…
…

…
தங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய 550 கோடி ரூபாயை கொடுக்காமல் வெளிநாடு செல்ல சின்ன அம்பானியை அனுமதிக்கக்கூடாது என்கிற கோரிக்கையுடன், சுப்ரீம் கோர்ட்டை அணுகி இருக்கிறது எரிக்சன் நிறுவனம்… இந்த கோரிக்கை மனு நாளைய தினம் விசாரணைக்கு வருமென்று தெரிகிறது.
சுப்ரீம் கோர்ட் தலையிட்டு, கொடுக்கச் சொன்ன 550 கோடியை கூட
கொடுக்க முடியாத நிலையிலா இருக்கிறார் சின்ன அம்பானி….?
அப்படியானால், இவரது நிறுவனத்திற்கு அரசு வங்கிகள்
கொடுத்திருக்கும் 45,000 கோடி ரூபாய் கடனுக்கு யார் உத்திரவாதம்…?
பின் குறிப்பு :
இவரைத் தான் ரஃபேல் விமான தயாரிப்பில்,
50 சதவீத பார்ட்னராக சேர்த்திருக்கிறார்கள்…!!!
………………………………………………………………
செய்தி –
ஸ்வீடன் நாட்டு தொலைத் தொடர்பு நிறுவனம் எரிக்ஸன் , ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்குத் தொழில்நுட்பங்கள், கருவிகள், சேவைகள் அளிக்க ரூ.2014-ம் ஆண்டு 7 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்திருந்தது. இதற்காக எரிக்ஸன் நிறுவனத்துக்கு ரூ.1500 கோடி ரிலையன்ஸ் நிறுவனம் தர வேண்டி இருந்தது.
ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.45 ஆயிரம் கோடி கடனில் இருப்பதாலும், “திவால்” நோட்டீஸ் கொடுக்க இருப்பதாலும், உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையின்படி, ரூ.550 கோடி மட்டும் பெற்றுக்கொள்ள எரி்க்ஸன் நிறுவனம் சம்மதித்தது.
கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ரூ.550 கோடியை வழங்க ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 120 நாட்கள் அவகாசத்தை அளித்தது. அதாவது செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ரூ.550 கோடியை எரிக்ஸன் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டும்.
ஆனால், அந்த தேதி முடிவடிந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் அந்தத் தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்குச் செலுத்தவில்லை.
இதையடுத்து, எரிக்ஸன் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் அனில் அம்பானி, மற்ற இரு அதிகாரிகள் மீது தொடரப்பட்டது.
அந்த மனுவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் இருவர் உச்ச நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியின்படி ரூ.550 கோடி பணத்தைச் செலுத்தவில்லை. ஆதலால், இவர்கள் 3 பேரையும் வெளிநாடு செல்ல அனுமதிக்கக்கூடாது எனத் தெரிவித்திருந்தது…
https://tamil.thehindu.com/india/article25121330.ece?utm_source=HP-
RT&utm_medium=hprt-most-read
——————————————————————————————————-



கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…