……………………….

…………………………..

……………………………..

……………………………….

…………………………………..

……………………………………….

………………………………………..

……………………….
இந்தியாவின் சுற்றுலா நினைவுச் சின்னங்களில்,
வடக்கே, ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை விடவும்
தெற்கே, சென்னைக்கு அருகில் உள்ள
மாமல்லபுரத்துக்கு அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலா
பயணிகள் வந்துள்ளதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2021-22 -ம் ஆண்டிற்கான நுழைவுச்சீட்டு பெறும் நினைவுச்
சின்னங்களுக்கு வருகைதந்த பார்வையாளர்கள் பற்றிய
புள்ளிவிவரங்களை மத்திய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி 21-22-ம் ஆண்டில் 1,44,984 வெளிநாட்டு பயணிகள்
மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச்சின்னங்களை பார்வையிட்டனர்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வெறும் 38,922 வெளிநாட்டு பயணிகள் மட்டுமே
தாஜ்மகாலை பார்வையிட்டுள்ளனர்.
இதன்படி இந்த பட்டியலில் முதலிடத்தில் மாமல்லபுரமும்,
இரண்டாம் இடத்தில் தாஜ்மகாலும் உள்ளன.
நுழைவுச்சீட்டு பெறப்படும் நினைவுச்சின்னங்கள்
இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தாஜ்மஹால் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது
1631-ல் அதாவது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர்.
ஆனால், மாமல்லபுரம் குகைக்கோயில்கள் கட்டப்பட்டது தமிழகத்தில்,
பல்லவ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் 7-ஆம் நூற்றாண்டில்…
அதாவது சுமார் 1300 ஆண்டுகளுக்கும் முன்னர்…..!!!
.
…………………………………………….



தமிழகத்தின் கலைப்படைப்புகள் எண்ணிலடங்கா. ஆனால் முறையான பராமரிப்பும், பாதுகாப்பும், நுழைவுச்சீட்டு, guide facility இன்னும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். இதற்காக அரசு, guided tour நடத்தினால் (நல்ல மினி பேருந்து, தங்கும் வசதி) மிக அதிகமான பயணிகள் வருவர். தாஜ்மஹலில் (என்னைப் பொறுத்தவரையில்), ஆக்ரா கோட்டையைவிட அதிசயம் எதுவும் இல்லை. ஆனால் அங்கு உள்ள system மிக நன்றாக இருக்கிறது (நுழைவுச்சீட்டு, புகைப்படங்கள், guide, access etc.)
தனிப்பட்ட முறையில் நான் நினைப்பது, கோவிலின் கர்பக்ரஹம், முன் மண்டபம் சுற்றைத் தவிர மற்றவற்றிலும் சுற்றுலா சம்பந்தமாக வெளிநாட்டுப் பார்வையாளர்கள் வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். நுழைவுச் சீட்டு வரவில், பாதியை கோவிலுக்கும் மீதியை சுற்றுலா கணக்கிலும் வைத்துக்கொள்ளலாம்.
நம் myth, இதிகாசம் போன்றவற்றைப் பற்றியும் சுருக்கமான தகவல்களோடு, சிற்பங்களைப் பார்வையிடும் facility இருந்தால் ஏராளமானவர்கள் தமிழகத்துக்கு சுற்றுலாவிற்காக வரும் வாய்ப்பு உண்டு. இதைப்போலவே, சில கோவிலுடன் கூடிய கிராமங்களை, தமிழக கலாச்சாரம் என்ற வகையில் பேணி, அதற்கும் சுற்றுலா செல்லும் வாய்ப்புகளை உருவாக்கலாம் (பாலக்காட்டில், அக்ரஹாரம் என்று ஒரு தெருவை அப்படியே கோவிலோடு விட்டு வைத்திருப்பதைப் போல)