மோடிஜியின் அமெரிக்க பயணமும் – `MQ-9B டிரோன்கள்’ கொள்முதலும் ….

……………………………………………..

………………………………………………

பிரதமர் மோடிஜி, வரும் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அப்போது
அமெரிக்க அரசின் வெளிநாட்டு ராணுவத் தளவாட விற்பனைத் திட்டத்தின்கீழ் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது…..

இது குறித்து திரட்டப்பட்ட சில சுவாரஸ்யமான தகவல்கள் –

ஒப்பந்தங்களில் முக்கியமான ஒன்று, அமெரிக்காவிடமிருந்து, இந்தியா
அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட
31 ஆயுதம் ஏந்திய பிரிடேட்டர் அல்லது MQ-9B சீகார்டியன்
டிரோன்களை வாங்குவது…

இதன் பின்னணி என்ன …?

அமெரிக்கா தற்போது, ‘ MQ-9 பிரிடேட்டர்’ என்ற அதிநவீன
டிரோன்களைத் தயாரித்துவருகிறது. இதை வானில் மிக அதிக
உயரத்தில் இயக்கி கண்காணிப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். மேலும், எதிரிகளின் இலக்குகளை
மிகவும் துல்லியமாகத் தாக்கி அழிக்க முடியும். தற்போது இந்த வகை டிரோன்களை அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் பயன்படுத்திவருகின்றன. சில நேட்டோ நாடுகளும்,
அமெரிக்காவின் நெருங்கிய ராணுவ நட்புகொண்ட நாடுகளும்
மட்டுமே இந்த வகை டிரோன்களை வைத்திருக்கின்றன.
இத்தகைய ஆயுதம் ஏந்திய ஆளில்லா விமானங்கள், ஆளில்லா போர் விமானங்கள் போன்றுதான் செயல்படும்.

சீனா, பாகிஸ்தானுக்கு ஆயுதம் தாங்கிய Cai Hong-4 மற்றும்
Wing Loong-II டிரோன்களை வழங்குகிறது.

சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்துவருவதால், அதைச் சமாளிக்கும்
வகையில் ‘எம்.க்யூ 9 பிரிடேட்டர்’ வகை டிரோன்களை வாங்குவதற்கு
இந்தியா நீண்டகாலமாகத் தீவிரம் காட்டிவருகிறது. ஆனால்
இதில் இறுதி முடிவு எடுக்கப்படாமலிருந்தது.

மேலும், மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு
(டி.ஆர்.டி.ஓ) முப்படைகளும் பயன்படுத்தும் வகையிலான
டிரோன்களைத் தயாரித்துவருகிறது. டெல்லியில்
ராணுவ அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது அமெரிக்காவைச் சேர்ந்த, ‘ஜெனரல் அட்டாமிக்ஸ்’
நிறுவனம் தயாரிக்கும் எம்.க்யூ- 9 பிரிடேட்டர் வகை டிரோன்களை
ரூ.24,000 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது
இந்த ஒப்பந்தத்தின்படி கடற்படைக்கு அதிகபட்சமாக 15 டிரோன்களும் ராணுவம் மற்றும் விமானப்படைக்கு தலா 8-ம் வழங்கப்படும்.

அடுத்த பணிக்காக மீண்டும் ஆயுதம் ஏவுவதற்கு, மீண்டும் சொந்தத் தளங்களுக்குத் திரும்புவதற்கு முன்பு, எதிரி இலக்குகள் மீது
ஏவுகணைகள் மற்றும் துல்லியமான இலக்குகளைச் சுடும் திறன்
கொண்டவை.

இந்திய கடற்படை, 2020-ம் ஆண்டு செப்டம்பர் முதல் குத்தகைக்கு இந்த வகையிலான இரண்டு டிரோன்களை எடுத்து கண்காணிப்புப் பணியில் பயன்படுத்திவருகிறது. அதிகபட்சமாக 5,500 கடல் மைல்கள் வரை செல்லக்கூடிய மற்றும் 40,000 அடி உயரத்தில் பறக்கக்கூடிய தன்மைகொண்டது இந்த டிரோன்.

கிழக்கு லடாக்கில் தொடரும் ராணுவ மோதலுக்கு மத்தியில்
உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control -LAC) வழியாக சீன ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிக்க,
திறம்படப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் உள்நாட்டில் தேஜாஸ் மார்க்கர்-2 போர் விமானங்களை இயக்குவதற்கு GE-F414 டர்பைன் இன்ஜின்களை இணைத்து தயாரிக்க ஜெனரல் எலெக்ட்ரிக் மற்றும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் இடையேயான ஒப்பந்தமும் விரைவில் அறிவிக்கப்படும் என்று செய்திகள் சொல்கின்றன.

MQ-9B டிரோன்கள், அதிநவீன ஏவியோனிக்ஸ் மற்றும்
தரைக் கட்டுப்பாட்டு அமைப்புகளுடன், COMCASA-வின் பாதுகாக்கப்பட்ட குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (GPS), ஐடென்டிஃபிகேஷன்
ஃபிரன்ட் ரிசீவர், வி.ஹெச்.எஃப் சிஸ்டம் போன்றவற்றைக் கொண்டிருக்கின்றன. இவை எதிரிகள் ஏமாற்றித் தாக்குவதை எளிதாக எதிர்கொள்ளும் திறன்கொண்டவை.

விரைவில் இந்திய ராணுவத்தின் பலம் மேலும் கூடுவதற்கு,
இந்த ராணுவ சாதனங்கள் மிகவும் உதவியாக இருக்கும் என்பது –

இந்த பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

.
……………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to மோடிஜியின் அமெரிக்க பயணமும் – `MQ-9B டிரோன்கள்’ கொள்முதலும் ….

  1. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    செ.பா. -திஹார் செல்ல வாய்ப்புண்டா …???

    ……………………………….

    .
    …………………………………………………………………………………

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      ஆளாளுக்கு அரைகுறை தகவல்களை வைத்துக்கொண்டு கதை விடுவது போலத்தான் எனக்குத் தோன்றுகிறது. செ.பா. விற்காக இவ்வளவு மெனெக்கடாது. இவர்களின் குறி வேறு எங்கேயோ. அதற்குரிய டாகுமெண்ட்ஸ் கிடைத்து, அதற்கான சரியான ஆதாரமாக செ.பா. குறிவைக்கப்பட்டிருக்கிறார். அவரை தமிழகத்தைவிட்டுப் போகாமல் பார்த்துக்கொள்வார்கள்.

      ED செய்திகளின் ஊடாக நமக்குக் கிடைக்கும் செய்தி, மனித உரிமை நல வாரியத் தலைவர், திமுக உறுப்பினர் என்பதும், செ.பா. விற்கு உடல் சரியில்லை என்று certificate கொடுத்த ESIயின் தலைவர், துர்கா ஸ்டாலினின் சகோதரர் என்பதும்தான். இதுமாதிரி இன்னும் எத்தனை எத்தனை தகவல்கள் நமக்குக் கிடைக்கப்போகிறதோ.

      In the mean time, ஊடக செய்தியாளர்கள் செ.பா விடம் தைரியமாகக் கேள்விகள் எழுப்பியதற்குப் பின்புலமாக செ.பாவைப் பிடிக்காத திமுக முக்கியஸ்தர்கள் காரணமாக இருந்திருப்பார்களோ? பொதுவா ஊடகங்கள் திமுக சார்பு நிலையைத்தானே இதுவரை எடுத்துள்ளன?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.