……………………………………

……………………………………
விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில், ஏற்கெனவே நடந்து வந்த,
இரண்டு முக்கிய வழக்குகளில் சமீபத்தில் தான் பொன்முடி
விடுதலை செய்யப்பட்டார்.
தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
1996 – 2001 காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக
இருந்தார். இந்த காலகட்டத்தில் அவர் முறைகேடாக நிலம்
வாங்கியதாக கூறப்பட்டது.
தன்னுடைய மாமியார் சரஸ்வதி பெயரில் போலி ஆவணங்களைத்
தயார் செய்து நிலம் வாங்கியதாக கூறப்பட்டது. தனது அதிகாரத்தைப்
பயன்படுத்தி, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில்,
அரசுக்குச் சொன்தமான 3,630 சதுர அடி நிலத்தைப் பதிவுசெய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் சமீபத்தில் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார்.
போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி பொன் முடி விடுதலை
செய்யப்பட்டார்.
அதேபோல் கடந்த 13-5-1996 முதல் 31-3-2002 வரையிலான கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ஆம்
ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அமைச்சர் பொன்முடி மீது
வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கிலும் போதிய சாட்சியங்கள் இல்லை
என்றும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று பொன்முடி
விடுதலை செய்யப்பட்டார்.
ஒருவர் அமைச்சராக செல்வாக்குடன் பதவியில் தொடரும்போது,
அவருக்கெதிரான ஒரு வழக்கை, அதே மாநிலத்தில்,
அதே மாவட்ட நீதிமன்றத்தில் நடத்தினால்,
மாவட்ட காவல் துறையால்
அந்த அமைச்சருக்கு எதிரான வழக்கை,
எந்த அளவுக்கு தீவிரமாக எடுத்துச் செல்ல முடியும்….?
அரசு வழக்கறிஞர்கள், அமைச்சர் மீது குற்றத்தை நிரூபிக்கும்
முயற்சியை எந்த அளவிற்கு எடுத்துச் செல்ல முடியும்…..?
அரசு ஊழியர்களான அவர்கள் மீண்டும் இந்த அமைச்சரோடு
பணி புரிய முடியுமா ….?
இந்த மாதிரி வழக்குகளில் நீதியை எதிர்பார்ப்பதே முட்டாள்தனமாகத் தெரியவில்லை….?
தற்போது பொதுவெளிக்கு வந்திருப்பது இன்னொரு வழக்கு….
அது பற்றிய அடிப்படை விவரங்கள் –
இவர் கடந்த 2006-11ம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக
இருந்த பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள்
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியம்,
பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட
அளவுக்கு மேல் கூடுதலாக செம்மண் எடுத்த வகையில்
ரூபாய் 28.38 கோடி அளவிற்கு தமிழ்நாடு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக ( மீண்டும் அதே …!!!) விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு
நடைபெற்று வருகிறது…..
இந்நிலையில், அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள்
இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்திருந்தனர்.
19 ஜூன் 2023 அன்று பொன்முடியின் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த
சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை எதிர்கொள்ளும்படி அவர்களுக்கு
ஆணையிட்டது…
அந்த வழக்கைத்தான் இப்போது அமலாக்கத்துறை தீவிரமாக விசாரணைக்கு
எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது……
அதிகாரபூர்வமாக எந்தவித அறிவிப்புகளும் இல்லாத போதும்,
ரெய்டுகளும் அதையொட்டியே நடப்பதாகத் தெரிகிறது.
இதைப்பற்றி, அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் அவர்கள்,
தெளிவாகவும், விவரமாகவும் இந்த காணொலியில் அலசுகிறார்.
கிரிமினல் வழக்குகள், இத்தனை வருடங்கள் தாமதமானால்,
நீதி எப்படி கிடைக்கும்….? மக்களுக்குத் தான் இந்த சிஸ்டத்தின் மீது
நம்பிக்கை எப்படி பிறக்கும்…. பரபரப்பான ரெய்டுகளும், குற்றச்சாட்டுகளும்
மட்டும் இதற்கு தீர்வு அல்ல…. வழக்குகள் வேகமாக நடைபெற்று,
குற்றச்சாட்டுகள் சரியாக உரிய முறையில், உரிய ஆதாரங்களுடன்,
நீதிமன்றத்தின் முன்வைக்கப்பட்டு,
- குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தந்தால் மட்டுமே
இந்தவித நடவடிக்கைகளுக்கெல்லாம் ஒரு அர்த்தம் இருக்கும்
என்கிறார் ஜெயராமன்…. இந்த கருத்தில், நான் அவருடன் முற்றிலுமாக
ஒன்றுபடுகிறேன்.
…………………………………………………



…
quote from Bhagavat Gita in the latest Hollywood film –
….
….
இது போன்ற ரெய்டுகள் பொது வெளியில் பெயர் கெடுவது என்ற விளைவை தருகின்றன. ஆனால், பல ரெய்டுகளுக்கு பிறகும், ஏன், கைதுக்கு பிறகும், உத்தமராக பாவனை கொடுத்துக்கொண்டு வளையவரும் அரசியல்வாதிகளுக்கு இந்த ‘பெயர் கெடுதலால்’ என்ன வந்து விடப்போகிறது என்று தெரியவில்லை.
நன்கு ஆண்டு அனுபவித்துவிட்டு, 90 வயதுக்கு மேல் தண்டனை அருகில் வந்து, வயதை முன்னிட்டு குறைந்த தண்டனையாக பெற்றால் என்ன நியாயம் என்று புரியவில்லை. வீட்டில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை வெளிப்படையாக வைத்துக்கொண்டு வருமானத்து அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகும் வித்தை தெரிந்தவர்கள் இவர்கள்!
கடவுள்தான் தண்டனை அளிக்கவேண்டும்!
அவர்கள் கொள்ளையடித்ததில் ஒரு சிறு பங்கையும் தேர்தலின்பொழுது ஓட்டு அளிக்க நமக்கு தான் கொடுக்கிறார்களே..
பிறகும் ஏன் பொங்குகிறீர்கள்