ஒரு அபத்தமான நாடகம்…!!!


இந்த நாட்டின் சர்வ சக்தி பெற்ற, சர்வ முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அலுவலகம் – பிரதமரின் அலுவலகம்..பி.எம்.ஓ. – அந்த அலுவலகத்தின் முதன்மைச் செயலாளர்….

இந்த நாட்டின் நீதித்துறையின் மூத்த தலைவரின் இல்லத்திற்கு
செல்கிறார்…. கதவு மூடி இருக்கிறதாம்… அவரை சந்திக்க இவர்
முயற்சிக்கிறாராம்…இவர் யாரென்று தெரிந்த பிறகும் கதவு
திறக்கப்படவில்லையாம்…

சிறிது நேரம் காத்திருந்த பிறகும், கதவு திறக்கப்படாததால்,
இவர் அலுவலகத்திற்கு திரும்பி விடுகிறார்…

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது –

“என்னுடைய அலுவலகம் செல்லும் வழியில் தலைமை நீதிபதி வீட்டின் கேட் முன்னர் புத்தாண்டு வாழ்த்துக்கான அட்டையை வைத்து விட்டு வந்தேன், அவரை சந்திக்க வில்லை ” என்று கூறியுள்ளார்….

இந்த நாட்டின் மிக மூத்த அரசு அதிகாரி, பிரதமரின் முதன்மை செயலர், தலைமை நீதிபதியின் வீட்டிற்கு முன்னதாகவே சந்திப்புக்கு நேரம் குறிக்காமலும், முன் அனுமதி பெறாமலும் செல்கிறாராம்…..

இவர் யாரென்று தெரிந்தும், கதவே திறக்கப்படவில்லையாம். வீட்டின் கேட் முன்னர் புத்தாண்டு வாழ்த்துக்கான அட்டையை வைத்து விட்டு இவர் வந்து விட்டாராம்…!!!

இன்று தேதி ஜனவரி 14 , 2018…
புத்தாண்டு பிறந்து 14 நாட்கள் கழித்து தான், புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவேண்டுமென்று இவருக்கு தோன்றியிருக்கிறது….!!!

வந்திருப்பவர் வெகு மூத்த அரசு அதிகாரி, பிரதமரின் மூத்த செயலர் என்று தெரிந்திருந்தும்,தலைமை நீதிபதி வீட்டு கதவுகள் திறக்கப்படவில்லையாம்…!!!

பிறகு அங்கே கதவின் முன்பாக வாழ்த்து அட்டையை (தரையில்…??? ) வைத்துவிட்டு இவர் திரும்பி விட்டாராம்….
( தபால்களை கூட பெற்றுக்கொள்ளக்கூடாது என்று உத்தரவோ… அல்லது அங்கே கதவருகே – காவலர்களோ, உதவியாளர்களோ – யாருமே இல்லையோ…!!! )

இந்த நிகழ்ச்சி – இன்றைய மீடியாக்களில் விளம்பரமாக்கப்படுகிறது….

யாருக்காக இந்த நாடகம்…???
யார் காதில் பூச்சுற்ற….???

..

..

ஏற்கெனவே, சுற்றப்பட்ட காட்டுப்பூக்களால், இந்நாட்டு மக்களின் காதுகள் ரணமாகி தொங்கிப் போயிருக்கின்றன…

இந்த லட்சணத்தில் இன்னும் ஏன் இந்த பூச்சுற்றல்…?
சொல்ல விரும்புவதை நேரடியாகவே மக்களுக்கு சொல்லும் துணிச்சல் இல்லாதது ஏன்……???

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to ஒரு அபத்தமான நாடகம்…!!!

  1. வடிவேலு's avatar வடிவேலு சொல்கிறார்:

    போட்டோ உங்க சின்ன வயசுல எடுத்த‍தா சார்? உக்கிரமா இருக்கீங்க!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      ஏன் …………………. வடிவேலு,
      உங்கள் படத்தை போடவில்லையே என்று வருத்தமா…??? 🙂 🙂 🙂

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • வடிவேலு's avatar வடிவேலு சொல்கிறார்:

        நம்முளுதெல்லாம் டெர‍ர் ஃபேஸ் சார்… அதையெல்லாம் நீங்க போடமுடியாது! 😉

        என்ன சார் பண்ணுவது, அரசியல்வாதிகள் செய்யும் சேட்டைகளையும், அதை பார்த்தும் பாராமுகமாய் இருக்கும் மக்களையும் நினைத்து டென்சனானால் மேலே டிக்கெட் எடுக்க வேண்டியதுதான். இப்படி எதையாவது சொல்லி கடந்து போகவேண்டயதுதான்.

        • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

          வடிவேலு – நன்மை செய்யாமல் இருப்பவனைவிட, நன்மை செய்பவனைத் தடுப்பவன், மிகுந்த பாவத்துக்கு உள்ளாவான் என்பதுதான் எல்லா நீதி நூல்களும் நமக்குச் சொல்வது.

          கையாலாகாதவனாக இருப்பதில் தவறில்லை. ஆனால், எள்ளி நகையாடுவது அருவருக்கத் தக்கது. நகைச்சுவை என்று நினைத்து நீங்கள் எழுதியுள்ளதை நினைத்து வருத்தப்படுகிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.