EVENING POST – ( 5 minutes video ) உலகிலேயே பெரிய “பாஸ்மதி” அரிசி ஆலை –

……………………………

……………………………….

சுவாரஸ்யமான, தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்
அடங்கிய ஒரு காணொளி –

……………….

.
…………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to EVENING POST – ( 5 minutes video ) உலகிலேயே பெரிய “பாஸ்மதி” அரிசி ஆலை –

  1. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    மிக சுவாரஸ்யமான வீடியோ! அரிசியை அவர்கள் இரண்டு வருடம் வரை வைத்து விற்பனை செய்கிறார்கள் என்பது புதிய செய்தி!

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இந்த வீடியோ எனக்குப் பழைய நினைவுகளைக் கொண்டுவந்தது.

    நாம்தான் ஒவ்வொன்றின் விலையைப் பார்த்து வாங்கும் டைப் ஆச்சே. மிடில் ஈஸ்டுக்குச் சென்றிருந்த புதிதில் நம்மூர் அரிசியைவிட, பாஸ்மதி அரிசி விலை குறைவு என்பதையும், அதைவிட பாகிஸ்தான் பிராண்ட் பாஸ்மதி அரிசி விலை மலிவு என்பதையும் கண்டு (கிலோ 25 ரூபாய்), பாகிஸ்தான் பாஸ்மதியையே வாங்க ஆரம்பித்தேன். அதிலும் மேங்கோ பிராண்ட் பாஸ்மதி அரிசிதான் ரொம்ப காலமாக வீட்டில் உபயோகித்தேன்.

    இந்தியா கேட் பாஸ்மதி அரிசி எப்போதுமே விலை அதிகம் (குறைந்தபட்சம் இரண்டரை மடங்கு அல்லது அதற்கு மேல்). எங்கள் கம்பெனி டிஸ்டிரிபியூட் செய்த டில்டா பாஸ்மதி அரிசியையும் நான் வாங்கமாட்டேன். 2012ல் என்னுடைய எடை குறைப்புக்காக வி.எல்.சி.சியில் சேர்ந்த பிறகு, பாஸ்மதி சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். வீட்டிற்கு சோனா மசூரி அரிசிதான். ஸ்டாஃப் டிஸ்கவுண்ட், ஆஃபர் எல்லாம் இருக்கும் காலத்தில் மாத்திரம், புலாவ் போன்றவைகள் செய்ய டில்டா பாஸ்மதி அரிசி வாங்குவேன். ஆனாலும் மிடில் ஈஸ்டில் இருந்தபோது வித வித பாஸ்மதி அரிசிகளை உபயோகித்துப் பார்த்திருக்கிறோம்.

    இப்போது சீரகச் செம்பா, பாஸ்மதி அரிசியைவிட விலை அதிகம்

    பஞ்சாப் பிரிந்தபோது, பாகிஸ்தான் பகுதியிலிருந்த பஞ்சாபிலிருந்து பாஸ்மதி அரிசி விதைகளைத் திருடி வந்து, இந்திய பஞ்சாப் பகுதியில் பாஸ்மதி விளைச்சலை மிக அதிகமாகப் பெருகச் செய்த கதையை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

    மிடில் ஈஸ்டில், 1993லிருந்து 2010வரை, எந்தப் பொருளும் விலை ஏறி நான் பார்த்ததில்லை. 2010க்குப் பிறகுதான் மார்ஜினலாக விலை ஏற்றம் ஆரம்பித்தது. நான் சென்ற புதிதில் 10500 திர்ஹாம் 1 லட்சம் ரூபாய் என்று இருந்த நிலை, நான் கிளம்பும்போது 5000 திர்ஹாம் 1 லட்சம் ரூபாய் என்று மாறியது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.