…………………………………………
போன தலைமுறையினருக்கு விட்டலாசார்யா பாணி கதைகள்
பற்றி நன்கு தெரிந்திருக்கும். மந்திர, தந்திரங்களுக்கு புகழ் பெற்ற
அந்த சினிமாக்கள் இன்னமும் பலர் நெஞ்சில் பசுமையாக
நினைவில் இருக்கின்றன…. இவற்றில் சிலவற்றை புராணக்கதைகள்
என்றும் சிலர் கதை கட்டுவதுண்டு.
இவற்றைப்பற்றி விரிவாக தெரிந்துகொள்ள விரும்பும் இளைய தலைமுறை –
கணவனே கண்ட தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம்,
குணசுந்தரி, பாதாளபைரவி, பகடைரங்கன் மாதிரி பழைய
மந்திர தந்திர கதைகள் நிறைந்த பழைய தமிழ் சினிமாக்களை
தேடி பார்க்கலாம்.. ஆனால், இன்றைய கால கட்டத்தில் அவற்றை
15 நிமிடங்களுக்கு மேல் பார்ப்பது இயலாத காரியம்.
நம் நாட்டில் மட்டும் தான் விட்டலாச்சார்யா கதைகள் என்று
எண்ணி நாம் பெருமையோ – சிறுமையோ கொள்ள வேண்டிய
அவசியம் இல்லாமல், மேற்கத்திய நாடுகளிலும் இது போல்
பல கதைகள் இருக்கின்றன. பல நூற்றாண்டுகளாக உலவி வரும்
கதைகள் இவை…
இவற்றைப்பற்றி, விகடன் இதழில் ஒரு தொடர் வந்திருந்தது.
கதைகள் எல்லாம் படுபோர்… அவற்றில் சுவாரஸ்யமும் இல்லை….
விறுவிறுப்பும் இல்லை….
ஆனால், அவற்றில் வெளிவந்திருந்த சித்திரங்கள் வித்தியாசமாக, அற்புதமாக அமைந்திருந்தன… எனவே, அவற்றிலிருந்து சில
படங்களை மட்டும் விகடன் தளத்திற்கு நன்றி தெரிவித்துக்கொண்டு
இங்கு பதிப்பிக்கிறேன்….நண்பர்களும் ரசிக்க…
இந்த கதையில் வரும் கதாநாயகியான அழகி யுரோபா’வின்
பெயரை அடுத்தே ஐரோப்பாவிற்கு அந்த பெயர் உருவானது என்றும்,
யுரோபாவின் பெயர் வியாழனின் 16 நிலவுகளில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றிற்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் கதை கூறுகிறது….
யுரோபா’வை காதலித்த, கடவுள்களுக்கெல்லாம் கடவுளான (..!!!)
ஜீயஸ் அவளை காளை வடிவில் உருமாறி கடத்திச் சென்றதாகவும்
அவளைப்பிரிந்து வாழ முடியாத ஜீயஸ் என்கிற கடவுள் அவளை
டாரஸ் விண்மீன் கூட்டமாக படைத்து விட்டதாகவும் செல்கிறது ரீல்…..
ஐரோப்பியக் கண்டத்தின் தாயாகக் கருதப்படும் யுரோபா, காளை வடிவிலிருந்த காதலன் ஜீயஸின் முதுகில் ஏறி பயணிக்கும்
அழகிய காட்சி யூரோ நாணயத்தில் ஓவியமாகப் பதிக்கப்பட்டுள்ளது…
இந்த கதையில் வரும் காட்சிகளை பிரதிபலிக்கும்
மிக அழகான படங்கள் கீழே –
……………………………………

……………………..

…………………………

…………………….

…………………………….

…………….

……………………

………..

………….

…………………

……..
…………………………………………………………………………………………………………………………………………………..



….சபாஷ் பிரேமலதா விஜய்காந்த் –
தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்
செய்தியாளர்களிடம் பேசும்போது,
“எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவில்லை என்று
செங்கல்லைத் தூக்கிக் காட்டியவர்கள் பிரதமரிடம்
கைகுலுக்கி சிரித்துப் பேசியுள்ளனர்.
-இது தொடர்பாக திமுகவின்
கூட்டணிக் கட்சித் தலைவர்கள்
கருத்து தெரிவிக்க வேண்டும்”
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/why-did-dmdk-slams-dmk-dr-krishnasamy-says-dmk-made-a-historical-mistake-506790.html?story=1
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி –
2017 முதல் 2021 வரை ‘Go Back Modi’ ட்ரெண்ட் செய்து அரசியல் அறுவடை செய்தவர்கள் இப்பொழுது ‘Welcome Modi’ முழக்கமிட்டு, பிரதமரின் மணிக்கட்டு திருகிப் போகிற அளவிற்கு குடும்ப சகிதமாக திடீர் பாசத்தை பொழிகிறார்கள்.
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/why-did-dmdk-slams-dmk-dr-krishnasamy-says-dmk-made-a-historical-mistake-506790.html?story=3
பிரேமலதா – இதற்கு ‘அரசியல் நாகரீகம்’ என்று உபீஸ் பதில் சொல்லுவார்கள். இந்த ‘அரசியல் நாகரீகம்’ முன்பு ஏன் இல்லை என்று கேட்டால், ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்று சொல்வாங்க. நியாயமாப் பார்த்தால், பிரதமர்தான் திமுகவினரின் செயல்களுக்கு அரசியல் ரீதியாக எதிர்வினையாற்றணும் (2ஜி, பிஎஸெனெல் கேபிள் திருட்டு, தமிழக ஊழல், அநியாயங்களுக்கு துணை போகாததால் கவர்னரை மிரட்டுவது போன்ற செயல்களுக்கு). ஏனோ பாஜக தலைமை சரியாக ரியாக்ட் செய்வதில்லை என்ற எண்ணம் தோன்றுகிறது. ஒருவேளை, காங்கிரஸை கடைசி நேரத்தில் கழற்றிவிட வேண்டும் என்ற ஒப்பந்தமா? இதை எப்படி திமுக செய்யும்? (அப்படிச் செய்தால் திமுக நிச்சயமாக வெற்றிபெறாதே)
கிருஷ்ணசாமி டாக்டர் பட்டம் பெற்றிருந்தாலும், பருவநிலை பற்றிப் படித்திருக்கமாட்டார் போலிருக்கிறது. கோடை காலத்தில் வெம்மை, மழைப் பருவத்தில் பொழிவது, பிறகு குளிர், பிறகு வசந்தம் என்று காலநிலை மாறும். திமுகவும் முதலில் ‘ஒன்றியம்’ என்ற கோடைக் காலம், பிறகு ‘வெள்ளைக் குடை’ என்ற கொத்தடிமை மழைக்காலம், பிறகு ‘கைகுலுக்கி பல்லிளிக்கும்’ குளிர்ஜுரக் காலம். வசந்தகாலம் வராமலா போய்விடும்? யாருக்கு வசந்தகாலமாக இருக்கும் என்பதைத்தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
இவைகள் மேற்கத்தைய என்று சொல்லக்கூடாது. கிரேக்க புராணக் கதைகள் என்று சொல்லலாம். அகிலிஸ் தசை நாண் என்று கதைகளை ஒட்டிய பெயரும் மருத்துவ உலகில் கொடுத்திருக்கின்றனர்.
நம் புராணக் கதைகளை, நாம் இந்து மத வழி வந்ததால் நம்புகின்றோம். கிரேக்க புராணங்கள் ரீல் என்று சொல்லிவிட முடியாது. சனாதன தர்ம புராணங்கள்தாம் காலத்தால் முற்பட்டவை.