……………………………………………..

………………………………………………..

…………………………………………….

……………………………………………….

…………………………

…………………………….
மோடிஜி அமெரிக்காவில் அமர்க்களம் பண்ணிக்
கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல
வேண்டும்….
டெக்னாலஜியின் தயவில்,
நியூயார்க்கிலும், வாஷிங்டனிலும் நடைபெற்ற
நிகழ்ச்சிகள் பெரும்பாலானவற்றை அநேகமாக
நேரலையிலேயே காண முடிந்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் பரந்த புல்வெளியில்
180 நாடுகளின் பங்கேற்புடன் நிகழ்ந்த “யோகா” நிகழ்ச்சி,
வாஷிங்டனில்- வெள்ளை மாளிகை வாயில் புல்வெளியில்
திறந்தவெளியரங்கில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி,
அமெரிக்க பாராளுமன்றத்தில் உரை …. எல்லாமே
அமர்க்களம்….
ஜனாதிபதி பைடன் இந்தியாவை பாராட்டும்விதமாக
உங்கள் சென்னையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர்
எங்கள் அமெரிக்காவுக்கு துணை ஜனாதிபதியாக
கமலா ஹாரிஸ் அவர்களை பரிசாக தந்திருக்கிறார் என்று
கமலா அவர்களை சுட்டிக்காட்டி சொன்னபோது,
உண்மையிலேயே மிகவும் பெருமையாக இருந்தது.
வெள்ளை மாளிகை வரவேற்பின்போது ஹிந்தியில் பேசிய
மோடிஜி அமெரிக்க பாராளுமன்றத்திலாவது, ஆங்கிலத்தில்
உரையாற்றினால் நன்றாக இருக்குமே என்று ஒரு அரைகுறை
ஆசையோடு பார்க்கமுனைந்தபோது,
அதிசயம் காத்திருந்தது.
அங்கு ஆங்கிலத்திலேயே உரையாற்றினார் மோடிஜி….!!! அடிக்கடி
கரகோஷங்களையும் காண முடிந்தது.
பொதுவாகவே இந்த நிகழ்வுகள் அனைத்துமே மிகுந்த
மனநிறைவைத் தந்தன…
உலக அரங்கில், இந்தியாவுக்கு, அதன் தகுதிக்கேற்ற,
சிறப்பான இடத்தைப் பெறுவதில், மோடிஜி காட்டும் ஆர்வமும்,
முனைப்பும், அதற்கான உழைப்பும் பாராட்டத்தக்கது.
வெள்ளை மாளிகை வரவேற்பின்போது, அருகருகே
நின்று கொண்டிருந்த வெளியுறவுத்துறை அமைச்சர்
ஜெயசங்கர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
ஆகியோரைக்காண முடிந்தது…. இந்த பயணத்தின்
சிறப்புக்கு இவர்கள் இருவரும் அற்புதமாக பணியாற்றி
இருக்கிறார்கள்.
பொதுவாக, பாரதத்தின் பெருமையை உலகில்
உயர்த்திக் காட்டும் விதத்தில் அமைந்திருக்கிறது
இந்தப் பயணம்.
மோடிஜிக்கு இந்த வலைத்தளத்தின் சார்பில்
வாழ்த்துகளும், பாராட்டுகளும்….!!!
.
……………………………………………..



ஐயோ ஐயோ!!!
யாரு ஊபிஸ்ஸா இப்படித்தான் கதற தெரியும்
மோடி அவர்களின் உரையைக் கேட்டேன். ஒரு டீக்கடைக்காரன் என்ற நிலையில் இருந்து எவ்வளவு பெரிய இடத்துக்கு உயர்ந்திருக்கிறார் என்று ஆச்சர்யம் ஏற்பட்டது. சமூகவலைகளில் அவருடைய பலப் பல ஆண்டுகளுக்கு முன்னதான வெள்ளைமாளிகை முன் எடுத்த புகைப்படம் மற்றும் தற்போது அரசு முறை வரவேற்பைப் பார்க்கும்போது கால மாறுதல் பளிச் என்று தெரிந்தது.
He has an art as to how to present things and present himself. எனக்குத் தோன்றுகிறது விரைவில் அவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கிடைக்கும் என்று.
/ஜனாதிபதி பைடன் இந்தியாவை பாராட்டும்விதமாக
உங்கள் சென்னையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர்
எங்கள் அமெரிக்காவுக்கு துணை ஜனாதிபதியாக// மோடி அவர்கள் தன்னுடைய உரையில் அமெரிக்கவாழ் இந்தியர்கள், அதிலும் துணை அதிபர் அளவிற்கு நம்பிக்கையைப் பெற்று முன்னேறியிருப்பதைப் பற்றிச் சொன்னார் (எழுந்து நின்று கரகோஷம்.. இந்தப் பாயிண்டுக்கு மாத்திரமல்ல, 10 தடவைகளுக்கு மேல் எழுந்து நின்று கரகோஷம்). அமெரிக்காவினால் விசா மறுக்கப்பட்ட ஒருவர் (2013ல் இந்த நிலை), அரசு முறை அழைப்பில் பயணம் செய்தது (இரண்டாவது முறை நாடாளுமன்ற உரை-முதல் இந்தியப் பிரதமர், அரசு முறை அழைப்புப் பெற்ற இரண்டாவது இந்தியப் பிரதமர்), அவர்களின் அன்பைப் பெற்றது சிறப்பான சம்பவம் என்று நினைக்கிறேன். பில் கிளிண்டன் நம் நாடாளுமன்றத்துக்கு வந்தபோது, பலர் அவரின் கையெழுத்தைப் பெறவும், போட்டோ எடுத்துக்கொள்ளவும் முனைந்தது கொஞ்சம் விமர்சனத்தைச் சந்தித்தது. இதே போன்ற நிகழ்வு (எம்பிக்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டது, அதிலும் மோடி அவர்கள் கையெழுத்திடுவதில் பிஸியாக இருந்தபோது) அமெரிக்க பாராளுமன்றத்தில் நடந்ததையும் இப்போது பார்க்க முடிந்தது.
ஆனானப்பட்ட எம்.ஜி.ஆரையே 33 சதம் தமிழர்கள் மாத்திரமே ஆதரித்தார்கள் என்பதையும் நினைத்துப் பார்க்கணும். மோடி has achieved something in his life. நேரு மூன்று முறை பிரதமர் என்பது பெரிய சாதனை அல்ல. அவர் உயிரோடு இருந்திருந்தால் ஐந்து முறையும் பிரதமர் ஆகியிருப்பார், அது சுதந்திரம் பெற்ற காலம் என்பதால். ஆனால் மோடி அத்தகைய நிலைக்கு, தன்னுடைய திறமையால் (வாக்குகளை ஈர்க்கும்) வந்திருப்பது ரொம்பவே ஆச்சர்யம்.