நேஷனல் சேனல்களில் – அண்ணாமலை கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லதல்லவா …?

……………………………………………………

…………………………………………………………………..

அகில இந்திய அளவில், தேசிய கட்சிகளின் செயல்பாட்டு முறைகள் அனைவரும் அறிந்ததே …

இந்தியா டுடே டிவி நிகழ்ச்சியில் ராஜ்தீப் சர்தேசாயுடன் பேசும்போது –

‘ நான் நினைத்தால் உடனே மோடிஜியுடன் பேச முடியும் ..ஏனெனில்,
பிஜேபி-யில் நான் ஒரு கார்யகர்ததா -அவரும் ஒரு கார்யகர்த்தா ‘ –
என்று அண்ணாமலை சொல்வது –

அண்ணாமலை அவர்கள் கொஞ்சம் அதிகமாகவே அலட்டிக்கொள்வது
போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது…

அவர் நினைத்தால் அதிகபட்சம் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அவர்களிடம்
பேசலாம்… அவ்வளவு தான்.

தேசிய கட்சிகள் எல்லாவற்றிலுமே கிட்டத்தட்ட ஒரே நிலை தான்.
கீழே எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம்…ஆனால், டெல்லி தலைமை
ஒரு முடிவெடுத்து விட்டால், கப்சிப் என்று சகலத்தையும்
மூடிக்கொண்டு தலைமைக்கு ஒத்து ஊதுவதை தவிற வேறு
வழி இல்லை. எடப்பாடியார் விஷயத்தில் அண்ணாமலை
அவர்களுக்கு அது தானே நடந்தது …..????

இது பார்வையாளர்களுக்கும் தெரிந்ததே…

சில சமயங்களில் தேவை இல்லாமல் வேண்டாததை பேசி தன் நிலையை
அண்ணாமைலை கெடுத்துக் கொள்கிறாரோ என்று தோன்றுகிறது…

கீழே சம்பந்தப்பட்ட காணொலி பகுதி …..

……………………..

.
………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to நேஷனல் சேனல்களில் – அண்ணாமலை கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லதல்லவா …?

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    அண்ணாமலையைக் குறிவைத்து எல்லோரும் பேசும்போது, அது அவருக்கு டென்ஷன் உண்டாக்கி, சில நேரங்களில் தேவையில்லாததையெல்லாம் பேசிவிடுகிறார் என்று நினைக்கிறேன். அண்ணாமலையின் இன்றைய strength, அவர் பேசும் முறை, பிரச்சனையை அணுகும் விதம், பிறருக்குப் புரியும்படி சொல்வது, நியாயமான பேச்சு என்று பலரும் நினைக்கும் விதத்தில் இருப்பது. அவரது கட்சிக்காரர்களின் புகைச்சல் பெருமளவு வெளியில் தெரியாமல் உள்ளுக்குள் குமைவது, அண்ணாமலைக்கு உள்ள மோடி/அமித்ஷா மற்ற தலைவர்களின் ஆதரவு. இந்த கட்சி ஆதரவு இல்லை என்றால், எல்லாரும் எஸ்.வி.சேகர் மாதிரி வெளிப்படையாகப் பேசி, கட்சியைப் பற்றிக் கவலைப்படாமல், தனிநபர் தாக்குதல்களில் இறங்கிவிடுவார்கள். இதை அண்ணாமலை மனதில் கொள்ளவேண்டும்.

    கார்யகர்த்தா என்ற பேச்சும் அப்படி ‘தேவையில்லாமல்’ பேசிய பேச்சுதான். எந்த ஒரு பெரிய கம்பெனியையும் போல, தேசியக் கட்சித் தலைமையையும் ரொம்பவே நம்பி கெத்தாக இருக்கக்கூடாது. அவங்களுக்கு எது நல்லதோ அந்த முடிவை எடுக்கும்போது வேறு யாரைப்பற்றியும் அவங்க loyalty பற்றியும் கவலைப்படமாட்டாங்க.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.