அண்ணாமலையும், சவுக்கு சங்கரும் மட்டும் தான் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளா …????

………………………………………………………

……………………………………………………..

கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலை கவனித்துப்
பார்த்தவர்களால் இதை உணர முடியும்…

அரசின் தவறுகளை, ஊழல்களை, அழுத்தந்திருத்தமாக
சுட்டிக் காட்டி, வெளிப்படையாக தட்டிக்கேட்பது – இவர்கள்
இரண்டு பேர்கள் மட்டும் தான்.

அண்ணன் சீமான் அவர்கள் எப்போது, எப்படி, எந்தப்பக்கம்
பேசுவாரென்று எதிர்பார்க்கவே முடியாது…. எனவே, அவரை
இதில் சேர்ப்பதற்கில்லை…

………………………….

கீழே ஒரு காணொலி …

டாஸ்மாக் விவகாரத்தில், திமுக (தற்போதைய ஆட்சியின்) – தலைவர் எப்படியெல்லாம் பல்டி அடிக்கிறார் என்று சவுக்கு சங்கர் அவர்கள்
பழைய சான்றுகளையும் வைத்துக்கொண்டு மிக விவரமாகவே
பேசுகிறார்… ரொம்ப பழைய விஷயம் இல்லையென்பதால்,
நமக்கும் இவையெல்லாம் இன்னமும் நினைவில் இருக்கின்றன.

டாஸ்மாக்’ வருமானம் இல்லாமல் அரசை நடத்த முடியாது
என்று சாக்கு சொல்பவர்களுக்கு, மிகச் சுலபமாக அண்டை
மாநிலமான கேரளத்தில் எந்தவித ஊழலுக்கும் இடம் தராமல்
சாராயக்கடைகள் நடத்தப்படுவதையும் அவற்றின் வருமானம்
முழுவதுமாக அரசிடம் போய்ச்சேர்வதையும் உதாரணம் காட்டுகிறார் .

ஆனால், கொள்ளை அடிப்பதையே கொள்கையாக கொண்டவர்கள் இதை எல்லாம் ஏற்றுக்கொள்வார்களா … ???

………………………………………………………….

.

……………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to அண்ணாமலையும், சவுக்கு சங்கரும் மட்டும் தான் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளா …????

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    உண்மைதான். சமீப மாதங்களாக சவுக்கு சங்கர், மிகத் தீவிரமாக அரசின் ஊழல் மற்றும் ஊழல் மனிதர்களைப் பற்றி நிறையப் பேசுகிறார் (ஒரு சில, biased ஆக இருப்பதைப் பார்க்கிறேன். உதாரணமா, சில கட்சிகளைப் பற்றி நான் எழுதும்போது, கடுமையாக நான் எழுதுவதைப் போல, though they deserve that) பலவற்றிர்க்கு ஆதாரத்தையும் காண்பிக்கிறார் (உதாரணமாக ஒரு நகரில் மாத்திரம், bar நடத்துபவர்கள் அட்ரஸ் எல்லாமே மிகப் போலி மற்றும் Benomy என்பதை ஆதாரத்துடன் காணொளி போட்டுள்ளார்). பிடிஆர் ஆடியோவும் முதலில் சவுக்கு ஆரம்பித்து பிறகு அண்ணாமலை இரண்டாவது பகுதியை வெளியிட்டது மட்டுமல்ல, மொத்தம் 1 மணி நேர ஆடியோ இருக்கிறது, வழக்குப் போட்டால் கோர்ட்டில் கொடுப்பேன் என்றும் சொல்லியிருக்கிறார்.

    இதற்கு முன்பு (சில மாதங்களுக்கு முன்பு), தன் வேலையில் மீண்டும் reinstate செய்தால், அரசு ஊழியர் ஆகிவிடுவதால், அரசியல் பகுதிக்கே தான் வரமாட்டேன் என்று சவுக்கு ஒரு காணொளி வெளியிட்டிருந்தார். அதற்குப் பிறகுதான் அவரை வேலையிலிருந்து நீக்கினார்கள்.(அதுவரை சஸ்பென்ஷன் அல்லது ஏதோ ஒரு நிலை, but monthly basic compensation of around 40 K அவருக்கு சம்பளத்தின் பகுதியாக வந்துகொண்டிருந்ததாம்)

    அண்ணாமலை, தைரியமாக களத்தில் இறங்கியிருக்கிறார். நான் அவரிடம் பெரிதும் மதிக்கும் குணம், செய்தியாளர்களைத் தொடர்ந்து சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்குப் பொறுமையாக நாம் ஏற்றுக்கொள்ளும்படியான பதில்களைக் கூறுவதுதான். மிகக் கடுமையான உழைப்பு அவருடையது.

    அண்ணாமலையை, டி.ஆர்.பாலு போட்ட வழக்கிற்காக சைதப்பேட்டை நீதிமன்றம் அடுத்த மாதம், வரச்சொல்லியிருக்கிறது. அது எப்படிப் போகிறது என்று பார்க்கணும்.

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    மக்களைப் பாதிக்கும் எந்த ஒரு சிறு தவறும், மக்களிடையே பெரும் அதிருப்தியை உண்டாக்கிவிடும். பாட்டிலுக்கு 10 ரூபாய் கொள்ளை, அதற்கு தெனாவெட்டான செந்தில் பாலாஜி பதில் போன்றவை, திமுகவிற்கு மக்கள் மத்தியில் நெகடிவ் இமேஜும், செ.பா கைதை ஆதரிக்கும் போக்கையும் உண்டாக்கியிருக்கிறது என்று தோன்றுகிறது.

  3. ஆதிரையன்'s avatar ஆதிரையன் சொல்கிறார்:

    செந்தில் பாலாஜி அவர்களின் கைதை வைத்து மக்கள் அனுதாபத்தை பெற முடியாத சூழ்நிலையில் திமுக உள்ளது. ஏனெனில் அவரால், நமது மாநிலத்தின் மிகப்பெரும் வாக்கு வங்கியாக விளங்கும் குடிமகன்கள் நேரடியாகவே பாதிக்க பட்டுள்ளனர். அவர்களின் ஆதங்க பேட்டிகளை அடிக்கடி, பார்க்க முடிகிறது..
    எனவே அவருக்கு வக்காலத்து வாங்கினால், நிச்சயம் திமுகவின் மிகப்பெரிய ஓட்டுவங்கி , கொதித்தெழலாம் குடிகாரர்களை தூண்டிவிட்டு, பேட்டி கொடுக்க வைத்தாலே, ஆளும்கட்சி நிச்சயம் அலறும் ..
    பாவம் பத்திரிக்கை நிருபர்களும், இதே பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவர்களும் இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் மனநிலையில் இல்லை போலும்…
    என்னே சோதனை ….

  4. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    .
    …………………………………………………………

  5. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    ………………..

    செந்தில்பாலாஜிய எதுக்கு இவ்ளோ காக்கறீங்க…..?

    ………………..

    .
    ……………………………………………………………………………………………

  6. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கா.மை. சார், முதலமைச்சர் யாரை வேண்டுமானாலும் அமைச்சராக நியமிக்கலாமா அல்லது அதற்கு ஏதேனும் நெறிமுறைகள், சட்டங்கள் உண்டா? யாரை நியமித்தாலும் கையெழுத்து போடுவதுதான் ஆளுநரின் வேலையா? சட்டம் என்ன சொல்கிறது?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      உங்கள் கேள்விக்கு சுருக்கமான பதில் –

      தகுந்த காரணங்கள் இருந்தால் – எந்த மந்திரியை வேண்டுமானாலும் “டிஸ்மிஸ்” செய்ய
      ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது…. !!!
      (முதலமைச்சரின் பரிந்துரை இல்லாமலே…!!!)

      திருப்தியா…. ???

      அது எப்போது .. ???
      – என்பது உங்கள் அடுத்த கேள்வியானால்-
      அடுப்பில் இருப்பது இலைக்கு வரும் வரை -கொஞ்சம் பொறுமை காக்கவும்…..என்பது பதிலாக இருக்கும்…!!!

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.