இவரைப் பிடித்து “உள்ளே” போட என்ன தயக்கம்….?


தமிழகத்தில் மதக்கலவரங்கள் ஏதேனும் ஏற்படக்கூடுமேயானால், அதற்கு முதல் காரணமாக இருக்கக்கூடிய சிலரில் இவரும் ஒருவர்…..

எப்போது கலவரம் வெடிக்கும் என்று ஆவலோடு காத்துக்கொண்டிருப்பவர்கள் சிலர் இரண்டு தரப்பிலும் இருக்கின்றனர்.

அதில் இந்த தரப்பில், இவர் முதன்மையானவர்.

புதுக்கோட்டையில் இவர் பேசிய பேச்சுக்கும், நடந்துகொண்ட விதத்திற்கும், குறைந்த பட்சம் 9 பிரிவுகளில் வழக்கு பதிவு பண்ணி, “உள்ளே” தள்ளலாம்.

இது போல் இவர் நடந்துகொள்வது இது முதல் தடவையல்ல… தொடர்ந்து பொது அமைதியை கெடுக்கும் விதத்தில் செயல்பட்டுக்கொண்டிருப்பதால் – இவரை “குண்டர் சட்டத்தில்” ஜாமீனில் வெளியே வர முடியாதபடியும் செய்யலாம்.

இந்த ஆசாமிக்கு வர வர திமிர் அதிகமாகிக் கொண்டே போகிறது… பொது இடங்களில் எப்படிப் பேசுவது என்கிற வரம்புகளையெல்லாம் உடைத்தெறிகிறார். பேட்டை ரவுடி போல் நடந்து கொள்கிறார்;

இவர் பேசியதில் சில உண்மைகள் கூட இருக்கலாம்…
ஆனால், அதைச் சொல்ல இவர் தேர்ந்தெடுத்த விதம்,
இடம், மொழி…பேசிய முறை …சரியா….?

நொடிக்கொரு தடவை “அம்மா”வின் ஆட்சி என்று சொல்லிக்கொள்கிறார்களே…. அந்த “அம்மா” இப்போதும் இருந்திருந்தால் இவர் இப்படி தைரியமாக பேசி இருக்க முடியுமா…? பேசிவிட்டு, இன்னமும் இப்படி வெளியே சுற்றிக்கொண்டிருக்க முடியுமா…?

அந்த “அம்மா” இருந்த வரையில், இவரைப் போன்றவர்கள்
எப்படி பெட்டிப்பாம்பாக அடங்கிக் கிடந்தனர் என்பதை பார்த்துக்கொண்டு தானே இருந்தோம்… ஆனால் இப்போது …..?

மக்கள் எல்லார் மனதிலும் மாநில அரசைப்பற்றி ஏற்கெனவே மிகவும் பலவீனமான அரசு என்கிற மதிப்பீடு இருக்கிறது…….

அந்த பலவீனமான அரசை ஆட்டிப்படைக்கும் மத்தியில்
ஆளும் கட்சியை சேர்ந்த – தான் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்கிற தைரியம் இவருக்கு …?

தமிழக அரசும், அதை நினைத்தே தயங்குவது வெளிப்படையாகவே தெரிகிறது. இதையெல்லாம் தொடர்ந்து அனுமதித்தால், மாநில அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கையே இல்லாமல் போய் விடும் என்பதை உணர வேண்டும்.

.
——————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to இவரைப் பிடித்து “உள்ளே” போட என்ன தயக்கம்….?

  1. பிங்குபாக்: இவரைப் பிடித்து “உள்ளே” போட என்ன தயக்கம்….? – TamilBlogs

  2. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    ஜாதி, மத கலவரங்களை தூண்டும்படி பேசுபவர்கள், கலவரங்கள் உருவாக
    காரணமாக இருப்பவர்களை தமிழக அரசு மிகக்கடுமையாக கையாள வேண்டும்.
    முளையில் கிள்ளவில்லையென்றால், வளர்ந்து விட்ட பிறகு மோசமான
    விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
    மெஜாரிடியோ, மைனாரிடியோ, அது எந்த மதமாக இருந்தாலும் சரி இரும்புக்கரம்
    கொண்டு அடக்கப்பட வேண்டும். அந்த பயம் சமூகத்தில் இருக்க வேண்டும்.
    இதுவரை தமிழ்ச் சமூகத்தில் பெரிய அளவில் மதக் கலவரங்கள் ஏற்பட்டதில்லை.
    இவரும், இவர் சேர்ந்த் கூட்டமும், வருகின்ற தேர்தலுக்குள் அந்த சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      //மெஜாரிடியோ, மைனாரிடியோ, அது எந்த மதமாக இருந்தாலும் சரி இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். அந்த பயம் சமூகத்தில் இருக்க வேண்டும். இதுவரை தமிழ்ச் சமூகத்தில் பெரிய அளவில் மதக் கலவரங்கள் ஏற்பட்டதில்லை. இவரும், இவர் சேர்ந்த் கூட்டமும், வருகின்ற தேர்தலுக்குள் அந்த சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.//

      – YOU ARE RIGHT ….

  3. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    // ஐயோ அது என் குரல் இல்லை.. யாரோ எடிட் பண்ணிட்டாங்க.. பல்டி அடித்த எச்.ராஜா //
    https://tamil.oneindia.com/news/tamilnadu/oh-no-that-is-not-my-voice-explains-h-raja-on-his-viral-video-329842.html … அண்ணாச்சி இது பாேல பல்டி அடிப்பதை அன்று அவருடன் இருந்த கட்சியினரும் , வேடிக்கை பார்த்த மக்களும் தற்பாேது இவரைப் பற்றி என்ன நினைப்பார்கள் … ? அண்ணாச்சி அதிகார ஆணவப் பேச்சு …வீரம் எல்லாம் இவ்வளவுதானா என்று ஏளனமாக எண்ணுவார்களே …அது பாேதும் இவருக்கு …?

    • தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

      செல்வராஜன் சார்.. அப்படி யாரும் எண்ணமாட்டார்கள்.

      சட்டப் போராட்டம் என்று சொல்லி சட்டப் புத்தகத்தை எரித்துவிட்டு நீதிமன்றத்தில் வெறும் காகித்த்தை எரித்தேன் என்று கருணாநிதி சொன்னபோது, ஆஹா.. எப்படிப்பட்ட ராஜதந்திரி என்று திமுகவினர் சொன்னார்களே. (சென்சிபிள் என்றால், இத்தகைய பயந்தாங்கொள்ளியையா தலைவர் என்று நினைத்தோம் என்றுதானே திமுகவினர் நினைத்திருக்கணும்). அதனால் ராஜாவின் அடிப்பொடிகள் அவரின் சாமர்த்தியத்தை வியந்துகொண்டிருப்பார்கள்.

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


        //ராஜாவின் அடிப்பொடிகள் அவரின் சாமர்த்தியத்தை வியந்துகொண்டிருப்பார்கள்.//

        உண்மை.
        விளைவுகளை சந்திக்கும் தைரியம் இல்லாமல் உளரிய – பிறகு
        ஓடி ஒளிந்துகொண்ட – ராஜாவும் சரி, சேகரும் சரி – மகா கோழைகள்.

  4. Mani's avatar Mani சொல்கிறார்:

    அதற்குள் தலைமறைவாகி விட்டதாக சொல்கிறார்கள்.
    இந்த மூஞ்சியை கண்டுபிடிப்பது அவ்வளவு பெரிய காரியமா என்ன ?

  5. Sanmath AK's avatar Sanmath AK சொல்கிறார்:

    KM Sir,

    This is a reply(in today’s Dinamalar) from one of the Ministers of State Govt:-
    “தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்த, மிக மோசமான விமர்சனத்தை, ராஜா முன் வைத்துள்ளார். அதனால், நீதிமன்றம் தாமாகவே முன் வந்து, நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.போலீசார், மழை, வெயில் பாராமல் பொதுமக்களுக்கு அமைதியை ஏற்படுத்தும் வகையில், அயராது பாடுபடுகின்றனர். அவர்கள் மீது, களங்கம் கற்பிக்கும் வகையில், மோசமான சொற்களை, எச்.ராஜா பயன்படுத்தி இருக்கிறார்.எனவே இதுகுறித்து, சட்ட நிபுணர்கள் கருத்தை கேட்டு, மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.”

    Nothing more to say about our present State Govt. Why to ask legal experts ? Can an ordinary citizen speak like this to police ? Had BJP not been in power in center or had there been a strong state leadership, he would not have talked like this. S.V.Sekhar was another example for the State Govt’s guts

    • தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

      சன்மத் – உங்க வாதம் சரி. மடியில் கனமிருந்தா வழியில் பயம்தான். ஒரு கம்பெனிக்கே தலைவர் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஒரு குழு நடத்த முடியாது. ஜெ இருந்து இந்த மாதிரி யார் பேசியிருந்தாலும் உள்ளே வைத்திருப்பார். எஸ் வி சேகர் விஷயத்திலும் நடந்தது சரியில்லை. We have to deal these things with firm hand. பாஜகவுக்கு முன்னால் இங்கு சிறுபான்மையினர் ஆதரவு அதிகம் இருந்தது என்ற காரணத்துக்காக ஹெச் ராஜா போன்றவர்களை ஆதரிக்கவே கூடாது. இது மிகப் பெரிய பிரச்சனையில் தமிழகத்தைக் கொண்டுபோய் விடும். மத விஷயத்தில் விஷக் கருத்துகள் சொல்பவர்கள், கருணாநிதியே ஆனாலும் (இந்து என்றால் திருடன் என்று சொன்னது, ஒருவேளை அவருடைய, அவர் குடும்பத்தின் பிஹேவியரை வைத்து அப்படி எண்ணியிருக்கலாம்), அவர்கள் சமூகத்தின் விஷக் கிருமிகள்.

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


        //We have to deal these things with firm hand. //

        இது தான் சரி… இங்கு ஆட்சி தலையிடவில்லை என்றால் அசிங்கப்பட்டு போகும்.

  6. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    The video is not opening. Why Sir?

  7. Sharron's avatar Sharron சொல்கிறார்:

    KM Sir please see the next event BJP Leader and the poor auto driver. Pathetic.

  8. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    //ஆதங்கத்தை சொன்னால் அடிக்கிறார்கள்.. தமிழிசையிடம் கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநர் குமுறல்! // https://tamil.oneindia.com/news/tamilnadu/i-asked-about-petrol-price-but-they-slapped-me-says-auto-driver-who-questioned-tamilisai/articlecontent-pf325954-329941.html …. // இவர்களா ” காேழைகள் ” வீராதி வீரர்கள் ….எப்பேர்பட்ட நபரிடம் தங்களின் வீர தீரத்தை காட்டியிருக்கிறார்கள் … நல்லவளர்ச்சி …?

  9. மெய்ப்பொருள்'s avatar மெய்ப்பொருள் சொல்கிறார்:

    எச் ராஜாவை நாம் பாராட்ட வேண்டும் – அவர் மட்டுமல்ல கூடவே எஸ் வி சேகர்
    மற்றும் டி வி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பா ஜ க கட்சிக்காரர்களையும்.
    உண்மையில் இவர்கள்தான் பெரியாரின் பிரச்சார பீரங்கிகள் .
    பெரியார் உயிரோடு இருந்த போது கூட அவர் கருத்தை இந்த
    அளவு மக்கள் படித்ததில்லை .

    தி க வீரமணி இவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்

    இவர்களுக்கு பொது இடத்தில எப்படி நடக்க வேண்டும் என் தெரியாது .
    இந்த மாதிரி ஆட்களை எந்த கட்சியிலும் சேர்த்து கொள்ள மாட்டார்கள் .

    மத்திய அரசில் காங்கிரஸ் என்ன செய்ததோ அதையே பா ஜ கவும் செய்கிறது .
    ஆனால் காங்கிரஸ் மேலே யாரும் கோபத்தில் இல்லை .சொல்லப்போனால்
    இந்திரா , ராஜீவ் போன்றவர்கள் நேரு குடும்பம் என்று
    மரியாதை இருக்கின்றது .

    மோதிக்கும் தமிழ்நாட்டுக்கும் சம்பந்தம் கிடையாது – ஆனால்
    கிட்டத்தட்ட அனைவருமே மோதி மேல் கடுப்பில் இருக்கிறார்கள் .

    தேங்க்ஸ் பார் செல்ப் கோல் !

  10. சத்தியசோதனை's avatar சத்தியசோதனை சொல்கிறார்:

    அம்மா இருந்திருந்தாலும் இந்த ஆள் வெளியேதான் இருப்பார்… ஏன்னா அம்மா இருந்திருந்திருதால் இப்போது பார்ப்பன அகரஹாரத்தில் சின்னம்மாவுடன் ஊதுபர்த்தி உருட்டிக்கொண்டிருப்பார்! 🙂

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      சத்தியசோதனையின் ஆசை புரியுது. ஜெ இருந்தவரை தீர்ப்பு வரவில்லை என்பதும், அவருக்கு மக்கள் ஆதரவு எப்போதும் இருந்தது என்பதும் உண்மை. ஒண்ணு நிச்சயமா நடந்திருக்கும். ஒருவர் ஐஸ் பெட்டியில் இருந்திருப்பார், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்காக, இல்லாவிட்டால் கிடைத்த இடத்தில் கிடந்திருப்பார்.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      இன்னொன்று… ஜெ எங்கிருந்தாலும், யாரை வைத்தும் ஆட்சி நடத்தியிருப்பார், தமிழகத்தில் தீய சக்திகளுக்கு இடமும் இருந்திருக்காது, அப்படியே இருந்தாலும் பெட்டிப்பாம்பாய் அடங்கி இருந்திருப்பர். இதை உங்களாலேயே மறுக்க முடியாது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.