” கைது “என்றவுடன் தரையில் விழுந்து புரண்டார், நெஞ்சு வலி என்று கதறினார், அழுதார் – முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்,, கையொப்பமிட மறுத்தார்….!!!! ( நல்ல வேளை நடிகர் திலகம் காலத்தில் இவர் இல்லை…!!! )

……………………………………..

……………………………………..

அமைச்சர் ( கைதியான பிறகும் கூட …!!!!! ) –
செந்தில்பாலாஜி கைதின்போது
நடந்தவை குறித்து கூடவே இருந்த
அமலாக்கத்துறை வழக்கறிஞர் கூறுவது –

அமைச்சர் செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு வியாழக்கிழமை
விசாரணைக்கு வருகிறது. இது குறித்து அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் `இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம்
கூறும்போது,

“அமலாக்கத் துறையின் விசாரணைக்கு அமைச்சர் செந்தில்
பாலாஜி ஒத்துழைப்பு வழங்கவில்லை.

ஆவணங்களில் கையெப்பமிட மறுத்துவிட்டார். அதிகாரிகளிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்.

இதனால்தான் அவரைக் கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவரைக் கைது செய்யப் போகிறோம் என்று கூறியதும்,
தரையில் புரண்டு நெஞ்சு வலிப்பதாகக் கூறி கதறி
அழத்தொடங்கிவிட்டார்.
காரில் படுத்துக் கொண்டும் அழுதார்.
இதனால் வேறு வழியின்றி –
மருத்துவமனைக்கு கொண்டுசென்றோம்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ரத்த அழுத்தம் உள்ளதாக தெரிவித்தனர். பின்னர், மாவட்ட முதன்மை நீதிபதிக்கு வேண்டுகோள் விடுத்து, அவரை நேரில் மருத்துவமனைக்கே அழைத்து வந்து,
ரிமாண்ட் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சட்ட விதிகளுக்கு
உட்பட்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்றார்.

…….

https://www.hindutamil.in/news/tamilnadu/1015524-ed-special-advocate-n-ramesh-speaks-about-senthilbalaji-arrest.html

..

.…………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to ” கைது “என்றவுடன் தரையில் விழுந்து புரண்டார், நெஞ்சு வலி என்று கதறினார், அழுதார் – முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்,, கையொப்பமிட மறுத்தார்….!!!! ( நல்ல வேளை நடிகர் திலகம் காலத்தில் இவர் இல்லை…!!! )

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    பாவம் கா.மை. சார். அமைச்சர் செந்தில் பாலாஜி. Pantல் ஈரம் பார்த்தீர்களா. ரொம்பவே உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. நல்லவேளை சிபிஐ கைது செய்ததால், அவருக்கு மூன்று இடங்களில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இப்போது பைபாஸ் சர்ஜரி செய்யப்போகிறார்கள். இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும்? அடைப்புகள் கண்டுபிடிக்கப்படாமலே போய், உயிருக்கு ஆபத்தாயிருக்கும். அவர் உடல்நிலை பூரண குணமான பிறகு வடநாட்டுக்கு அழைத்துச் செல்லட்டும். எனக்குத் தெரிந்து, முதலமைச்சர் உட்பட திமுக அமைச்சர்கள் எல்லோரும் ஆஸ்பத்திரியில் , அதிர்ச்சியில், அமைச்சரைப் பார்க்க விரும்பிக் காத்திருந்தது செந்தில் பாலாஜி அவர்களுக்குத்தான். வேறு எந்த திமுக அமைச்சருக்கும் அந்த கௌரவம் கிடைக்கவில்லை.

    ஆனால் என்ன என்ன குற்றங்கள் என்பதை வெளிப்படுத்தினால்தான் நமக்கு உண்மையாகவே அமைச்சர் என்ன குற்றம் செய்தார் என்பது தெரியும். 500 டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று முயன்றதும், சட்டவிரோதமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த போலி மது பார்களை மூடியதும் குற்றமா? இல்லை டாஸ்மாக் பாட்டில்களில் சில இடங்களில் சயனைடு கலக்கப்படுவதைக் கண்டுபிடிக்க முயன்றது குற்றமா? சட்ட விரோதமாக சில கடைகளில் பாட்டில் விலைக்கு மேல் 10 ரூபாய் வாங்கும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முயன்றது குற்றமா?

  2. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    How about Enforcement Directorate –

    “சுப்ரீம் கோர்ட் சென்றாலும் ‘நோ’ ஜாமின் –
    மொத்த சொத்துக்களும் பறிமுதல்..”

    ……………

    .
    ……………………………………………

    • ஆதிரையன்'s avatar ஆதிரையன் சொல்கிறார்:

      ஒருவேளை சாதிக் பாஷா நிலைமை ஏற்பட்டால் …
      அப்படியே பழியை, பாஜகா மீது போட்டு விடலாம் …
      பத்திரிக்கைகளுக்கு 1-2 வார கொண்டாட்டம் தான் …

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.