நாயர் பிடித்த புலிவால்…..!!!

…………………………….

……………………………..

……………………………..

“அமெரிக்காவிற்கு படிக்கச் சென்ற பெண்/பையன்கள்
திரும்பி வருவதில்லை. பெற்றோரின் கடைசி காலத்தில்
அவர்களுடன் வந்து இருப்பதில்லை. அவர்கள் அந்த
வசதிகளுக்கும், வாழ்வுக்கும் பழகி விட்டார்கள் எனவே
அதை விட்டு விட்டு திரும்பி வர மனமில்லை” என்பது –
அமெரிக்காவுக்கு பெற்ற குழந்தைகளை தத்து கொடுத்த
பெற்றோர்களின் கதை …

இது “அமெரிக்க வாசம் ” பற்றிய புலம்பல்……!!!
சொந்தம் கொஞ்சம் –

கேட்டது, படித்தது மிச்சம் …!!!
…………

பலர் அவர்களாகவே விரும்பி, வெளிநாட்டுப்படிப்புக்கு
விண்ணப்பித்துப் போவதில்லை. பெற்றோர்கள் தான் ஆசைப்பட்டு
தூண்டுகிறார்கள்.

ஆனால் விரும்பிய படிப்பைப் படிக்க எண்ணி வரும் மாணவர்களின்
கல்லூரி வாழ்க்கை எப்படிப்பட்டது … ?

நடுத்தரக் குடும்ப அப்பாவால் கல்லூரிக்கட்டணம், உணவு/உறைவிடம்
கொஞ்சம் கைச்செலவுக்கு மட்டும்தான் பணம் அனுப்ப
முடியும். எல்லோருக்கும் ஸ்காலர்ஷிப் கிடைப்பதில்லை.
நிறைய மாணவர்கள், பணத்தேவைக்காக அந்தக்
குளிரில் part time வேலை செய்வார்கள்.

வீட்டில் சாப்பிட்ட தட்டைக்கூட கழுவி வைக்காத பையன்
அங்கே விடுதியில் தட்டை எடுத்து மேஜை சுத்தம் பண்ணுவான்.
வீட்டில் துடைப்பத்தை எடுத்துப் பெருக்காத பெண்
அங்கு விடுதியில் தரையைத் துடைப்பாள். வீட்டு வேலை செய்வதில் ஆண்/பெண் வித்தியாசம் இல்லை என்பதை அம்மா
சொல்லித்தரமாட்டாள். ஆனால் இவர்களின் அமெரிக்க வாழ்க்கை
சொல்லித் தரும்.

விடுமுறைகளில், கூடப்படிக்கும் அமெரிக்க மாணவர்கள்
அவரவர் வீட்டிற்குப் போய்விடுவர். ஆனால், நம் பிள்ளைகள் கதி….?
ஒருவேளை, நெருங்கிய உறவினர்கள் யாராவது அமெரிக்காவில்
ஏற்கெனவே இருந்து அவர்கள் மனது வைத்து இந்த மாணவர்களுக்கு
பயணச்செலவு கொடுத்து அழைத்துக் கொண்டால் உண்டு.
இல்லையென்றால் வீடு மற்றும் அம்மாவை நினைத்து அவர்கள்
மனம் அங்கே அழுது கொண்டிருக்கும்.

படிப்பு முடிந்தவுடன் ஒரு வருடத்திற்குள் வேலை
கிடைக்கவில்லை என்றால் திரும்பிப் போக வேண்டும்.
பணம் வீண். அப்பா மூஞ்சியைத் திருப்புவார். பதற்றம்.

வேலை கிடைத்தவுடன் மூன்று வருடங்களுக்குள் h1b
work visa லாட்டரியில் விழ வேண்டும். இல்லாவிட்டால்
நாடு திரும்ப வேண்டும். பதற்றம்..

இத்தனையும் தாண்டி வந்தால் அடுத்தது கல்யாணம்.
இங்கே வேலை பார்க்கத் தகுதி உள்ள பெண்/பையன் அல்லது
இங்கேயே வேலை பார்ப்பவர்களைப் பார்க்க வேண்டும்.

இந்தியாவாக இருந்தால் படிப்பு, வேலை,
குடும்பப் பின்னணி பார்த்தால் போதும். இங்கே
வேலையும் இடமும் முக்கியம்.

North Carolina, South Carolina – Low cost area.
Bay area, California. அதே பகுதி வரன் தான் வேண்டும்.
வாழ்க்கைச்செலவு அதிகம். வேறு மாகாண வரன்
என்றால் வேலையை விட்டுவிட்டு அங்கு போய்
வேலை தேட முடியாது. Visa transfer, amendment
என்று ஏகப்பட்ட பிரச்னைகள். ஒருவர் சம்பாத்தியத்தில்
கலிஃபோர்னியாவில் குடித்தனம் பண்ண முடியாது.

Minasotta, Detroit, Chicago – snow area-
Social drinking- No

பாதிப்பேர் West Coast California Bay area

  • வில் இருப்பார்கள். அவர்கள் East Coast வரன்களை
    திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள்.

இந்தியாவிலிருந்து பெண்/பையன் கல்யாணம்
பண்ணிக்கொண்டு இங்கு வந்தால் அவர்கள் இங்கு
வேலை பார்க்க EAD Permit உள்ள வரன் வேண்டும்.
வீட்டில் வருடக்கணக்கில் வேலைக்குப் போகாமல்
உட்கார்ந்து இருக்க முடியாது. அப்படியே வேலை
பார்த்தாலும் Dependent Visa என்றால் ஒருத்தருக்கு
வேலை போனால் மற்றவருக்கும் போய்விடும்.

இப்போதெல்லாம் இந்தியாவிலேயே எல்லா வசதியும்
இருப்பதால் கல்யாணம் பண்ணிக்கொண்டு அமெரிக்கா
வர யாரும் ஆர்வம் காட்டுவதும் இல்லை. குடியுரிமை
பெற்றவர்கள் அமெரிக்க மண்ணிலேயே பிறந்து வளர்ந்த
வரன்தான் வேண்டும் என்பார்கள். அதற்குள் நிறைய பேருக்கு
இந்த ஊர் தட்ப வெப்பம் தண்ணீருக்கு முடி கொட்டிவிடும்.

இதெல்லாம் தெரியாமல் இந்தியாவில் அப்பா அம்மா நட்சத்திரப்
பொருத்தம் ஜாதகப் பொருத்தம் பார்த்துக்கொண்டு வரும் வரனை
யெல்லாம் தட்டிக்கழித்துக் கொண்டிருப்பார்கள்.

இரண்டு வருடத்திற்கு ஒரு முறைதான் மூன்று வாரம் விடுப்பு
கிடைக்கும். இரண்டு குழந்தைகளுடன் ஒருமுறை இந்தியா வந்து
போனால் இரண்டு வருட சேமிப்பும் காலி.

பெற்றோர்கள் இங்கு வரும்போது அவர்களை
Nayagara falls, New york, Sanfrancisco, Disneyland
என்று சுற்றிக் காட்டிவிட்டு கைநிறைய சாமான்களும் வாங்கிக்
கொடுத்து அனுப்புவார்கள்.

வயதான பெற்றோர்களை இங்கே அழைத்துக்கொண்டு வந்து
வைத்துக் கொண்டால் Life, Health, Dental என்று
தனித்தனியாக இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். காப்பீட்டில்
உள்ளடங்காத வியாதி வந்தால் அவ்வளவுதான். மொத்த சொத்தையும்
எழுதி வைக்க வேண்டும்.

Doctor appointment கிடைக்க நாட்கணக்கில் காத்திருக்க
வேண்டும், அதற்குள் “ஒண்ணு வந்த வியாதி அதுவாகவே போய் விடும்..
அல்லது நாமளே போய் விடுவோம்.”

மருத்துவர்களும் சனி, ஞாயிறு கிழமைகளில் விடுமுறையில்
இருப்பார்கள். சனி, ஞாயிறு உடம்புக்கு எதுவும் வரக்கூடாது
என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

வாரநாட்களில் நட்ட நடு பகல் நேரத்தில் doctor appointment கொடுப்பார். அப்போதுதான் இவர்களுக்கு அலுவலகத்தில்
கலந்துரையாடல் இருக்கும். அதற்கு நடுவில் நமக்காக வருவார்கள்.

இதெல்லாம் காரணமாகத்தான் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பி
“இங்கேயே ராஜ வைத்தியம் வேண்டுமானாலும்
பார்த்துக்கொள்” என்கிறார்கள்.

நினைத்தபோது இந்தியா போக முடியுமா? முடியாது.
சமீபத்தில் அப்பா மறைவுக்கு சொந்த ஊருக்குப் போய் வந்த ஒரு
பையனை அலுவலகத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையால்
வேலையிலிருந்து தூக்கி விட்டார்கள்.

தாக்குப்பிடிப்பது முக்கியம். வேலை எப்போது போகுமோ என்ற
பயத்திலேயே வாழ்க்கையை ஓட்ட வேண்டும். (இப்போது
இந்தியாவிலும் இப்படித்தான்).

Greencard கிடைக்க வருடங்கள் பல ஆகலாம்.
கொரானாவா? ஊருக்குப் போக முடியாது ..

Stamping வாங்கலையா…? இந்தியா போனால் Stamping
வாங்காமல் அமெரிக்காவில் அடி எடுத்து வைக்க
முடியாது. Stamping வாங்க Indian Embassy slot-க்கு
ஒரு வருடம் கூட காத்திருக்க நேரிடும்.

நடுவில் அப்பா அம்மா “போய்விட்டால்” கூட அமெரிக்காவை
விட்டு கிளம்ப முடியாது. ஊரார் சாபத்தையும் வாங்கிக்
கொள்ளத்தான் வேண்டும்.

பெற்றோர்களுக்கு குழந்தைகள் நிலைமை ஓரளவு புரிந்தாலும் சுற்றி உள்ளவர்கள் பேசும்போது என்ன செய்வது? சமூக அழுத்தம்.

சரி! பரவாயில்லை ஊருக்கே போய் விடுவோம் என்றால் இங்கேயே
பிறந்து வளர்ந்த குழந்தைகள் மக்கர் பண்ணும்.

இந்தியாவுக்குத் திரும்பி போவதென்று முடிவு எடுத்தால் வீட்டுக்கடன்
கார் கடன் என எல்லா கடனையும் அடைத்து விட்டு எஞ்சிய
சொற்பப் பணத்தோடு ஊர் போனால் “மாசா மாசம் லட்ச லட்சமாய் சம்பாதித்ததை எல்லாம் என்ன செய்தாய்?” என்று உற்றார் உறவினர்
கேட்பார்கள்.

இதையெல்லாம் தாண்டி,
இந்தியாவுக்குத் திரும்பி போனவர்களும் இருக்கிறார்கள்.
அது அவரவர் குடும்பச் சூழ்நிலயைப் பொறுத்தது.

அலுவலகம் மூலமாக ஆன்சைட்’டில் வந்து போகிறவர்களுக்கு இது பொருந்தாது. அவர்களுக்கு இந்தியா திரும்பிப் போனாலும் வேலை
இருக்கும்.

இவ்வளவையும் தாண்டித்தான் இங்கு குடி அமர்ந்தவர்கள்
பெற்றோர்களைப் பார்க்க ஓடி வருகிறார்கள். இது நம்மவர்களுக்குப் புரிவதில்லை.

அட…! இவ்வளவு கஷ்டம் இருந்தால் அப்படி ஏன் அமெரிக்கா போக
வேண்டும் என்று கேட்கிறீர்களா?

இது மைனாரிடி கேஸ் – வெகு சிலருக்கே பொருந்தும்……

மற்றவர்கள் நினைப்பது போல் பணம் மற்றும் வசதிக்காக
மட்டும் எல்லோரும் இங்கு வருவதில்லை. இங்கு நிறைய
கனவுகளோடு சாதிக்க வந்தவர்கள் அவரவர் துறையில்
சாதித்தும் இருக்கிறார்கள்.

“இந்த மனிதச் சமுதாயத்துக்கு நாம் ஏதாவது நன்மை செய்ய
வேண்டும்” என்று நினைப்பவர்களுக்கு இங்கு படிப்பு மற்றும்
ஆராய்ச்சி வசதி வாய்ப்புகள் மிக அதிகம். சொந்தமாக startup company-கள் ஆரம்பித்து அமெரிக்கர்களுக்கே வேலை கொடுக்கும் கண்ணுக்குத் தெரியாத சுந்தர் பிச்சைகள் இங்கு ஏராளம்.

தெரிந்த ஒருவரின் பையன் இங்கு ஆராய்ச்சிப் படிப்புக்கு
வந்து ஒரு குறிப்பிட்ட கேன்சர் நோய்க்கு மருந்து கண்டு பிடித்து இங்குள்ளவர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில் அமெரிக்கா என்பது – புலிவால் பிடித்த
கதைதான். விடவும் முடியாது. கூடவே ஓடவும் முடியாது.

.
…………………………………………………………………………………………………..…

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to நாயர் பிடித்த புலிவால்…..!!!

  1. Karthikeyan Palanisamy's avatar Karthikeyan Palanisamy சொல்கிறார்:

    உண்மை சார் 🙏🏾

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    மிக நன்றாக எழுதப்பட்ட கட்டுரை. இதையெல்லாம் விட, நான் அமெரிக்கா செல்ல விரும்பாமல் (ஆஃபர் லெட்டர்களை மாத்திரம் வாங்கி என் ஃபைலில் வைத்துக்கொண்டேன்) இருந்ததற்குக் காரணம், நம் கலாச்சாரம் மாறிவிடும் என்று (எனக்கில்லை. எனக்கு மாறவே மாறாது. ஆனால் பசங்களுக்கு). ஆனா பாருங்க…இந்தியாவிலேயே கலாச்சாரம் வெகு வேகமாக இளைஞர்கள்/இளைஞிகளிடையே மாறிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு ஐம்பது வருடங்களில் எல்லா ஊரும் ஒரே மாதிரியாகிவிடும்.

    கல்ஃப் தேசங்களில் பணம் பண்ணலாம். நம் கலாச்சாரம் மாறாது. எப்போ என்றாலும் ஊர் திரும்பவேண்டியிருக்கும். சேர்த்த பணத்தில் நல்லா ஒரு வீட்டை வாங்கி, ரிடையர் வாழ்க்கையை வாழமுடியும். ஆனால் மற்ற தேசங்களில், சௌகரியமாக வாழலாமே தவிர, நிறைய சேர்த்தோம், திரும்ப இந்தியா வந்தோம் என்று இருக்க முடியாது. அந்த தேசத்திலேயே இருந்து அங்கேயே கிளைபரப்பி வாழவேண்டியதுதான். பெற்றோர், உறவினர்கள், விசேஷங்கள் என்றெல்லாம் நாற்றாய் வளர்ந்த நிலத்தைப் பற்றி எண்ணிப் பிரயோசனமில்லை.

  3. Arul's avatar Arul சொல்கிறார்:

    I’m in the same boat KM sir 😥

  4. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    Arul.

    Ofcourse I am able to understand your position.

    Now you cannot take a decision of your choice…
    as you are bound by the situation where you are presently living….

    Many are like this only.
    That is what I was trying to explain in the above article.

    -With all best wishes,
    Kavirimainthan

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.