, told the bench
the state police lodged a “zero” FIR in the case of stripping and parading of the two women naked.

A zero FIR can be lodged at any police station
irrespective of its territorial

jurisdiction which is later transferred to the
police station within whose limits an incident has
happened.

Mehta told the top court the Manipur police have
arrested seven people, including a juvenile,
in the video case. It appears that the state police
recorded the statement of the women after the video surfaced, Mehta told the bench.

Earlier in the day, the top court directed the CBI
not to proceed with recording the statements of the
victim women during the day as it is scheduled to
hear a batch of petitions on the issue at 2 pm.

The bench took note of the submissions by lawyer
Nizam Pasha, appearing for the two women, that the
CBI has asked them to appear and depose before it
during the day.

On Monday, the top court had pulled up the Manipur
police over the delay in filing of the FIR in the
horrific May 4 incident, the video of which went viral recently.

The bench had termed the violence against women in
the state as “horrendous” and said that it does not
want the Manipur police to probe the May 4 incident.

“The women shown in Manipur video were handed over
to rioting crowd by police, this is horrendous,”
the court had said,

as it sought details of the FIRs and the number
of arrests made in the incidents of violence against
women in the state.

https://timesofindia.indiatimes.com/india/complete-break-down-of-constitutional-machinery-sc-lashes-out-at-manipur-government-over-ethnic-violence/articleshow/102308560.cms

………………………………………….

கூடவே ஒரு காணொலி கீழே – திரு.ராமசுப்ரமணியன் நக்கீரனுக்கு
கொடுத்துள்ள பேட்டி –

நான் தொலைக்காட்சி விவாதங்களை பார்ப்பதை நீண்ட நாட்களுக்கு
முன்னரே விட்டு விட்டேன்… துவக்க காலங்களில் அவர் பாஜக பக்கம்
இருந்தது எனக்கு நினைவிருக்கிறது… ஆனால், இப்போது ராமசுப்ரமணியம் பாஜக பக்கம் இல்லை என்பது தெரிகிறது – ஆனால் யார் பக்கம்….???
திமுகவா, காங்கிரசா, அல்லது எடப்பாடி அதிமுக-வா ….? (தொடர்ந்து அவரை பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்..!)

ராமசுப்ரமணியம் சொல்வதை நிச்சயம் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது; ஒருதலைப்பட்சமாக ஒருவித காழ்ப்புணர்ச்சியுடன் சொல்லப்படுபவை…


ஆனாலும், அவர் சொல்வதில் ஒருசில உண்மைகளும் ஒளிந்திருக்கின்றன என்றே நினைக்கிறேன்….( அவை என்ன …? நீங்களே சொல்லுங்களேன்…!!!)

………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

10 Responses to காரித்துப்புகிறது சுப்ரீம் கோர்ட் ….!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    உச்சநீதிமன்றம் சொல்லியதில் பல உண்மைகள் இருக்கின்றன. மணிப்பூர் கலவரத்தை எதனால் அரசு கட்டுப்படுத்தவில்லை, எதனால் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்பது புரியவில்லை. இரண்டுவிதமான கருத்துகளையும் நான் காண்கிறேன்.

    FIR போன்றவைகளைப் பற்றி ரொம்பவே கவலைப்படுகிறது உச்ச நீதிமன்றம். மக்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவது புரிகிறது. ஊழல், மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பது, லஞ்ச லாவண்யத்தில் திளைப்பது இவைகள் மக்களைப் பாதிப்பதில்லை, அதனால் அது முக்கியமான பிரச்சனை இல்லை என்று உச்சநீதிமன்றம் நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. தேர்தல் கமிஷனில் தன் சொத்து இவ்வளவுதான் என்று டிக்ளேர் செய்திருக்கும் அரசியல்வாதி, ஒரு நாளைக்கு 25 லட்சம் வாங்கும் வக்கீலை எப்படி ஏற்பாடு செய்கிறார், 100 நாட்களுக்கு மேல் இந்த மாதிரி விலையுயர்ந்த வக்கீல்களை தனக்கு வாதாடுவதற்கு ஏற்பாடு செய்ய முடிகிறது, அதற்கான பணம் எங்கிருந்து வருகிறது என்பதெல்லாம் நாட்டிற்கு முக்கியமானதல்ல. 50 லட்சம் லஞ்ச வழக்கில் எப்படி 50 கோடி செலவு செய்கிறார்கள் என்பது மக்களைப் பாதிப்பதில்லை. ஆனால் மணிப்பூர் கலவரம் என்பது இந்தியாவிற்கு மிகப் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணும். அதனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சொல்வதில் நியாயம் உண்டு. மக்களுக்காக கவலைப்படும் அவரை நாம் ஆதரிக்கவேண்டும்.

    ராமசுப்ரமணியம் எதில் மாட்டிக்கொண்டுவிட்டார் என்பது தெரியவில்லை. அதனால் அவர் பாஜகவிற்கு எதிரான கருத்துகளையே சில மாதங்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் அவர் காலம் தள்ளணும் இல்லையா? அவர் சொல்லியபடி 200 இடங்களுக்குக் குறைவாகவே பாஜக பெறும் என்று நாம் நம்புவோம். ஒருவேளை பாஜக 270 இடங்களுக்கு மேல் பெற்றுவிட்டால், ராமசுப்ரமணியம், யூ டியூபில் பேட்டி என்ற பெயரில் வாந்தி எடுப்பதை முற்றிலுமாக நிறுத்திவிடுவார் என்று நான் நம்புகிறேன். அவர் பின்னணியில் உள்ள படத்தைப் பார்த்தாலே தெரியும், எதனால் நக்கீரன் இந்த உளறல் திலகத்தைப் பேட்டி எடுக்கிறது என்று.

    இந்த உளறல் திலகம் சொல்கிறார், தனிமனித வருமானக் குறியீட்டில் 128வது இடத்தில் இருக்கிறோம் என்று. முன்ன பின்ன பேப்பரையோ இல்லை பொருளாதாரத்தையோ இல்லை Statistics என்றால் என்ன என்பதையோ இவர் அறிந்திருந்தால் உளரும் தைரியம் வந்திருக்காது (காசு வாங்கிக்கொண்டு இப்படிப் பேசியிருந்தால் அதை நாம் குறை சொல்ல முடியாது). இந்தியாவில் எத்தனை கோடி மக்கள் இருக்கின்றனர், அதில் எத்தனை சதவிகிதம் பணக்காரர்கள் (அல்லது உயர் மத்திய வகுப்பு), எத்தனைபேர் வறுமைக்கோட்டின் கீழே (என்னைப் பொறுத்தவரையில் வறுமைக்கோடு என்பது ஒரு குடும்பத்திற்கு மாதம் 5000 ரூபாய் இல்லை என்றால் அவர்கள் வறியவர்கள்) இருக்கின்றனர் என்பதை ஆராய்ந்தால், overall spreading செய்யும்போது தனிநபர் வருமானம் மிகவும் குறைவாகிவிடும் என்பது 3 வயதுக் குழந்தைக்கும் தெரியும். இந்த ஆளுக்குத்தான் இதெல்லாம் தெரியாது. இவர்களெல்லாம் சமூக விரோதிகள் என்றுதான் என்னால் அடையாளப்படுத்த முடியும். உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யும் ஈனப் பிறவிகள் என்று யாரேனும் சொல்வார்களேயானால் அதில் உண்மை இல்லாமல் இல்லை.

    • arunvidya's avatar arunvidya சொல்கிறார்:

      புதியவன் என்னும் பிராமணோத்தமருக்கு மோடியையும் பிஜேபியையும் எதிர்ப்பவர்கள் தேசவிரோதிகள் . பாவம் உயர்ச்சாதி இந்து பணத்துக்காக முஸ்லிம்கள் நாட்டில் முஸ்லிம்கள் கீழே வேலை செய்ய வேண்டியிருக்கு

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        நண்பர் அருண் வித்யா,

        உங்கள் மற்ற 2 பின்னூட்டங்களை
        நீக்கி இருக்கிறேன்..

        தயவு செய்து இன்னும் கொஞ்சம்
        பண்பாக உங்கள் கருத்தை சொல்லுங்களேன்.

        இந்த வேண்டுகோள் உங்களுக்கு மட்டுமல்ல.
        எல்லா நண்பர்களுக்கும் சேர்த்து தான் …

        .
        வாழ்த்துகளுடன்,
        காவிரிமைந்தன்

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        அருண்வித்யா.. இது நியாயமா? நீங்க சொல்றதைப் பார்த்தால் ஹிந்து கஸ்டமர்களிடமிருந்து முஸ்லீம் வியாபாரிகள் பணம் வாங்குவது ஹராம், இந்த ஜாதி இன்னொரு ஜாதியுடன் வியாபாரத் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்பீர்கள் போலிருக்கே.

  2. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன் ,

    இருந்தாலும் நீங்கள் சொல்வது உங்களுக்கே
    நியாயமாக தோன்றுகிறதா …???

    ராமசுப்ரமணியம் தோற்றத்தை பார்த்தாலே
    அவர் ஆர்.எஸ்.எஸ்., விஹெச்பி மாதிரி தான்
    தோன்றுகிறார்…!!!

    அவரைப்போய் நீங்கள் ” சமூக விரோதி ”
    என்றெல்லாம் குற்றம் சொல்வது சரியா …?

    அவரை உங்களுக்கு பிடிக்காமல் போகலாம் –
    ஆனால் அதற்காக இப்படியா…???

    அவர் சிவன் பெயரை சொல்கிறார்…
    ஒருவேளை நீங்கள் ஆழ்வார்க்கடியாரோ …!!! 😉😉😉

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தனன்

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      கா.மை. சார்… இந்த ராமசுப்பிரமணியன் பாஜகவில் மற்றும் அதன் ஆதரவாளராக இருந்தபோது என்னா பேச்சு பேசினார்.. இப்போ பரம்பரை திமுக காரன் போன்று பேசுகிறார். பச்சோந்தித் தனத்துக்கு ஒரு அளவில்லையா? தனிப்பட்ட வரவு இல்லாமல் இப்படிப் பேச வாய்ப்பே இல்லை.

      திமுக (கூட்டணி. தனித் திமுகவிற்கு 20க்கு மேல் வாக்கு சதம் இல்லை) 40 சத வாக்கு பெற்று ஆட்சிக்கு வந்திருக்கு. மத்த எல்லாக் கட்சிகளும் ஒண்ணு சேர்ந்தா திமுக மைனஸ்ல தான் இடங்கள் பெறும், அந்தக் கூட்டணி அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழக்கும் னு யாரேனும் எழுதினால் மறை கழன்றுவிட்டது எனத்தான் நினைப்பார்கள்.

      இவர் சொன்னபடி பாஜக 200க்குக் குறைவாக இடங்கள் பெற்றால் நான் அரசியல் கருத்துகள் ஊகங்கள் எழுதுவதை விட்டுவிடுகிறேன். பாஜக இவர் சொன்னதைவிட அதிக இடங்களைப் பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டால் இந்த உளறுவாயன் ஓய்வெடுக்கச் சென்றுவிடுவாரா? பொய் சொல்லி காசுதான் சம்பாதித்துவிட்டாரே

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        // இந்த ராமசுப்பிரமணியன் பாஜகவில் மற்றும் அதன் ஆதரவாளராக இருந்தபோது என்னா பேச்சு பேசினார்.. இப்போ பரம்பரை திமுக காரன் போன்று பேசுகிறார். //

        10 நாட்களுக்கு முன்னர் அஜீத் பவாரைப்பற்றி உங்கள்
        அபிமானத் தலைவர்கள் என்னவெல்லாம் பேசினார்கள்…?
        அடுத்த 10 நாட்களுக்குள் தங்கள் ஆட்சியில் அவருக்கு
        துணை முதல்வர் பதவியைக் கொடுத்து, விருந்து
        கொடுக்கவில்லையா….???

        ராமசுப்ரமணியனுக்கு நீங்கள் சொல்வது இவர்களுக்கும்
        பொருந்துமா ….?

        நினைத்துப் பார்த்தால், உங்களுக்கே கேவலமாக இல்லை…?

        • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

          அஜித் பவார்…மற்ற ஊழல்வாதிகளை பாஜக சேர்த்துக்கொள்வது கரியை தங்கள் முகத்திலும், சாக்கடை நீரை உடம்பிலும் தெளித்துக்கொள்வதற்குச் சமம்தான். இதனை யாராலும் justify பண்ண முடியாது. (ஒருவேளை) செ.பா போன்றோரை பாஜக தங்களுடன் சேர்த்துக்கொண்டால், அது எனக்கு(நமக்கு)த் தனிப்பட்ட முறையில் ஒரு நல்லது நடக்கக் காரணமாக அமையக்கூடும். அண்ணாமலை பாஜகவிலிருந்து வெளியில் வந்து புதிய கட்சி ஆரம்பித்து எதிர்காலத்தில் ஜெ. போல வரலாம். ஊழலில் எந்த compromise செய்துகொண்டாலும் (உதாரணம் இன்றைய பதிவுக்குரிய முன்னாள் அமைச்சர் அல்லது இப்போது இருக்கும் ஊழல் அமைச்சர்களில் ஒரு சிலரை பாஜகவில் சேர்த்துக்கொள்வது) ஊழலைப் பற்றிப் பேசும் யோக்கியதை (இனி ஊழல் நடக்காமல் போலீஸ் போலப் பார்த்துக்கொள்வேன் என்றெல்லாம் பேசினாலும்) தமிழக பாஜகவிற்கோ இல்லை அண்ணாமலை அவர்களுக்கோ இருக்காது. அந்த அந்த லோகல் தேர்தலில் பாஜக வாக்குகளை அறுவடை செய்யலாம் ஆனால் பாஜகவின் தரம் குறைந்துகொண்டே வரும்.

  3. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    நான் நேரிடையாகவும், மறைமுகமாகவும் – பல தடவை
    எழுதிப்பார்த்து விட்டேன்…. நீங்கள் மாறுவதாக இல்லை.

    பின்னூட்டங்களில் ஒரு குறைந்தபட்ச டீசன்ஸி கூட
    இல்லாமல் ஏன் இப்படி எழுதுகிறீர்கள். …?

    உங்களுக்குப் பிடித்த கட்சி, தலைவர்கள் யாரைப்பற்றியாவது
    பிறர் இப்படியெல்லாம் எழுதினால் உங்களுக்கு எப்படி இருக்கும் ..?

    ஏன் சில நாலாந்தர அரசியல்வாதிகள் போல் இப்படி எழுதுகிறீர்கள்….?

    உங்களுக்காக நான் உங்களைச் சாடி வரும் எத்தனை
    பின்னூட்டங்களை டெலிட் செய்வது…?

    நீங்கள் எழுதுபவற்றை போஸ்ட் செய்யும் முன்னர், நீங்களே ஒருமுறை படித்துப்பார்ப்பதில்லையா …?

    மாற்றுக்கருத்துகளைச் சொல்வதில் எந்த பிரச்சினையும் இல்லை.
    ஆனால் சொல்கின்ற முறை …??? தனிப்பட வசவு பாடாமல் அதை
    எழுத முடியாதா…?

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      Your point is valid KM Sir. இவர் மற்றும் எஸ்.வி.சேகர் போன்றோரின் பல காணொளிகளைப் பார்க்கும்போது, நாம் மதித்த விமர்சகர்கள் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசுவதைக் காணும்போது ஏற்படும் வெறுப்புதான் அவர்கள் மீதான என் விமர்சனமாக (பெர்சனலாக உளறுவாயன் என்பதுபோல) வந்துவிடுகிறது. எஸ்.வி.சேகர், அண்ணாமலை மூஞ்சைக் காண்பித்தால் ஒரு வாக்குகூட கிடையாது, அது என்ன மூஞ்சி என்று இன்னும் தரக் குறைவாகப் பேசியிருக்கிறார். இவரும் பல இடங்களில் தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார். இவற்றை சாதாரண மக்கள் காணும்போது, பிராமணன் என்ற உயர் எண்ணம்தான் இப்படி மற்ற சாதியினரைப் பற்றிப் பேசத் தூண்டுகிறது என்றே தோன்றும். இனி தனிப்பட்ட வெறுப்பு எழுத்தில் வராமல் பார்த்துக்கொள்கிறேன் (ஆனால் திமுக ஊழல்வாதிகள், வைரமுத்து கோவாலசாமி கம்யூனிஸ்ட் (அ)சந்தர்ப்பவாதிகளைப் பற்றிப் பேசும்போது no guarantee 🙂 ).

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.