மோசடி செய்த கட்டுமான நிறுவனத்திற்கு மீண்டும் FINTECH CITY டெண்டர் கொடுத்ததன் பின்னணியில் -எந்த அமைச்சர்….? எத்தனை கோடிகள்…?

………………………………………………………….

……………………………………….

………………………………..

……………………………..

அறப்போர் இயக்கம் மீண்டும் ஒரு ஊழலை வெளிக்கொண்டு
வந்திருக்கிறது…. விவரங்கள் கீழேயுள்ள காணொலியில் …..

திமுக ஆட்சிக்கு வந்த புதிதில்,

ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் KP Park பகுதியில் கட்டப்பட்ட,
ஊழல் புகாருக்குள்ளான தரமில்லாத கட்டிடம் பல இடங்களில் இடிந்து விழுந்து, மக்கள் உயிருக்கு பயந்து, ஓடவேண்டிய நிலை ஏற்பட்டது.

மக்களின் பலத்த எதிர்ப்புகள், புகார்களுக்குப் பின் –
அதிமுக ஆட்சியை விமரிசித்து –
திமுக அமைச்சர்கள் வீர வசனம் பேசி,
பிறகு IIT மூலம் அவற்றை ஆய்வு செய்து
அது தரமற்ற கட்டுமானம் என்று உறுதி செய்யப்பட்டது.

இத்தனைக்கு பிறகு, திமுக அரசு
என்ன செய்திருக்க வேண்டும்….?

அதை கட்டிய நிறுவனம் மீது FIR போட்டிருக்க வேண்டும்.
அந்த நிறுவனத்தை Blacklist செய்திருக்க வேண்டும்.
அந்த தரமற்ற கட்டுமானத்தை தடுக்காத அதிகாரிகள் மீது
தீவிரமான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுத்திருக்க
வேண்டும்.
செய்தார்களா?
இல்லையே. …

பின் என்ன தான் செய்தார்கள்….. ?

இப்போது மீண்டும் அதே PST நிறுவனத்தை அழைத்து
பல நூறு கோடி மதிப்புள்ள FINTECH CITY கட்டுமானத்தை அளித்திருக்கிறார்கள்.

அந்த கட்டுமான நிறுவனமும், பெருமையுடன் ஒரு போஸ்டரை
அடித்து ஒட்டி சகல விஷயங்களையும் நினைவுபடுத்தி ……பார்த்தீர்களா மீண்டும் நாங்கள் தான்….

எந்த ஆட்சியாக இருந்தால் எங்களுக்கு என்ன – “எங்கள் வழி தனிவழி” – என்று எல்லாரையும் இளிச்சவாயர்களாக பார்க்கிறது.

( ஆமாம் – அமைச்சர் உதயநிதி
அவர்களின் புகைப்படம் அந்த போஸ்டரில் ஏன்….?
இந்த இலாகாவிற்கும் அவருக்கும் எந்தவித சம்பந்தமும்
கிடையாதே….!!! ஒருவேளை கட்டுமான கம்பெனியுடன்
சம்பந்தம் உண்டோ…??? )

இந்த டெண்டர் விவகாரத்திலிருந்து என்ன தெரிய வருகிறது……?
பின்னணியில் –
எந்த அமைச்சர்….? எத்தனை கோடிகள்…?

……………………………….

.
………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to மோசடி செய்த கட்டுமான நிறுவனத்திற்கு மீண்டும் FINTECH CITY டெண்டர் கொடுத்ததன் பின்னணியில் -எந்த அமைச்சர்….? எத்தனை கோடிகள்…?

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    சார்…. நாம் ரொம்ப சுலபமா, கட்டுமான கம்பெனி, ரோடு போடும் காண்டிராக்டர்களைக் குறை சொல்லிவிடுகிறோம். அவங்க பக்கத்தில் உள்ள விஷயத்தை நாம கவனிக்க விட்டுவிடுகிறோம்.

    எந்த ஒரு காண்டிராக்டிலயும், 15-20 சதம் லாபம் வந்தால்தான் ஒருவர் தொழில் செய்யமுடியும். அதிலும், ரோடு போட்டு பிறகு பில்லை பாஸ் பண்ணணும். அதாவது முழு முதலீட்டுக்குப் பிறகுதான் வேலை முடிந்த பிறகு பணம் வரும். எந்த அரசுமே, காண்டிராக்டுக்கு 45 சதம் கமிஷன், பில் பாஸ் பண்ண 10 சதம் கமிஷன் வாங்கினால், 15 சதம் பொருள், 10 சதம் வேலையாட்கள் கூலி போட்டுத்தான் எந்தக் கட்டுமானத்தையும் கட்டமுடியும். காண்டிராக்ட் கொடுக்கறவங்களுக்கு எப்படியும் 50 சதம் பணம் கிடைத்துவிடும் என்பதால், யார் அதிகம் தருகிறார்களோ அவர்களுக்குத்தான் காண்டிராக்ட் கொடுப்பாங்க. அதனால்தான் தரமற்ற கட்டுமானம்.

    என்னைக் கேட்டால், மத்திய அரசு ஒரு சட்டம் கொண்டுவந்து, எல்லாக் கட்டுமானத்தையும் L&T போன்ற கார்பொரேட்டுகள் மாத்திரமே கட்ட முடியும், லோகல் ஊழல் காண்டிராக்டர்களுக்கு, PST போன்ற புண்ணாக்கு வியாபாரிகளுக்கு எந்த அரசு காண்டிராக்டும் கிடையாது என்று சட்டம் போட்டால், ஒருவேளை நமக்கு தரமான கட்டுமானம் கிடைக்கும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.