அமைச்சரின் டிஸ்மிஸ் – சட்டப்படி சரியே…!!!நியாயப்படியும் சரியே….!!!எந்த வேலையும் செய்யாத மந்திரிக்கு தண்டச் சம்பளம் ஏன்…?

………………………………………

………………………………………

தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம்
செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“அமைச்சர் செந்தில் பாலாஜி,
வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்தது உள்ளிட்ட
பல்வேறு ஊழல் வழக்குகளில், கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.

அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி, தன் மீதான
விசாரணைக்கும் அவர் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். தற்போது
நீதிமன்ற காவலில் அமலாக்கத் துறை விசாரணையில் உள்ளார். அதுமட்டுமில்லாமல், தமிழக காவல் துறையிலும் அவர் மீது சில
வழக்குகள் உள்ளன.

இதனால் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால்
அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும்.

…..

“இதனால் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும்.”

…….

இந்த ஒரு வார்த்தை போதும்… அரசு இயந்திரம் அரசியல் சாசன
விதிகளின்படி செயல்பட வேண்டுமானால், செந்தில் பாலாஜி
அமைச்சர் பதவியில் நீடிக்கக்கூடாது என்பதற்கான நியாயம்
இதில் அடங்கி இருக்கிறது.

மேலும், அமைச்சர் என்பவர் ஒரு அரசு ஊழியராகவே
சட்டப்படி கருதப்படுகிறார். எனவே, அரசு ஊழியர்களுக்கான
ஒழுங்கு நடவடிக்கை விதிகள் அமைச்சருக்கும் பொருந்தும்.

அது மத்திய அரசாக இருந்தாலும் சரி,
மாநில அரசாக இருந்தாலும் சரி –

ஒழுங்கு நடவடிக்கைகளின் விதிப்படி,

அரசு ஒழியர் ஒருவர், கிரிமினல் வழக்கில் கைது செய்யப்பட்டு,
48 மணி நேரங்களுக்கு மேல் சிறையில் இருந்தால் –
ஆட்டோமேடிக்’காக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டாக
வேண்டும்….

பிற்பாடு, அவர் மீது இருந்த வழக்குகளில்
அவர் நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் மட்டுமே
மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்.

அதுவரை அவர் அரசு ஊழியராக தொடர முடியாது…

இந்த சட்டம் டிஸ்மிஸ் செய்யப்பட்ட மந்திரிக்கும் பொருந்தும்.

மேலும் எந்த வித வேலைகளும் செய்யாத ஒரு மந்திரிக்கு
அரசு எதற்காக லட்சக்கணக்கில் தண்ட சம்பளமும்,
அலவன்சுகளும் கொடுக்க வேண்டும்…???

நீதிமன்றத்திற்கு செல்வோம் என்று சொல்பவர்களிடம்,
நீதிமன்றம் நிச்சயமாக இந்த கேள்விகளை கேட்கும்….

வேலை செய்யாத ஒருவருக்கு மக்களின் வரிப்பணத்தை
எதற்காக வீணாகச் செலவழிக்க வேண்டும் என்று
நீதிமன்றம் கேட்டால், இவர்கள் என்ன பதில் சொல்வார்கள்.

Article 163 of the Constitution of India….

  • There shall be a Council of Ministers with
    the Chief Minister at the head to aid and advise
    the Governor in the exercise of his functions,

-Governor is not bound by the advice of a
council of ministers –

when there is any action
taken at his discretion and Governor’s discretion
is constitutionally valid.


  • அரசியல் சட்ட விதிகளின்படி, ஒருவரை அமைச்சராக
    நியமிக்கப்படுவதற்கு தான் , முதலமைச்சரின் பரிந்துரை
    கவர்னருக்கு, தேவைப்படுகிறது.

ஆனால், ஒருவர் அமைச்சர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட
வேண்டுமானால், அதற்கு முதலமைச்சரின் பரிந்துரை அவசியம்
தேவை என்று எந்த சட்டமும் சொல்லவில்லை….

தேவைப்படும்போது, கவர்னர் தனது விசேஷ அதிகாரங்களை
பயன்படுத்தலாம் என்றும் சட்டம் கூறுகிறது.

அதே போல், ஒருவர் எதுவரை அமைச்சர் பதவியில் தொடரலாம்
என்பதற்கு சட்டம் தெளிவாகச் சொல்கிறது…

How long a Minister can continue …?

During the pleasure of Governor…

அதாவது கவர்னர் விரும்பும் வரை மட்டும்தான்
ஒருவர் அமைச்சர் பதவியில் தொடர முடியும்.

.
…………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to அமைச்சரின் டிஸ்மிஸ் – சட்டப்படி சரியே…!!!நியாயப்படியும் சரியே….!!!எந்த வேலையும் செய்யாத மந்திரிக்கு தண்டச் சம்பளம் ஏன்…?

  1. Tamil's avatar Tamil சொல்கிறார்:

    செந்தில் பாலாஜி அவர்கள் தன் மீது இருக்கின்ற வழக்குகளை சந்தித்து நிரபராதி என்று நிரூபித்த பின்பு பதவி ஏற்பது என்பது அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்றுதான் ஆனால் குஜராத் படுகொலையை மோடி அவர்கள் குஜராத் மாநிலத்தின் முதல்வராகத்தான் அதனை எதிர் கொண்டார் என்பது வரலாறு.

    செய்வது இந்த நாட்டை ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற அனைவரும் திருடர்களாக இருக்கின்றபோது மக்களாகிய நாம் என்ன செய்ய முடியும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.