…………………………………………………………………………..
ஆட்சிக்கு அவமானம் ….கோட்டையில், அமைச்சரின்
அலுவலகத்தில் சோதனை… அமைச்சர் கைது ஆவாரா .. ?
…………………….
.
…………………………………………………………………………….
…………………………………………………………………………..
ஆட்சிக்கு அவமானம் ….கோட்டையில், அமைச்சரின்
அலுவலகத்தில் சோதனை… அமைச்சர் கைது ஆவாரா .. ?
…………………….
.
…………………………………………………………………………….
//ஆட்சிக்கு அவமானம் // – அப்படி எனக்குத் தோன்றவில்லை. எத்தனையோ விஷயங்களில் ஏற்படாதது இந்த விஷயத்தில் ஏற்படுமா?
அதுவும் தவிர முதல்வர் அவர்களே ஐந்து வருடங்களில் சாதிக்க வேண்டியதை, இந்த இரண்டு வருடங்களிலேயே சாதித்து முடித்துவிட்டதாகச் சொல்லியுள்ளார்.
“தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை என்பது தமிழகத்தைத் தலைகுனிய வைத்துள்ளது” என்று ஸ்டாலின் அவர்கள் டிசம்பர் 21, 2016ல் சொன்னதுதான் எனக்கு ஒரு மாதிரி உள்ளது. இப்போ முதல்வருக்கு எப்படி இருக்குமோ என்று.
அது சரி… இந்த ED சோதனைகள் எத்தனை எத்தனையோ நடந்துள்ளன தமிழகத்தில். IT Raidsக்கும் கணக்கில்லை. இந்த விஷயத்தில், வெளிப்படைத்தன்மை இல்லாத வரையில் (அதாவது கமுக்கமாக வரி ஏய்ப்புக்குள்ளான பணத்தைக் கட்டிவிட்டால் அதைப் பற்றி ஒரு செய்தியும் வருமானவரித்துறை வெளியிடுவதில்லை), இத்தகைய சோதனைகள் மக்கள் மனதிலோ இல்லை அரசியல்வாதிகளுக்கோ எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாது. சிலர் 450 கோடி வருமான வரி ஏய்ப்புப் பணத்தைச் சிலர் சிங்கப்பூர் வழியாகக் கட்டிவிட்டனர் என்று சில இடங்களில் செய்தித்துணுக்கை (gossip or தங்களுக்குத் தெரிந்த விஷயத்தைப் பகிர்ந்திருக்கிறார்கள்)ப் பார்த்தேன்.
.
புதியவன்,
இது வருமானவரி துறை அல்ல –
Enforcement Directorate – Money Laundering Case-
சுலபத்தில் விட மாட்டார்கள்.
மணீஷ் சிசோதியா பாணியில்
உள்ளே தள்ளுவார்கள் என்று தோன்றுகிறது…
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அதனால்தான் செந்தில் பாலாஜிக்கு வக்காலத்து வாங்கி அவசர அவசரமாக, கார்கே அறிக்கைவிட்டிருக்கிறார். இனி என்ன..லோகல் காங்கிரஸ் தலைவர்களும் அமைச்சரை ஆதரித்து அறிக்கை கொடுப்பார்கள். (சென்ற ஆட்சியின்போது எல்லோரும் சேர்ந்து இதே அமைச்சரைக் குற்றம் சொன்னார்களே, கவர்னரிடம் புகார் கொடுத்தார்களே, தலைமைச் செயலகத்தில் ED வந்ததை ஆதரித்தார்களே என்பதை நாம் எல்லோரும் மறந்துவிடவேண்டியதுதான்) நல்லவர்களை ஒடுக்குவதற்காக ED ஐ பாஜக பயன்படுத்துகிறது என்கிறார், இந்த நல்லவர். இதற்கிடையில் எந்த எந்த நிலங்களை அபகரிக்கலாம் என்பதை ஆராய, கர்நாடகாவிற்கு ஒரு குழு வந்துள்ளது என்று படித்தேன்
…
அடேடே விளக்கம் –
……………………..
அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்துக்கு வெளியில்
செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி,
“முதல்வர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காமல்
பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுச்
சென்றிருக்கிறார் அமித் ஷா. பா.ஜ.க-வுக்கும்
அ.தி.மு.க-வுக்கும் இடையே கடந்த இரண்டு நாள்களாக
மோதல் நிலவுகிறது. அதை திசைதிருப்பவே
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில்
சோதனை நடக்கிறது.
முந்தைய ஆட்சியில் நடந்தவை
குறித்தே சோதனை நடக்கிறது…👌👌👌👌👌👌👌
ஆனால், தி.மு.க ஆட்சியில் ஊழல் நடந்தது
என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தவே
இப்போது திட்டமிட்டு ரெய்டு நடத்துகின்றனர்!”
என்றார்.
………..
https://www.vikatan.com/government-and-politics/politics/enforcement-directorate-officers-make-raid-in-dmk-minister-senthil-balaji-govt-house?pfrom=home-main-row&utm_source=indirect&utm_medium=email_daily_newsletter&utm_campaign=daily_newsletter_13th_june_2023
ஆர்.எஸ்.பாரதி என்ன சொல்ல வருகிறார்? செய்திகளிலும் ஏகப்பட்ட குழப்பங்கள். சேகர், செ.பா நினைவிழந்து இருக்கிறார் என்கிறார். உதயநிதி, அவர் மருந்து சாப்பிட்டிருக்கிறார் என்கிறார். முதலமைச்சருடன் அவர் உட்கார்ந்து பேசும் படம் வெளியாகியிருக்கிறது. செ.பா. மனைவி, ஆட்கொணர்வு மனு உயர்நீதி மன்றத்துக்கு அளித்திருக்கிறார் (கணவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என்று)
செ.பா. ஊழல் செய்தார், ஆட்சிக்கு வந்த உடன் அவர் கைதாவார் என்று ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பரப்புரைகளில் சொன்னார். (2016களில்).
இப்போ, கைது செய்தது தவறு, அச்சுறுத்தல் என்று சொல்லுகிறார். கைது செய்தது மனித நேயமற்றது என்கிறார். ரெய்டே திட்டமிடப்பட்டது என்கிறார். திட்டமிடாமல் எப்படி ரெய்டு நடத்துவது?
எதுடா சாக்கு என்று காத்திருந்த கூட்டணி சகாக்கள் (அப்போதானே தங்களுக்கு சீட் ஒதுக்குவது நடக்கும்), இந்தக் கைதைக் கண்டித்திருக்கின்றன.
பார்க்கலாம் வேறு என்ன என்ன காட்சியமைப்புகள் இருக்கின்றன என்று.
என்னதான் ஆனாலும், நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து தூக்குவாரா , என்று தான் புரியவில்லை …..
இவருக்கு இணையாக , அடிக்கும் கொள்ளையில் , ஒரு பங்கை சரியாக கப்பம் கட்டும் அளவிற்கு நாணயமான ,இன்னொரு நபரை எங்கு போய் தேடுவது ..
புதிது, புதிதாக யோசித்து, திட்டங்களை தீட்டி, டாஸ்மாக் வருமானத்தை பெருக்கும் அளவிற்கு , business model நன்கறிந்த இன்னொரு நபரை எவ்வாறு தேடுவது …
ஏற்கனவே ,நெஞ்சு வலியில் துடித்து கொண்டிருக்கும் அவருக்கு, மேலும் அதிர்ச்சி கொடுப்பது , ஆபத்தானது
என்னதான் செய்ய போகிறாரோ , முதலமைச்சர் …