” பாரதியோடு சிலர் என்னை ஒப்பிடும்போது எனக்கே வெட்கமாக இருக்கும் ….”

………………………………………………..

………………………………………………..

” பாரதியாரோடு சிலர் என்னை ஒப்பிடும்போது,
எனக்கே மிகவும் வெட்கமாக இருக்கும்.

என் பாடல்களில் அவசரத்திற்காக எழுதப்பட்ட
செயற்கைப் பாடல்கள் நிறைய உண்டு.

பாரதி முழுக்க முழுக்கத் தன்னுணர்வுக்
கவிஞன்……”

  • இப்படி மனம் திறந்து பாரதியாரைப்
    பாராட்டியவர் கவியரசர் கண்ணதாசனைத்தவிர
    வேறு யாராக இருக்க முடியும்…..???

இன்னும் சொல்கிறார் கவியரசர் கண்ணதாசன் –

“இன்று என் பாடல்களை நான்கு கோடி மக்கள்
ரசிக்கிறார்கள், பாடுகிறார்கள்.

அதைக் கண்ணால் பார்க்கும் போதும், காதால் கேட்கும் போதும்
எனக்கு உற்சாகம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால்
மேலும் மேலும் நான் எழுதுகிறேன் …

ஆனால் -அந்த வாய்ப்பே இல்லாமற் போனவன் பாரதி.

தன் கவிதையை யார் ரசிக்கிறார்கள் என்று தெரியாமலேயே
அவன் பாடினான்.

காலம் எப்படி வரவேற்கும்…யார் எப்படி ரசிப்பார்கள்….?
என்பது தெரியாமலேயே தனக்குத் தோன்றியதை எல்லாம்
பாடினான்.

அதனால் தான் எந்தக் கவிதையைப் பாடினாலும் தேன் வந்து
பாய்கிறது காதுகளில்.

பாரதி ஒரு ஜாதிக்கு, ஒரு மதத்துக்கு உரியவனே அல்ல …
அவன் சர்வ சமரசவாதி.

அவன் வங்காளத்தில் பிறந்திருந்தால் நோபல் பரிசு
தாகூருக்குப் போயிருக்காது.

துர்பாக்கியம் பிடித்த தமிழகமே- இனியாவது….
பாரதியைக் கொண்டாடு…..!

அதன் மூலம் பாரதத்தை நீ கொண்டாடுகிறாய்,
தேச பக்தியைக் கொண்டாடுகிறாய்,
தெய்வ பக்தியைக் கொண்டாடுகிறாய்,
தமிழ் மொழியைக் கொண்டாடுகிறாய்,

பாரதியைக் கொண்டாடாதவனுக்குத் தமிழன் என்று
சொல்லிக் கொள்ளவே அருகதை இல்லை.”

( செப்டம்பர் 1978 – “கண்ணதாசன்” இதழில்
கவியரசு கண்ணதாசன் – )

.
…………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to ” பாரதியோடு சிலர் என்னை ஒப்பிடும்போது எனக்கே வெட்கமாக இருக்கும் ….”

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    யார் இந்த கண்ணதாசன் மற்றும் பாரதியார்? அவர்களெல்லாம் கவிஞர்களா என்ன? திமுக வெளியிட்ட லிஸ்டில், இவர்களைப் பார்க்கவில்லையே (பாடப்புத்தகத்திலா என்பது நினைவில் இல்லை). வைரமுத்தும் மனுஷ்யபுத்திரனும்தானே ‘கவிஞர்கள்’ லிஸ்டில் இருந்தார்கள்.

  2. Tamil's avatar Tamil சொல்கிறார்:

    பாரதியும் கண்ணதாசனும் கலைஞர் கருணாநிதியை விட பெரிய கவிஞர்களா என்ன?

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      ஒருவேளை அவர் இப்போது இருந்திருந்தால் (கருணாநிதி), எனக்குக் கிடைக்காத இலக்கியத்துக்கான நோபல் பரிசு வேறு யாருக்கும் தமிழகத்தில் கிடைத்துவிடக்கூடாது என்று நினைத்திருப்பார்.

      ஆனாலும் இறை சக்தி (அல்லது இயற்கை சக்தி) என்று ஒன்று இருக்கிறதல்லவா? அதனால்தான் அரசியலில் இருக்கும் யாருமே, திமுக தலைமையாகட்டும், திமுக அமைச்சர்கள் பொறுப்பாளர்கள், திமுகவினர் ஆகட்டும், யாருமே, ‘கருணாநிதி ஆட்சியைக் கொண்டுவருவோம்’ என்று சொல்லவே முடிவதில்லை, சொல்லி வாக்குச் சேகரிக்கப் போக வாய்ப்பே இல்லை என்று ஆகிவிட்டது. கருணாநிதி இருக்கும்போது, அவரே, நான் எம்ஜிஆர் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்ததும் அவரிடமே ஆட்சியை ஒப்படைக்கிறேன் என்று சொல்லித்தான் வாக்கு கேட்க முடிந்தது (1984 சட்டமன்றத் தேர்தலில்)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.