பெண்ணும், புலிகளும் …!!! மாண்டே கார்லோ திருவிழா …!!!

………………………………………………………

………………………………………………………

(மாண்டே கார்லோ …)

……………………………………………………….

இந்தியாவில், வனவிலங்குகளை பாதுகாக்கிறோம் பேர்வழி என்று,
சர்க்கஸ் கலை/தொழிலை, கிட்டத்தட்ட நாசம் செய்து விட்டார்கள்….

சிறு வயதில், சர்க்கஸ் என்றால் எவ்வளவு ஆர்வத்தோடு, ஆவலோடு
காத்திருந்து பார்ப்போம்… இப்போதெல்லாம் -ஏதோ பேருக்குத் தான்.

அழிந்து வரும் இந்த கலையை /தொழிலை காக்க, புத்துயிரூட்ட
அரசாங்கம் ஆர்வம் கொண்டு உரிய வழிகளை வகுக்க வேண்டும்…

…………………………………………………………..

கீழே – 2018-ல் Monte-Carlo -வில் நடந்த 42-வது சர்வதேச
சர்க்கஸ் திருவிழாவிலிருந்து ஒரு சுவாரஸ்யமான பகுதி –


அந்தப் பெண் தான் அத்தனை புலிகளையும் எவ்வளவு சாகசத்தோடு
அடக்கியாள்கிறார் பாருங்களேன் –

……………………………..
Carmen Zander – The Queen of Tigers –
42nd International Circus Festival
of Monte-Carlo 2018
…………………………..

.
…………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to பெண்ணும், புலிகளும் …!!! மாண்டே கார்லோ திருவிழா …!!!

  1. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    Just a News item for information only –

    …………………………………………….

    இங்கு 1 வருடம் வெறும் 23 மணி நேரம்:
    தொலைதூர கிரகத்தில் தண்ணீர்;
    ஜேம்ஸ் வெப் கண்டுபிடிப்பு

    ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள தொலைதூர கிரகத்தில் தண்ணீர் ஆதாரங்கள் (நீராவி) இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது.

    WASP-18 b என அழைக்கப்படும் இந்த கிரகம் பூமியில் இருந்து சுமார் 400 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இது முதன்முதலில் 2009 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கிரகம் மிகவும் சூடான வாயு கிரகமாக உள்ளது. இது வியாழனை விட 10 மடங்கு பெரியதாக உள்ளது. சூரியனை ஒருமுறை பூமி சுற்றிவர 365 நாட்கள் ஆகும் நிலையில், இந்த கிரகம் அதன் நட்சத்திரத்தை வெறும் 23 மணி நேரத்தில் சுற்றி 1 வருடத்தை நிறைவு செய்கிறது.

    அதன் நட்சத்திரத்திற்குப் பின்னால் கிரகத்தின் போக்குவரத்து மற்றும் அதைத் தொடர்ந்து மீண்டும் தோன்றிய போது, ​​ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி அதன் வளிமண்டலத்தில் நீராவியைக் கண்டறிந்தது.

    நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள கிரகத்தின் இயக்கங்களின் வெப்பநிலை வரைபடத்தை உருவாக்குவதன் மூலம், விஞ்ஞானிகள் நட்சத்திரம் மற்றும் கிரகம் இரண்டிலிருந்தும் ஒருங்கிணைந்த ஒளியை பகுப்பாய்வு செய்ய முடிந்தது. கிரகம் அதன் பின்னால் செல்லும்போது நட்சத்திரத்தின் ஒளியை மட்டுமே பயன்படுத்தி அவர்கள் தங்கள் அளவீடுகளை கண்டறிந்தனர்.

    .
    ……………………………………………..
    .

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    //சிறு வயதில், சர்க்கஸ் என்றால் எவ்வளவு ஆர்வத்தோடு, ஆவலோடு
    காத்திருந்து பார்ப்போம்… இப்போதெல்லாம் -ஏதோ பேருக்குத் தான்.//

    //அழிந்து வரும் இந்த கலையை /தொழிலை காக்க, புத்துயிரூட்ட
    அரசாங்கம் ஆர்வம் கொண்டு உரிய வழிகளை வகுக்க வேண்டும்//

    இந்தக் கருத்துகளிலிருந்து நான் மாறுபடுகிறேன் கா.மை. சார்.

    1. கால மாற்றம், ஒவ்வொன்றின் மீது நாம் வைத்திருக்கும் ஆர்வத்தை மாற்றும். நேற்றுக்கேட்ட இசையை இன்றைய தலைமுறை ரசிப்பதில்லை. நேற்றைய ரசனை மிகுந்த நிகழ்வுகள் அடுத்த தலைமுறைக்கு ரசனையாக இருக்காது.

    2. விலங்குகள், அவற்றின் வாழ்விடம், இயல்புகள் என்று பல்வேறு தொலைக்காட்சிகளில் தொடர்ந்து நிகழ்வுகள் வருகின்றன. இது தவிர அவற்றை, நமக்குப் பண வசதி இருந்தால் நேரிலேயே சென்று களிக்கலாம் (சாதாரண மிடில் கிளாஸ், வன உயிர் பூங்காக்களுக்குச் செல்லலாம், பணம் நிறைய இருந்தால், இந்தியாவில் இருக்கும் பாதுகாக்கப்பட்ட பூங்காக்களில் சஃபாரி செல்லலாம், பணம் கொட்டிக் கிடந்தால் ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்று நேரிடையாக வன சஃபாரி மேற்கொண்டு, இவற்றைக் காணலாம்). அதனால் வனவிலங்குகளுக்காக சர்கஸ் செல்லவேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது.

    3. வன விலங்குகளைப் பயிற்றுவிக்கிறோம் என்று இவர்கள் நடத்துவது எனக்கு மிகுந்த வருத்தத்தைத்தான் விளைவிக்கிறது. நான் கடைசியாகப் பார்த்த சர்கஸ் 81ல். பாவம் விலங்குகள். தாய்லாந்தில் நான் பார்த்த யானைகள் சஃபாரியும் எனக்குக் குற்ற உணர்வைத் தந்தது. எந்த வனவிலங்கையும் துன்புறுத்தாமல் கற்றுத் தர முடியாது. அவர்களின் இயல்பை அழித்துத்தான் அவற்றை விளையாடும் பொருளாக நாம் மாற்றுகிறோம்.

    வன விலங்குகள்/பறவைகள் இல்லாமல் செய்யப்படும் சாகசங்கள் நிரம்பிய சர்கஸ் வரவேற்கத்தக்கதுதான் (பெரிய கூண்டினுள் மோட்டர் சாகசம் போன்று)

  3. Tamil's avatar Tamil சொல்கிறார்:

    வன விலங்குகள்/பறவைகள் இல்லாமல் செய்யப்படும் சாகசங்கள் நிரம்பிய சர்கஸ் வரவேற்கத்தக்கதுதான்

    >> True.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.