…………………………………………….

……………………………………………..

……………………………………………..
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20-ம் தேதி,
உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது.
அன்றைய தினம் சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் 40 பேர்
ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனியாகப் பிரிந்து சென்றனர்.
அவர்கள் பா.ஜ.க உதவியுடன்தான் தனியாகப் பிரிந்து வந்தனர்.
அவர்கள் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து, கடந்த ஜூன் இறுதியில்
ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆட்சி அமைத்தனர். சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் பிரிந்து சென்ற ஜூன் 20-ம் தேதியை,
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும்,
தேசியவாத காங்கிரஸ் கட்சியும் `துரோகிகள்’ தினமாகக்
கடைப்பிடித்தன. ஆட்சிக் கவிழ்ப்பின்போது முக்கியப் பங்கு வகித்த
பா.ஜ.க அமைச்சர் ரவீந்திர சவான், சூரத்துக்கு எம்.எல்.ஏ-க்களை
அழைத்துச் சென்றபோது என்ன நடந்தது என்பது குறித்த
நினைவுகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்….!!!
இது குறித்து அவர் கூறியது, “எம்.எல்.ஏ-க்களை சூரத்துக்கு
அழைத்துச் சென்றபோது அவர்களிடம் போனை வாங்கிக்
கொண்டோம். மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காக அவர்களை டி.விகூட
பார்க்க நாங்கள் அனுமதிக்கவில்லை.
எம்.எல்.ஏ-க்களை கௌஹாத்திக்கு அழைத்துச் சென்ற பிறகுதான் உறவினர்களுடன் பேசவும், டி.வி பார்க்கவும் அனுமதித்தோம்.
ஒரு சிறிய தவறு நடந்தாலும் ஒட்டுமொத்த முயற்சியும் தோல்வி அடைந்துவிடும் என்பதால்தான் இது போன்று நடந்துகொண்டோம்.
டெல்லியைச் சேர்ந்த தலைவர்கள் –
மகாராஷ்டிராவில்
`ஆபரேஷன் தாமரை’ திட்டத்தை மூன்று முறை செயல்படுத்த
முயன்று தோல்வியைத் தழுவினர்.
2019-ம் ஆண்டு முதன்முறையாக ஏக்நாத் ஷிண்டே மற்றும் சில எம்.எல்.ஏ-க்கள் உதவியுடன் ஆட்சிக் கவிழ்ப்பைச் செயல்படுத்த
முயன்றோம். ஆனால் தொழில்நுட்பரீதியாக அது முடியாமல்
போய்விட்டது.
அதன் பிறகு கொரோனா வந்துவிட்டது. 2021-ம் ஆண்டு மீண்டும்
ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயன்றோம். முடியவில்லை.
கடைசியாக கடந்த ஆண்டு மிகவும் சரியாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தியதால் கடந்த ஜூன் மாதம் இந்தத் திட்டத்தை
வெற்றிகரமாக முடிக்க முடிந்தது. அதற்குத் திட்டமிட்டது
மறக்க முடியாத அனுபவம்.
அது குறித்து அனைத்தையும் சொல்ல முடியாது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பத்தில் 40 பேர் இருந்தனர். அவர்களின் எண்ணிக்கையைப் படிப்படியாக குறைத்துக்கொண்டே
வந்தோம்.
இவை அனைத்தும் டெல்லி மட்டத்தில் நடந்தது.
இப்போதும் மகாவிகாஷ் அகாடியைச் சேர்ந்த 20 எம்.எல்.ஏ-க்கள்
பா.ஜ.க-வில் சேரத் தயாராகத்தான் இருக்கின்றனர். ஆட்சிக்
கவிழ்ப்பு தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.க-வுடன் நீண்ட
நாள்களாகப் பேசிக்கொண்டிருந்தார்.
இது அவரின் மகன் ஸ்ரீகாந்துக்குக்கூட தெரியாது. விஷயத்தை
மிகவும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று ஷிண்டேவிடம்
பா.ஜ.க கேட்டுக்கொண்டது. அவரும் அதைக் கடைப்பிடித்தார்.
ஆபரேஷன் தாமரை குறித்து ஒன்று அல்லது இரண்டு பேருக்கு
மட்டும்தான் முழுமையாகத் தெரியும். இதில் தொடர்புடைய
மற்றவர்களுக்கு, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை குறித்து
மட்டுமே தெரியும். பலருக்கு நாம் மிகப்பெரிய ஆபரேஷனில்
இருக்கிறோம் என்றே தெரியாமல் இருந்தது.
எங்களுடன் சூரத்துக்கு வந்த எம்.எல்.ஏ-க்களுக்கு எந்த வாகனத்தில் செல்கிறோம் என்றோ அல்லது காரை யார் ஓட்டுவது என்றோ கூட
தெரியாது. டிரைவருக்கும் வண்டியில் இருப்பது யார் என்று தெரியாது.
சில எம்.எல்.ஏ-க்கள் தங்களை உருவம் மாற்றிக்கொண்டு சென்றனர்.
சிலர் வசாய் வழியாகக் கொண்டுசெல்லப்பட்டனர்.
சூரத்தில் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பலத்த போலீஸ்
பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதிகமான எம்.எல்.ஏ-க்கள் அணிந்துகொண்டிருந்த துணியோடு வந்தனர். அவர்களுக்கு
சூரத்தில் சென்று தேவையான ஆடைகள், மருந்து போன்ற (ஜட்டி, பனியன் உட்பட )அத்தியாவசியப் பொருள்கள் வாங்கிக் கொடுக்கப்பட்டன.
ஆனால், கௌஹாத்திக்குச் சென்ற பிறகு அனைவரும் பாட்டு
பாடுவது, கேரம் ஆடுவது போன்ற காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர்” ….!!!
………………………………………………..
ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் என்ன விலைக்கு வாங்கப்பட்டனர்,
மொத்தம் எத்தனை கோடி செலவழிந்தது… ?
அதை யார் கொடுத்தது என்பது போன்ற விஷயங்களை
மட்டும் பெருந்தன்மையோடு சொல்லாமல் விட்டு விட்டார் மந்திரி சார் … !!!
வாழ்க ஜனநாயகம் ……!!!
.
……………………………………………………………………………………………………..…



நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்றக் கூடிய ஒரு பணியை இப்படி திட்டமிட்டு செய்திருந்தால் பெருமை கொள்ளலாம்
செய்தது மொள்ளமாரித்தனம், இதில் பெருமை என்ன இருக்கிறது.