……………………………………………….

……………………………………………….

…………………………………………………

………………………………………………….
வரலாற்றை எப்போது புரட்டினாலும் அதில் நாம்
நிச்சயம் அடால்ஃப் ஹிட்லர் ( Adolf hitler) என்கிற பெயரை
பார்ப்பதை தவிர்க்க முடியாது.
இன்னும் கூட சிலர், அடால்ப் ஹிட்லர் 1945-ல் இறக்கவேயில்லை
என்றும் 95 வயது வரை அர்ஜென்டினா நாட்டில் வாழ்ந்து
பின்னரே இறந்தார் என்றும் கூறுகிறார்கள். பல மர்மங்கள்
நிறைந்த அவரின் வாழ்க்கையின் அதிகம் வெளிச்சத்திற்கு வராத
சில உண்மைகள் கீழே –
ஹிட்லர் ஒரு ஜெர்மானியர் கிடையாது ….
தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஜெர்மனி நாட்டின் உயர்வுக்காகவே
வாழ்ந்த அடால்ப் ஹிட்லர் ஒரு ஜெர்மானியர் கிடையாது என்றால்
நம்ப முடிகிறதா ….? அவர் பிறப்பால், ஜெர்மானியர் கிடையாது.
அவர் ஏப்ரல் 1889-ம் ஆண்டு ஜெர்மனியின் அண்டை நாடான
ஆஸ்திரியாவில் பிறந்தார். தன்னுடைய பள்ளி ஆசிரியரான
ஜெர்மனியை சேர்ந்த லியோபோல்ட் போஸ்ட்ச் அவர்களால்
பெரிதும் ஈர்க்கப்பட்ட அடால்ப் ஹிட்லருக்கு ஜெர்மனி மீது தீராத
பிடித்தம் ஏற்பட்டது.
இதன் காரணமாகவே முதலாம் உலகப்போரில் ஜெர்மனி நாட்டின்
ராணுவத்தில் 1914 -ம் ஆண்டு சேர்ந்து பின்னர் 1925 ஆம் ஆண்டு
தன்னுடைய ஆஸ்திரியா நாட்டின் குடியுரிமையை துறந்து முழு ஜெர்மனி நாட்டவராக அவர் மாறினார்.
சிறந்த ஓவியர் ….
இரக்க குணம் சிறிதும் இல்லாத கொடூர சிந்தனைகளைக் கொண்ட
ஹிட்லர் ஒரு சிறந்த ஓவியர் என்றால் ஆச்சரியமாக இல்லை…. ?
துவக்கத்தில், அவருடைய வாழ்க்கையின் லட்சியமே ஒரு சிறந்த
ஓவியனாக மாறுவதாக இருந்தது….. ஆனால் முதலாம் உலகப்போர்
அவரை மாற்றிவிட்டது.
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் இருக்கும் கலை கல்லூரியில்
ஓவிய படிப்பை படிக்க மிகவும் ஆசையாக இருந்த அவர் தொடர்ந்து
இரு முறை தகுதி தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறார்….. காரணம்
அவருக்கு கட்டிடங்கள் வரைவதில் சிறந்த திறன் இருந்தாலும்
மனிதர்களை வரைவதில் அவ்வளவு திறன் இல்லை என்று கூறி
அவரை சேர்க்கவில்லை.
ஆனாலும் அவருடைய ஓவியங்கள் மீதான ஆர்வம் அவரை விடவில்லை.
அவர் ஜெர்மனியின் சர்வாதிகாரியாக மாறியதும் அருங்காட்சியகத்தில்
இருந்த பல மாடர்ன் ஓவியங்கள் நீக்கப்பட்டு அவரின் பல ஓவியங்கள்
அதில் வைக்கப்பட்டன.
வறுமையில் வாடியவர் –
இளம் வயதில் தாயை இழந்து வறுமையில் வாடியவர் ஹிட்லர்.
அவருடைய ஓவியங்கள் எதையும் விற்கமுடியாமல்
1909 -ம் ஆண்டு வரை அப்படியே மிகவும் துன்பத்தில் வாழ்ந்திருக்கிறார்.
பின்பு ஒரு பொது தங்கும் விடுதிக்குச் சென்று 1913 வரை அங்கேயே
அவர் வாழ்ந்திருக்கிறார்.
அவரை மாற்றிய யுத்தம் –
முதலாம் உலகப்போரில் ராணுவ செய்தி அனுப்பும் வேலை
செய்துவந்த அவருக்கு ரசாயன குண்டுகளால் கடுமையான
பாதிப்புகள் ஏற்பட்டது. இதன் பிறகே அவருக்கு மூர்க்கத்தனம்
அதிகரித்ததாக வரலாறு கூறுகிறது.
அந்த ரசாயன குண்டு பாதிப்பு அவருக்கு சிறிது காலம் கண்களை பாதிக்கவைத்து செயல் இழக்க வைத்திருந்தது. அவருக்கு மீண்டும்
கண் பார்வை கிடைத்தபோது அவர் பார்த்தது ஜெர்மன் ராணுவத்தின் தோல்வியையே.
சிறைச்சாலை அனுபவம் –
தன்னுடைய நாஜி படையை வைத்துக்கொண்டு ஆட்சியை பிடிக்க
1923 -ம் ஆண்டு அவர் செய்த ம்யூனிச் பயணம் தோல்வி அடைந்ததால்
சிறைக்கு அனுப்பப்பட்டார். அப்போது அவரை 1 வருடம் தேச துரோக
குற்றம் சுமத்தி சிறையில் அடைத்தது அப்போதைய ஜெர்மன் அரசு.
அங்கு சிறையில் அவர் எழுதிய Mein Kampf புத்தகம் மிகவும் பிரபலமடைந்தது. பின்னாளில் அதுவே அவரின் பெயர் ஜெர்மனி
முழுவதும் பரவ முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
தேர்தலில் வென்றதே கிடையாது –
1932 -ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அவர்
வோன் ஹிண்டன்பெர்க் அவர்களிடம் தோற்றுப்போனார். ஆனாலும்
ஜெர்மனி முழுவதும் 37% வாக்குகள் பெற்று நாஜி கட்சி மிகப்பெரிய
கட்சியாக உருவெடுத்தது. இதனால் 1933 ஆம் ஆண்டு
துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். பின்னர் ஹிண்டன்பெர்க்
மறைவிற்கு பிறகு அவர் தன்னைத் தானே ஜெர்மனின் ஜனாதிபதி
என்று அறிவித்துக்கொண்டார்.
கொடூரங்களை பார்க்காதவர் –
தன்னால் தொடங்கப்பட்ட வதை முகாம்கள் எதையும் அவர் நேரில்
சென்று பார்த்ததே கிடையாது. லட்சக்கணக்கான யூதர்கள் கொன்ற
அவர் ஒருமுறை கூட சென்று பார்க்காதது உண்மையில்
மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம்
விலங்குகளில் பாதுகாவலர் –
லட்சக்கணக்கான மனிதர்களை கொன்று குவித்த அவர் விலங்குகள் வதைபடுவதை விரும்பாதவர். மேலும் அவற்றின் பாதுகாப்பிற்காக
பல திட்டங்களை மேற்கொண்டார்.
அமைதிக்கான நோபிள் பரிசு –
ஹிட்லர் அமைதிக்கான நோபிள் பரிசு பெரும் போட்டியாளர்களின்
ஒருவராக இருந்தார். பின் அவரே அந்த போட்டியில் இருந்து விலகி
இனி ஜெர்மனியை சேர்ந்த எவரும் நோபிள் பரிசு பெறக்கூடாது என்று உத்தரவிட்டார்.
அமெரிக்காவின் பிரபல டைம்ஸ் பத்திரிகையின் அட்டைப்படத்தில்
1938-ம் ஆண்டின் உலகின் சிறந்த மனிதர் என்று ஹிட்லரின் படம் வெளியிடப்பட்டது.
……………………………………………….
( பின் குறிப்பு – இன்றைய காலகட்டத்தில் –
ஹிட்லரைப் போல் – என்று வேறு யாரும்
உங்கள் நினைவுக்கு வருகிறார்களா…?
அட்லீஸ்ட் – பாதி ஹிட்லர் என்கிற அளவிற்கு …?
இன்னும் குறைவாக – கால் ஹிட்லர் என்கிற அளவிற்கு …?
குறைந்த பட்சம் ஹிட்லரை நினைவு படுத்துகிறார்
என்கிற அளவிற்காவது….?
- அப்படியென்றால், பின்னூட்டம் போடும் இடம்
உங்களுக்காகத்தான் காலியாக காத்துக்கிடக்கிறது.
எழுதுங்களேன்….
நாங்களும் ரசிக்கத் தயாராக இருக்கிறோம்…!!! )
.
…………………………………………………………………….……………………………………………………………..



மனைவி
ரொம்ப தைரியம் தான் உங்களுக்கு
..
🙌 🙌 🙌
I SURRENDER …!!!
..
இருக்கிறார்கள்
அவர்களை பற்றி மீம்ஸ் போட்டாலே, நடு ராத்திரியில் கைது செய்யப்படுவோம்..
ஆனால் அவர்களை யாரும் கைது செய்ய கூடாது.கொந்தளிப்பார்கள் ..
ஊக்கு சாப்பிட்டு எஃகு மாதிரி இருக்காரே அவர் தான்
நினைவுக்கு வரும் ஒரே நபர் மோடி
..
இந்த இடத்தில், கல்கத்தா காளியை –
மன்னிக்கவும் –
மம்தா தீதி’யை – மட்டும் மறந்து விடல்
நியாயமா … ??? 😉😉😉
…
ஏன் பாய் உங்களுக்கு பின்லேடன்லாம் நினைவிற்கு வரமாட்டாங்களா. அவ்வளவு மதப்பற்று 🤦🏽♂️
எப்பொழுதும் நமது முதுகில் அழுக்கு உள்ளது நமக்கு தெரியாது.
அடுத்தவர்கள் தான் வன்முறையாளர்கள்.
எதிர்த்து கேட்க முடியாத இடத்தில இருக்கிறார்கள்..
வன்முறை தாண்டவமாடும் …ஆனாலும் தாங்கள் அகிம்சைவாதிகள் தான் என்ற நினைப்புடன் வலம் வருகிறார்கள் .எதிர்த்து கேட்பவர்கள் தான் மதவெறியர்கள் போலும் …
என்ன கொள்கையோ போங்க ….
முடியல…
உங்க பேச்சுக்கே வருவோம்
இங்க எத்தன பேரு பின்லேடனை ஹிட்லரோட ஒப்பிட்டா… ஒருத்தர் அவர் மனைவியை ஹிட்லர்ன்னு சொன்னார் அப்ப அவர் பெண்களை அடிமையாக நினைப்பதாக சொல்லலாமா…
பாய் ஏன் மோடியை மட்டும் ஹிட்லர்னு சொன்னார் அவரோட பின்லேடனையும் சேர்த்து சொல்லியிருந்தால் எனது கேள்வியே வந்திருக்காது. எனக்கெல்லாம் மதவெறியில்லை என் இனத்தை சார்ந்த ஒரு லட்சம் பேரை கொன்றவர்களுக்கு துணையாக இருந்தவர்களையே மன்னித்தவர்கள் நாங்கள்… குஜராத் கலவரத்தின் உண்மையை அறியாமல் அவங்க ஜமாத் பேச்சை கேட்பவர்கள் நான் இல்லை
..
கார்த்திகேயன் பழனிசாமி,
ஆதிரையன்,
..
சரி – ஹிட்லரையும், பாயையும் – இங்கேயே விட்டு விடுவோம்… 😊😊😊
– கீழேயுள்ள வீடியோவைப்பற்றி உங்கள்
கருத்து என்ன….???
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
People are like a God to me….!!!
……………..
I was impressed by the மத்திய பிரதேச முதல்வர் செயல். இதைவிட மற்றவர்களுக்கு அழுத்தமான செய்தியைக் கொடுக்க முடியாது. அதுமட்டுமல்ல, யோகி பாணியில், குற்றம் செய்தவனின் வீட்டையும் இடித்துவிட்டார்னு படித்தேன்.
பல இடங்களில் வாயால் நன்றாக பாராட்டிவிட்டு, பிளாஸ்டிக் சேர் அல்லது தள்ளி நிற்க வைப்பது என்றெல்லாம் அரசியல் தலைவர்கள் முக்கியஸ்தர்களையே treat செய்கிறார்கள். அவர்களும், நாம் பிச்சைக்காரர்கள், கொடுத்த சீட், சின்னம் வாங்கி, அதுமட்டுமல்ல, இன்னாரைத்தான் நிறுத்தணும் என்று சொல்வதையும் கேட்டுக்கொள்கிறோம் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். இதில் உட்கார சேர் கேட்பதாவது?
இவர் முழு மனதுடன் பண்ணியருந்தால் பாராட்டுகள். புதியவர்(ன்) கூறிய மாதிரி இங்கயும் இருக்காங்களே சமூக நீதிக்காவலர்கள்