………………………………………………….

……………………………………………………
நெல்லை சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு பா.ஜ.க சட்டமன்றக்
குழுத் தலைவருமான நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி,
பா.ஜ.க-வில் மாநில இளைஞரணி துணைத் தலைவராக இருக்கிறார்.
அவர் சென்னை, விருகம்பாக்கம் ஆற்காடு சாலையிலுள்ள 100 கோடி ரூபாய் மதிப்பிலான 1.3 ஏக்கர் நிலத்தை மோசடியாகப் பத்திரப்பதிவு
செய்திருப்பதாக, அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது.
அந்த நிலம் மதுரையிலுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்துக்குச்
சொந்தமானது எனவும், மதுரையைச் சேர்ந்த இளையராஜாவுடன்
சேர்ந்து நயினார் பாலாஜி மோசடியாக நெல்லை மாவட்டம்,
ராதாபுரத்தில் கிரய ஒப்பந்தம் செய்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய
தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை, நயினார் பாலாஜியின் பத்திரப்பதிவை
ரத்துசெய்து உத்தரவிட்டிருக்கிறது…(புகைப்படம் மேலே….)
……………….
இது குறித்து, அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த திரு.ஜெயராமன்
அவர்கள் விளக்கும் – காணொலி கீழே பதிவிடப்பட்டிருக்கிறது.
நமக்கு சில கேள்விகள் –
தமிழக பாஜக தலைவர் மிகத்தீவிரமாக திமுக-வினர் மீதான
ஊழல் குற்றங்களை வெளிப்படுத்திக் கொண்டு வரும்
வேளையில், தமிழக பாஜக தலைவர்கள் சிலரிடமே
திமுக-வின் ஊழல் வியாதி படர்ந்து வருகிறதோ…?
பாஜக மாநில துணைத்தலைவர் திரு.நயினார் நாகேந்திரன்
அவர்களின் மகன் நயினார் பாலாஜியின் மீது 100 கோடி ரூபாய்
சம்பந்தப்பட்ட ஊழல் ஒன்று அறப்போர் இயக்கத்தினரால்
வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.
திரு.நயினார் பாலாஜி, இந்த நிலம் வாங்குவது சம்பந்தப்பட்ட
எந்த நிகழ்வுக்கும், தனது தந்தைக்கும் எந்தவித தொடர்பும்
கிடையாது என்று கூறி இருக்கிறார்.
1) ஆனால், 100 கோடி ரூபாய் பெருமானமுள்ள இவ்வளவு பெரிய
சொத்தை வாங்குவது பற்றி அவர் தனது தந்தையிடம் ஆலோசனை
கேட்காமலோ, அவருக்கு தெரியாமலேயோவா வாங்க
முயற்சித்திருப்பார்….? இந்த வார்த்தை நம்புதலுக்குரியதாகத்
தெரியவில்லையே….!!!
2) 100 கோடி ரூபாய் பெருமானமுள்ள ஒரு சொத்தை வாங்கும்
அளவுக்கு நயினார் பாலாஜி சொந்த வருமானம் உள்ளவரா….?
அப்படி அவர் என்ன தொழில் செய்கிறார்….?
3) சென்னையில் உள்ள சொத்தை திருநெல்வேலியில் பதிவு செய்ய,
நயினார் பாலாஜி ஆளும் கட்சியில் உள்ள எவரின் உதவியையும்
நாடவில்லையா…? அவருக்கே பத்திரப்பதிவுத் துறையில்
அந்த அளவிற்கு செல்வாக்கு இருக்கிறதா…?
4) பத்திரவு பதிவுத்துறை திமுகஅமைச்சரிடம் அவரோ,
அவரது தந்தையோ, இது சம்பந்தமாக எந்தவித உதவியையும்
கோரவில்லையா…..?
5) இது கோவில் ஒன்றின் நிலம்/சொத்து என்று கூறப்படுவது பற்றி,
ஊருக்கே தெரிந்திருக்கும்போது, அவருக்கு இதைப்பற்றி எதுவுமே
தெரியாதா ….? கேள்விப்பட்டது கூட கிடையாதா …?
6) இவ்வளவு விலை மதிப்புள்ள ஒரு சொத்தின் உண்மையான
சொந்தக்காரர் யாரென்று தெரிந்துகொள்ள அவர் முயற்சி
செய்யவே இல்லையா….? வெறும் இடைத்தரகர் இளையராஜா
சொன்னது அவருக்கு போதுமானதாக இருந்ததா…..?
7) கடைசியாக – சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கும்
ஒரு நிலத்தை – சென்னையிலேயே பதிவு செய்வதில்,
அவருக்கு என்ன சங்கடம்….?
ஏன் அவர்கள் செல்வாக்கு செல்லக்கூடிய நெல்லையில்…..?
- கீழேயுள்ள காணொலியை கண்டபிறகு வாசக நண்பர்களுக்கு
இன்னும் கூட எதாவது சந்தேகங்கள் தோன்றலாம்….!!!
…………………………..
.
…………………………………………………..



நல்லது நடந்திருக்கிறது. ஊழல் வாதிகள் எங்கிருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. பிஜேபி சமீப காலமாக ஊழல் வாதிகளை கட்சியில் சேர்த்து புனிதராக்கிக்கொண்டிருப்பது பெரிய தவறு. இதை செய்துகொண்டு ஊழலை ஒரு பிரச்சனையாக எப்படி எழுப்ப முடியும்?
நீங்கள் கேட்ட கேள்விகள் எல்லாமே சரியான கேள்விகள். பதில் கண்டிப்பாக இருக்காது!
பிஜேபி மெல்ல தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கும் நேரத்தில், இது போன்ற ஊழல்வாதிகளுடன் சமரசம் செய்து கொள்வது நிச்சயம் ஏற்புடையது அல்ல.அண்ணாமலை அவர்களின் சீறிய முயற்சிகளுக்கு , இவர்களை போன்றவர்கள் முட்டுக்கட்டையாக விளங்குவார்கள்.
என்னதான் பத்திரிக்கையில் வந்தாலும், பொதுவெளியில் அண்ணாமலை அவர்களின் பத்திரிக்கை சந்திப்பில் நிச்சயம் மேலும் பின்னணி விளங்கும்.அப்படி ஒரு விளக்கம் வந்தால், அதையும் பதிவிடுங்கள்
உங்கள் கேள்விகள் எல்லாமே மிகச் சரியானவை. ஊழல் பெருச்சாளிகளைக் கூடவே வைத்துக்கொண்டு, அண்ணாமலை அவர்களால் ஊழலை எதிர்த்துப் போரிட முடியாது. அண்ணாமலை நிச்சயம் இதற்கு விளக்கமளிப்பார் (ஊழலில் சமரசமே கிடையாது. அவர் மீதான புகாரை விசாரித்து அரசு நடவடிக்கை எடுத்தால் அதில் பாஜக தலையிடாது என்றே சொல்லுவார் என நான் நினைக்கிறேன்). இதில் அண்ணாமலை ஸ்ட்ரிக்டாக இருந்தால், நயினார், அதிமுகவை நோக்கி நடையைக் கட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.
ஊழல்வாதிகளை பாஜக தன்னுடன் சேர்த்துக்கொள்வது, தங்கள் கட்சியை காங்கிரஸாக மாற்றும் சீரியசான முயற்சி என்றே எனக்குத் தோன்றுகிறது. அதனால் இந்த நடவடிக்கை தொடர்ந்தால், ஒரு சில தேர்தலுக்குப் பிறகு, ‘புதிய காங்கிரஸ்’ முக்த் பாரத் என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டால் ஆச்சர்யமில்லை.
ஆளும் கட்சிக்கு வெறுக்கத்தக்க இடத்தில இருக்கும் போதே இவ்வளவு பெரிய முறைகேடு. இவர்கள் ஆளும் கட்சியாக மாறினால் ?