……………………………………

…………………………………….
கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு முன், நாங்கள் சென்னையில்
இருந்தபோது, குடும்பத்தில் அனைவரும் ட்ரைவ் இன் தியேட்டர்
ஒன்றில் படம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்…
அது ஒரு வேலைநாள்…. எனவே அலுவலகம் சென்றவர்கள்
திரும்பியபிறகு, காரில் தி.நகரிலிருந்து கிழக்கு கடற்கரை
ஓரத்திலிருந்த அந்த தியேட்டரை கண்டுபிடித்து போவதற்குள்
மணி ஏழரைக்கு மேலாகி விட்டது… படம் முக்கால் மணி நேரத்திற்கு மேல்
ஓடி விட்டது….ஆனாலும், உள்ளே விட்டார்கள்…
ட்ரைவ் இன்’னில் படம் பார்க்கும் பரவசம் தான் முக்கிய நோக்கமாக
இருந்ததால், முதல் முக்கால் மணி நேர படம் மிஸ்’ஸாவதை
மறந்து விட்டு, படத்தைப் பார்த்தோம்…..
ஆனால், படம் முடியும்போது எனக்கு மிகவும் வருத்தம்.
அற்புதமான அந்த படத்தை ஒழுங்காக முழுவதும் பார்க்காமல்
போனோமே என்று.
மீண்டும் முதலிலிருந்து ஒரு தடவை பார்க்க
வேண்டுமென்று கொஞ்ச நாட்கள் நினைத்துக்கொண்டே இருந்தேன்.
பின்னர் மறந்து விட்டேன்.
நேற்றிரவு, யூ ட்யூபில், வேறு எதையோ தேடிக்கொண்டிருந்தபோது,
அந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் சீன் மட்டும் தனியாக பார்க்க
கிடைத்தது….பிரமாதம்….
படம் முழுவதுமே யூ-ட்யூபில் கிடைக்கிறது…
தொடர்ந்து, இரவு – முழு படத்தையும் பார்த்துவிட்டு
தான் தூங்கப்போனேன் ( இரவு 2.30 மணி…!!!)
அந்த க்ளைமேக்ஸ் காட்சியை மட்டும் கீழே பதிகிறேன்.
முழு படத்தையும் பார்ப்பது சிறந்த அனுபவமாக இருக்கும்….
முடியாதவர்கள் இந்த காட்சியை மட்டுமாவது
அவசியம் பாருங்கள்….
……………….
.
( RHYTHM FULL MOVIE – யூ-ட்யூப் -லிங்க் – https://youtu.be/v4Td7anDYRw )
……………………………………………..



Superb Movie, vasanth directed a good movie after Keladi Kanmani. I loved the climax. But only wrong thing I feel that, Arjun lived with Jothika with all family life, but Meena character not even had 1 day life with Ramesh Aravind and not even touch hem.. same old movies mentality .. if you are trying to do some thing bold be bold and nothing wrong on that..