…………………………………..

……………………………………
தென் ஆப்பிரிக்கா செல்கிறார் அண்ணாமலை – தினமலர் …!!!
……………………..
சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை
ஐந்து நாட்கள் பயணமாக, வரும், 20ம் தேதி, தென் ஆப்பிரிக்கா
நாட்டிற்கு செல்கிறார். அங்கு அவர், தமிழர்கள் அதிகம் வசிக்கும்
பகுதிகளுக்கு சென்று, இந்தியாவில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக
பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களை பற்றி பேசுகிறார்.
( https://m.dinamalar.com/detail.php?id=3373760 )
……………..
தென் ஆப்பிரிக்க தமிழர்களுக்கோ, அல்லது
பாஜக-வுக்கோ – ஏன், வேறு யாருக்காவது இதனால் எந்த விதத்திலாவது பயனுண்டா ….?
ஏன் இந்த அசட்டுத்தனம் …???
(உண்மையில் – யாருக்காக, எதற்காக, இந்தப் பயணம் …???)
.
…………………………………………………………………………………………………………………………………………………..



அண்ணாமலையின் UK பயணம், இப்போ நீங்கள் சொல்லும் ஆப்பிரிக்கா பயணம் ஏதோ காரணமாக நடைபெறுகிறது. சாதாரணமாக ஊர் சுற்றும் பயணமல்ல என்று தோன்றுகிறது. ஆனால் வெளிப்பார்வைக்கு இந்த மாதிரி சிரிப்பூட்டும் காரணங்கள் சொல்லப்படுகின்றன. (இதுபோலவே அவர் மேற்கொண்டிருந்த இலங்கைப் பயணமும்)
பலரும் பல்வேறு காரணங்கள் சொல்லி, சுற்றுலா மேற்கொண்டிருப்பதை நீங்கள் படித்திருப்பீர்களே.
..
புதியவன்,
// வெளிப்பார்வைக்கு இந்த மாதிரி
சிரிப்பூட்டும் காரணங்கள்
சொல்லப்படுகின்றன… //
இந்த மாதிரி சிரிப்பூட்டும் காரணங்களை
சொல்லாமல் இருந்தால் இன்னும்
கௌரவமாக இருந்திருக்கும் – அல்லவா …?
அது கூடவா அவர்களுக்கு தோன்றவில்லை….?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்