செ.பா.வர்ஷன்-2.0 – 400 கோடி ரூபாய் – கொள்ளை …!!!

…………………………………..

………………………………….

மற்றுமோர் மிகப்பெரிய ஊழலை அறப்போர் இயக்கம்
வெளிக்கொண்டு வந்திருக்கிறது….

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில்
397 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டை எழுப்பி
பரபரப்பை கிளப்பி உள்ளது அறப்போர் இயக்கம்.

ஏற்கனவே சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கி
அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது
செய்யப்பட்டிருக்கும் சூழலில், அவர் வகித்த துறை மீது எழுந்துள்ள
புதிய ஊழல் குற்றச்சாட்டு தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம், 288 பக்க ஆதாரங்களுடன்
அறப்போர் இயக்கம் புகாரும் அளித்துள்ளது.

சுருக்கமாக, அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டு …?

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 45 ஆயிரம் மின் விநியோக மாற்றிகள் (Distribution transformer) கொள்முதல்
செய்வதற்காக ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்த மின்விநியோக மாற்றிகள் 25kva, 63kva, 100kva, 2
00kva, 250 kva, 500 kva என பல கொள்திறனில்
கோரப்பட்டுள்ளன.

இதற்கான பல ஒப்பந்தங்கள் கடந்த 2021 அக்டோபரில் கோரப்பட்டு
நவம்பர் மாதம் திறக்கப்பட்டன.

இந்த ஒப்பந்தகோரலில் தான் மிகப்பெரிய அளவில் ஊழல்
நடந்திருப்பதாகவும், ஒப்பந்ததாரர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் இணைந்து கூட்டுச்சதியில் ஈடுபட்டிருப்பதாகவும் அறப்போர் இயக்கம்
குற்றம் சாட்டுகிறது.

தமிழ்நாடு போகும் போக்கை பார்த்தால், அறப்போர் இயக்கம்
ஒரு முழுநேர இயக்கமாக, இன்னும் பலரையும் துணைக்கு
சேர்த்துக்கொண்டு இன்னும் தீவிரமாக இயங்க வேண்டிய அவசியம்
ஏற்பட்டு விட்டதாக தோன்றுகிறது.

அறப்போர் இயக்க நிர்வாகிகளுக்கு நமது வாழ்த்துகளும்,
ஆதரவும் எப்போதும் உண்டு.

அறப்போர் இயக்கத்தின் திரு.ஜெயராமன் இது குறித்து,
விரிவாக, தெள்ளத் தெளிவான ஆதாரங்களுடன் பேசும்
வீடியோ கீழே –

……………………..

.
………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.