………………………………..

……………………………………………………………………………………
தந்தி தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஒரு காணொளி
கீழே – இது பற்றிய நமது கருத்துகள் அதற்கு கீழே –
………………………………………………………………
…………………………..
தளராத தன்னம்பிக்கை, ஒரு லட்சியத்தை முன்வைத்து,
எத்தகைய இன்னல்களும், எகத்தாளங்களும் ஏளனங்களும்
எதிர்வந்தாலும், புன்னகையோடு அவற்றை எதிர்கொண்டு,
தொடர்ந்து கடைசி வரை தன் லட்சியத்தின் பின் சென்று,
வெற்றிகரமாக முடிப்பது – இவை எல்லாம் ராகுல்காந்தியின்
மனோபலத்தையும், உடல் வலிமையையும், செயல் திறனையும்
நிரூபித்துக் காட்டுகின்றன.
சுமார் 4000 கிலோமீட்டர் தூரம், பலவேறு மாநிலங்களூடே
பயணித்து, தன்னுடன் வந்த ஆயிரக்கணக்கான மனிதர்களுடனும்,
வழியில் அவரை நோக்கி ஆர்வத்தோடு ஓடி வரும்
சிறுவர்களையும், பெண்களையும், வயதானவர்களையும் ஆதரவாக
அணைத்துச் செல்வது….. அவர்களோடு சிரித்துபேசி, உரையாடுவது
இதில் எதுவுமே செயற்கை இல்லை -அத்தனையும் மனதிலிருந்து வெளிப்பட்டவை என்பதை தொடர்ந்து அந்த பாரத் ஜோடோ
யாத்திரையை கவனித்தவர்களுக்கு நிச்சயம் தெரியும்.
10 வருடங்களுக்கு முன்னர், நானே, இதே விமரிசனம் தளத்தில்
ராகுலை மிகக்கடுமையாக விமரிசித்திருக்கிறேன். ஆனால்,
இன்று அதே நான், மனம் திறந்து வெளிப்படையாக பாராட்டுவது –
அவரது மாற்றத்தை குறிக்கிறது. ஆமாம், கடந்த 10 ஆண்டுகளில்
ராகுல் மிகவும் மாறி இருக்கிறார். இது அவராக தேடி, விரும்பி,
ஏற்றுக்கொண்ட மாற்றம். மக்களோடு நேரடியாக பழகுவதன்
மூலமே மக்கள் மனதில் இடம்பெற முடியும் என்று உணர்ந்து
தன்னிடத்தில் அவர் உண்டாக்கிக்கொண்ட மாற்றம்.
ஆனால், இத்தனை மக்கள் அவரை ஆவலோடும் ஆர்வத்துடனும்
ஏற்றுக்கொண்டாலும், வலுவாக உள்ள சில மாநில கட்சிகளின்
தலைவர்கள் அவரது தலைமையை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.
வங்காளத்தின் மம்தா பேனர்ஜி, தெலுங்கானா சந்திரசேகர்,
ஆந்திர ஜெகன்மோகன் ரெட்டி, டெல்லி கெஜ்ரிவால் ஆகியோர்
இவர்களில் சிலர்…… என்ன செய்வது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு
அஜெண்டா….
இருந்தாலும், அடுத்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி சுமார் 150 எம்.பி.க்கள்
வரை பெறக்கூடும் என்று தோன்றுகிறது. பாஜகவை காங்கிரசால்
இன்றைய சூழலில், தனியாக தோற்கடிக்க முடியாது.
எனவே -24 மே மாதம், ராகுல் காந்தி, கணிசமான
எம்.பி.க்கள் பலத்தோடு, ஒரு பலமான எதிர்க்கட்சித்தலைவராக
பாராளுமன்றம் செல்வார் என்று எதிர்பார்க்கலாம். எப்போதுமே
பாராளுமன்றத்தில் இரண்டு வலுவான தேசிய கட்சிகள் இருப்பது
நாட்டு நலனுக்கு நல்லது.
அவருக்கு இன்னும் வயது இருக்கிறது.
நல்ல எதிர்காலம்
இருக்கிறது – அவருக்கும், இந்த நாட்டுக்கும்….!!!
.
………………………………………………………………………………………………………………………….…..



என் அநுமானம், எவ்வளவுதான் ராகுல் முயற்சித்தாலும், மாநிலக் கட்சிகளின் கை ஓங்கி இருக்கும் இந்தச் சமயத்தில், அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து 100 இடங்களைப் (காங்கிரசுக்கு மாத்திரம்) பிடிப்பதே கடினமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒருவேளை மாநிலக் கட்சிகள் வலிமையாக இல்லாத காலமாக இருந்திருந்தால், அவரின் யாத்திரை காங்கிரசை கொஞ்சம் வலிமையாக்கியிருக்கும், அவர் நேச்சுரல் தலைவராக காங்கிரஸுக்கு வந்திருப்பார். 100க்குமேல் (125?) இடங்களை காங்கிரஸ் பிடித்தால் உடனே ராகுல் தலைவராகிவிடுவார். அதன்பிறகு காங்கிரஸ் வளரத் தொடங்கும். காங்கிரஸ் வளருகிறது என்ற எண்ணம் வந்தால் முஸ்லீம், கிறித்துவ வாக்குகள் அவர்களை நோக்கி வந்து, ஆம் ஆத்மி வலிமை குன்றி, காங்கிரஸ் எம்பிக்கள் எண்ணிக்கை அதிகமாகும்.
வலிமையான காங்கிரஸ் இருப்பதுதான் நமக்கு நல்லது. மாநிலக் கட்சிகள் கொள்ளைக்காரர்களாக இருப்பதால், அவர்களை சுலபமாக ஊழல் டாக்குமண்டுகளை, சொத்துக்குவிப்பைக் கணக்கெடுத்து பாஜக மிரட்டி, கப் சிப் என்று ஓரளவு அடிமையாக வைத்திருக்க முடிகிறது (வெள்ளைக்குடை, திதி கப் சிப் என்று பல உதாரணங்கள்). (உடனே காங்கிரஸ் கொள்ளையடிக்கவில்லையா என்று கேட்காதீர்கள். அது தேசியக் கொள்ளை)
அதுவும்தவிர, பாஜக சில மாநிலங்களில் இயற்கையாக வளர நினைக்கவில்லை. இது ஒரு தேசியக் கட்சிக்கு அழகல்ல. உதாரணம் புதுச்சேரி, கோவா, மஹாராஷ்ட்ரா… காங்கிரஸும் இந்த வேலைகளைச் செய்திருந்தாலும், பாஜக நடந்துகொள்வது சகிக்கமுடியாததாக இருக்கிறது.
ஐயா,
இதற்கு முன் உங்கள் BBC ஆவணம் பற்றிய இடுகைக்கு நான் எழுதிய பிண்ணூட்டம் இதற்கும் பொருந்தும்.அதாவது இதுவும் செய்தி போர் (information warfare) ன் ஒரு அங்கமே. அனைத்து முதன்மையான செய்தி ஊடகங்கள் (main stream media) இப்போது ராகுல் காந்தி அவர்களின் பிம்பத்தை சிறப்பாக கட்டமைக்க செய்யும் முயற்சியில் இதுவும் ஒன்று. இதனை BJP, கட்சியும் எதிர் கொண்டு வருகிறது. உதாரணமாக கீழே இணைத்துள்ள செய்தியும் திரு ராஜீவ் சந்திரசேகர் MP அவர்களின் கீச்சும் ஒரு சான்று.
https://www.businesstoday.in/coronavirus/story/pfizer-tried-bullying-india-to-accept-indemnity-clause-for-covid-vaccine-claims-minister-rajeev-chandrasekhar-366868-2023-01-20
கொரோனா பெருந்தொற்று சமயத்தில் திரு ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு தடுப்பூசி களுக்கு (Pfizer and Moderna) ஆதரவான நிலைப்பாட்டை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?.
நன்றி
Logan,
// அனைத்து முதன்மையான செய்தி ஊடகங்கள் (main stream media) இப்போது ராகுல் காந்தி அவர்களின் பிம்பத்தை சிறப்பாக கட்டமைக்க செய்யும் முயற்சியில்..” //
உங்கள் கருத்து எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.
அப்படி ராகுல் காந்தியின் பிம்பத்தை உயர்த்தி பிடிக்கும்
டெல்லி main stream media -க்கள் எதாவது இருந்தால் அவற்றின் பெயரை சொல்லுங்களேன்… அப்படிப்பட்ட தைரியசாலிகளை
நானும் தெரிந்து கொள்கிறேனே… !!!
;
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
.
ஐயா,
உங்கள் கேள்விக்கான பதில் https://youtu.be/mRXnJ-grfaU
https://youtu.be/XVMHKSbE7MQhttps://timesofindia.indiatimes.com/city/kolkata/learnt-more-during-bharat-jodo-than-from-years-of-education-kolkata-biologist/articleshow/97672204.cms
https://m.economictimes.com/news/politics-and-nation/bharat-jodo-yatra-booster-dose-for-cong-but-impact-on-poll-bound-states-depends-on-follow-up-tackling-rifts/articleshow/97619383.cms?utm_source=whatsapp_amp&utm_medium=social&utm_campaign=socialsharebuttons
ஐயா, நீங்கள் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு தடுப்பூசியை(Pfizer and Moderna) இந்தியா அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றிய கேள்விக்கு உங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறேன்.
நன்றி
Logan,
.
republic tv-யையும்,அதன் உரிமையாளர்
ராஜீவ் சந்திரசேகரையும்,அர்னாப்
கோஸ்வாமியையும் நீங்கள் மிகதீவிரமாக
பின் தொடர்கிறீர்கள் என்பது எனக்குப்
புரிகிறது.
எனவே என் கருத்துகளால் உங்களுக்கு
எந்தவித பயனும் இருக்கப் போவதில்லை..!!!
பயனற்ற செயலை மேலும் தொடர
எனக்கு விருப்பம் இல்லை.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
.
ஐயா,
நான் எப்போதும் செய்திகளின் உண்மைத் தன்மையை தான் பார்ப்பேனே தவிர யார் சொல்கிறார்கள் என்று பார்ப்பதில்லை உங்கள் பார்வையில் த இந்து நாளிதழ் BJP சார்பற்ற நாளிதழ் என்று நினைக்கிறேன்.
கீழே இணைப்பில் உள்ள செய்தியை பாருங்கள்.
https://www.thehindu.com/news/national/vaccination-can-control-pandemic-but-centre-doesnt-care-says-rahul-gandhi/article34634490.ece
ராகுல் காந்தி கூறியதாக மே மாதம் 24ம் நாள் 2021 அன்று தி இந்து நாளிதழ் செய்தி. நான் உங்களுக்கு நினைவு படுத்த விரும்புவது
காய்தல் உழைத்தல் அகற்றி ஒரு பொருட்கள் ஆய்தல அறிவுடையார் கண்ணதே- காய்வதன்கண் உற்றகுணம் தோன்றாதது ஆகும் உவப்பதன்கண் குற்றமும் தோன்றா கெடும்.
உங்கள் கருத்தை அறிய ஆவலுடன் இருக்கிறேன்.
நன்றி
அப்போது ராகுல் காந்தி மட்டுமல்ல, பலர் ஃபைசர் போன்ற மேற்கத்தைய வேக்சினுக்கு வக்காலத்து வாங்கினார்கள் (அதற்காக எவ்வளவு பெற்றார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்). தமிழகத்திலும் இந்திய தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மாட்டோம் என்று ஸ்டாலின், திமுக, மற்றும் திருமா அறிவித்தனர்.
ஃபைசர் போன்றவை, மருந்தின் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம், எங்களுக்கு அந்த கண்டிஷனிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்றும் நிர்பந்தித்தன. அதனால்தான் மத்திய அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
பிறகு (பல மாதங்கள் கழித்து) ஃபைசர் தலைவரிடம் இதுபற்றி நிருபர்கள் கேட்டபோது (ஏன் முதலில் 90 சதம், பிறகு 80, 70, 60 சதம் எஃபெக்டிவ் என்று குறைத்துக்கொண்டே வந்தீர்கள் என்று), அதற்கு பதிலளிக்காமல் அவர் சென்ற காணொளியையும் சமீபத்தில் பார்த்தேன்.
ராகுல் காந்திக்கு, சரியான புரிதல் இல்லாமல், எதையாவது சொல்லுவார். இப்போது ரொம்பவே மெச்சூர்ட் என்று பலர் பாராட்டுவதால், இனியாவது சென்ஸிபிளாகப் பேசுகிறாரா என்று பார்ப்போம். அதானியைக் குறை சொல்லும் வாயால் வாத்ராவின் நிறுவனங்களின் ஊழல்களையும் பேசுவார் என்று எதிர்பார்ப்போம்.
.
Logan,
நீங்கள் கண்ட கண்ட வீடியோக்களையும், செய்திகளையும்
இந்த தளத்தில் பின்னூட்டம் என்கிற தோற்றத்தில் பதிவிடுவதை நான் ஏற்பதற்கில்லை.
விமரிசனம் தளம் உங்களுக்கான பிரச்சார மேடையாக
மாற்றப்படுவதை நான் அனுமதிப்பதற்கில்லை.
எனவே, இனி நீங்கள் இங்கே பதிவு செய்வதை
தயவுசெய்து நிறுத்திக் கொள்ளவும்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்