” மாடர்ன் லவ் ” ஆந்தாலஜி – இளையராஜாவுடன் ஒரு கலந்துரையாடல் …

…………………………………………………

………………………………………………….

அண்மையில், ஜூபிலி என்று ஒரு ஹிந்தி தொடர் அமேசான் ப்ரைமில் வந்தது. 1945 முதல் 1955 வரையிலான காலகட்டத்தில் ஹிந்தி திரையுலகின் பின்னணியில் – அதாவது அந்த காலகட்டத்தில் வெளிவந்த முக்கிய ஹிந்தி திரைப்படங்களை தயாரித்தவர்கள், இயக்கியவர்கள், நடித்தவர்கள் ஆகியோரின் நிஜ வாழ்க்கையை விவரமாக பின்னிப் பிணைந்து எழுதப்பட்ட கதை…..அந்தக்கால பிரபலங்களான, தேவிகா ராணி, அசோக் குமார், தேவ் ஆனந்த், திலீப்குமார், ராஜ்கபூர் போன்றவர்களின் பின்னணிக்களத்தில் உருவானது….

அந்த ஜூபிலி தொடரில், இசை ஒரு அற்புதம் … அது அப்படியே பழசை பிரதிபலிக்கும்…. ஆனால் நிஜத்தில் அவை அந்த பழைய பாடல்கள் அல்ல….புதிதாக போடப்பட்டவை… ஆனாலும் ஒவ்வொரு பாடலும் பழசை நிச்சயம் ஞாபகப்படுத்தும்.

சரியாகச் சொல்ல வேண்டுமானால், அந்த இசை என்னை, என் மனதை, ரொம்பவும் படுத்தி விட்டது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், அந்த 50-60-களில் 10-15 வயதில், நான் ஹிந்தி பாடல்களுடன் ஒன்றிப்போயிருந்தேன். அப்போது வடக்கே இருந்தேன். நேரம் கிடைக்கும்போதெலாம், ஹோட்டல், டீக்கடை வாசல்களில் நின்றுகொண்டு, ரேடியோ சிலோனில் அப்போது ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஹிந்தி பாடல்களை கேட்டுக்கொண்டிருப்பேன். அவ்வளவு ஆர்வம் அந்த பாடல்களின் மீது.

அண்மையில் ஜூபிலியை பார்க்கும்போது, என் பழைய சிறு வயது நினைவுகளை எல்லாம் மீண்டும் கொண்டு வந்து அது என் மனதை நிரப்பியது….ஒவ்வொரு பாடலும், அந்த கால கட்டத்தில் நான் அப்போது எங்கே இருந்தேன் …… என்ன பண்ணிக் கொண்டிருந்தேன் … என்பதையெல்லாம், இதயத்தின் ஆழத்திலிருந்து மீண்டும் தோண்டியெடுத்து நினைவுக்கு கொண்டு வந்தது.

இந்த புதிய மாடர்ன் லவ் ஆந்தாலஜியில், இளையராஜா அதே போன்று, புதிதாக பாடல்களை போட்டிருக்கிறார்…. ஆனால், அவை அத்தனையும் அப்படியே அவரது துவக்க காலங்களை நினைவுபடுத்துகின்றன…..

அண்மையில், சில வருடங்களாகவே, இளையராஜாவுடன் பேசுவது யாருக்குமே சிரமமாக இருக்கிறது…. ஏடாகூடமாகவே பேசுகிறார். எல்லாருக்கும் வயதானால் பக்குவம் கூடும்… ஆனால் இவரைப்பொறுத்த வரை அது தலைகீழாக இருக்கிறது.

இந்த கலந்துரையாடலில், அந்த சிறுபெண் – பெயர் எனக்கு தெரியவில்லை …மிகத்திறமையாக இளையராஜாவை சமாளித்து, அவரைக்கிளறி நிறைய விஷயங்களை வெளியே கொண்டு வருகிறார்…. கூடவே இருப்பவர்களும் கூட…

– “மாடர்ன் லவ் சென்னை ” ஆந்தாலஜி பற்றி நான் இங்கு விமரிசிக்க விரும்பவில்லை;

கீழே காணொலி –

…………………………………………………….

.

……………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to ” மாடர்ன் லவ் ” ஆந்தாலஜி – இளையராஜாவுடன் ஒரு கலந்துரையாடல் …

  1. Raghuraman's avatar Raghuraman சொல்கிறார்:

    Sir, you may be right that he has not mellowed down with age. But look at from other angle. He has been identified as cheap target. Why do people ask opinion from him on every thing and every time he is out?

    People like James Vasanthan is looking for opportunity and he gets in with Ilayaraja when ever there is scope. It started when he reused his song for one of his film and notably there is no other song was hit in that film.

    Even now Ilayaraja is standing for 5 hrs in the concerts and if there is any disturbance, he gets irked. I love to understand the use of instruments in his concerts – but due to whistles and other diversions we lose the nuances about his music.

    For me – he is master class and there is no need to disturb him on everything. Let him live in peace. He is 80 +. He lives for his values and he is firm on that.

    Now you notice that Vairamuthu is not having much options and pulling him about his interaction with Jayakanthan.

    Actually, Jayakanthan was very close to Ilayaraja and they were open in their relationship. Ilayaraja has guts to say that he cannot attend the marriage – instead of accepting the invitation and not going. That would have treated as disrespect.

    Same car with KB. When KB reused the mixing without his permission, he raised questions and stopped working with him. There are references that Rajini tried to convince, but Ilayaraja was firm.

    I can quite many instances like this.

    Regards

    Raghuraman N

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ..

      ரகுராமன்,

      உங்களுக்கே தெரியும் இளையராஜா அவர்களை
      எனக்கு எந்த அளவுக்கு பிடிக்கும் என்பது .

      என் வருத்தம் – கண்டவர்கள் எல்லாம் அவரை
      விமரிசிக்கும் அளவுக்கு இடம் கொடுக்கிறாரே
      என்பது தான்.

      .
      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        இளையராஜா அவர்களை அவரது இசையை வைத்தே மதிப்பிட வேண்டும். அவரது குணத்தை வைத்து அல்ல.

        அவருக்கு என்று தனிப்பட்ட குணம் இருக்கிறது. சட் சட் என்று கோபப்படும், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொல்லும், நான் எதிர்பார்த்தபடி நடந்துகொள்ளவில்லை அதனால் படத்திற்கு இசையமைக்கமாட்டேன் என்ற பிடிவாதம் போன்றவை அவரிடம் உண்டு. தனக்குத்தானே ஒரு வட்டம் போட்டுக்கொண்டு, மற்றவர்களிடம் எளிதாகப் பழகாத குணம்.

        அதனால் என்ன? இளையராஜாவையோ, எம்.எஸ்.வியையோ, இராமனாதனையோ மற்றவர்களையோ அவர்கள் குணத்துக்காக நாம் ரசிப்பதில்லை. அவர்களது இசைக்காகவும் அந்த ஞானத்திற்காகவும்தான். இதற்கும் மேலே, அவர்கள் குணமும் நன்றாக, மிகப் பணிவுடையதாக இருந்தால், நமக்கு மேலும் மகிழ்ச்சி. அத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டுமே தவிர, இவர் கர்வம் உள்ளவர், எடுத்தெறிந்து பேசுவார், குடிகாரர், ஸ்த்ரீ லோலர் என்றெல்லாம் தனிப்பட்டவற்றை வைத்து நாம் எடைபோட வேண்டாம் (ஆனால் அவர்கள் பொதுவெளியில் நல்லவர்கள் போல் நடித்து, கெட்டபழக்கம் இல்லாதவர்கள் அவற்றை வெறுப்பவர்கள் என்பதுபோல் நடந்துகொண்டு, அந்தரத்தில் இத்தகைய குணங்களோடு இருந்தால் விமர்சிக்கலாம், இதனால்தான் ஜேம்ஸ் வசந்தன் மற்றும் வயிர முத்து போன்றவர்கள் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள், அவர்கள் திறமையைத் தாண்டி)

        திரையுலகம் என்பது வியாபாரம் சம்பந்தமானது. அதை வைத்து திறமையை எடைபோடக் கூடாது. அகில இந்திய மார்க்கெட்டுக்கு ஏ.ஆர்.ரகுமான் அளவிற்கு இன்று இளையராஜா இல்லை. (ஏ.ஆர்.ஆர்-6 கோடி, இளையராஜா 1 கோடி என்கிறார்கள்). அதனால் என்ன? பவழம் பாக்கெட்டுக்குள் இருந்தால் அதன் மதிப்பு குறைந்துவிடுமா என்ன?

  2. ஆதிரையன்'s avatar ஆதிரையன் சொல்கிறார்:

    மக்களால் கொண்டாடப்படும் நான், ஏன் உயரிய விருதுகளால் போதுமான அளவு கொண்டாடப்படவில்லை என்பதின் வெளிப்பாடே, அவரின் இந்த குணாதிசியங்களுக்கு காரணமாக இருக்கலாம். மேலும், இசை எனும் ஆன்மாவை வெளிப்படுத்தும் கலையின் மீதான , சமீக கால போக்குகளை அவரை போன்ற ஆன்மீக வாதிகளால் ஜீரணிக்க முடியவில்லை .சத்தங்களையும், கூத்தாட்டங்களையும் ரசிக்கும் அளவிற்கு மக்கள் கடைசியில் தள்ளப்பட்டு விட்டார்கள்.இதை அவர் தட்டி கேட்கும் பொழுது, அது மற்றவர்களுக்கு தலைக்கனமாக படுகிறதோ, என்னவோ …
    பொன்னியின் செல்வன் போன்ற பிரமாண்ட படைப்புகளுக்கு, இவரின் இசை அமைந்திருந்தால், அது நிச்சயம் வேறு பரிணாமத்தை அடைந்திருக்கும். எல்லாம் காலத்தின் கோலம்…நவீனம் , ஆன்மாவை ஏற்றுக்கொள்வதில்லை .

  3. சேந்தன் அமுதன்'s avatar சேந்தன் அமுதன் சொல்கிறார்:

    அவர் தொனி எப்படி பேசினாலும், அவர் கூறும் கருத்தில் குறை காண முடியுமா. நிச்சயமாக முடியாது.
    அவர் அவராகவே இருக்கிறார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.