முறுக்கு மீசை,
முண்டாசுக் கவிஞனின் பிறந்த நாள் (11/12/13 ) நினைவாக……!

எனக்குப் பிடித்த பாரதியின் பாடல்களிலிருந்து
சில வரிகள் –
——–
அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல் வீரத்திற்
குஞ்சென்றும் மூப்பென்று முண்டோ
———–
தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி –
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
——–
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைபட வேண்டும்
———————–
பாரதியும் – காந்திஜியும் சென்னையில் சந்தித்தபோது
நடந்த பரிமாறல்களை பெருமிதத்துடன் இங்கு நினைவுகொள்ள
விரும்புகிறேன் –
“மிஸ்டர் காந்தி ! நான் கடற்கரையில் நாளை பேசுகிறேன்.
நீங்கள் தலைமை வகிக்க வர வேண்டும்” என்று பாரதி
சொன்னபோது,
“கூட்டத்தை மறு நாளுக்கு மாற்ற முடியுமா?” என்று
கேட்டார் காந்தி.
“அது முடியாது ஆனால், நீங்கள் ஆரம்பிக்கப்போகும்
இயக்கத்துக்கு என்னுடைய ஆசி’’
என்று சொல்லிவிட்டு கம்பீரமாக வெளியேறிய பாரதியைப்
பார்த்துக்கொண்டே இருந்தார் காந்தி.
” இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்”
என்று அருகில் இருந்தவர்களிடம் கவலைப்பட்டார்
காந்தி!
————————-
பின்குறிப்பு –
நான் என்றும் நினைத்து மகிழும் ஒரு விஷயம் –
என் தந்தையும், பாரதியும் -சுதேசமித்திரனில்,
ஒரே அறையில் அமர்ந்து, இணைந்து சிலகாலம்
பணியாற்றினார்கள் என்பது …!
அப்போதைக்கு அரைக் கிறுக்கன் என்று நினைக்கப்பட்ட
பாரதி பிற்காலத்தில் எப்பேற்பட்ட புகழை
அடையப்போகிறான் என்பது
தமிழ் உலகிற்கு தெரியாத கால கட்டம் அது ..!
எங்கே பார்க்கப் போகிறோம் மீண்டும்
இத்தகைய மாமனிதர்களை ..!!





பகிர்வு சிறப்பு…!
வாழ்த்துக்கள்…
பொதுவாவே ஒரு பொருள் நம்மிடம் இருக்கும் போது அதன் மதிப்பை நாம் அறிந்துக்கொள்ளாமல் அலட்சியப்படுத்திவிட்டு, அது நம்மை விட்டு விலகிய பிறகு நாம் அதனை நினைத்து நினைத்து வருத்தப்படுவது மனிதனின் குணமாக உள்ளது.
என்றாலும் பாரதியால் நம் நூற்றாண்டில் தமிழுக்கு கிடைத்த பெருமை அளவிடமுடியாதது.
Dear KM,
Like Saidhai Ajis said, nobody bothered or cared about Barathi when he was alive… Even today, he is remembered by few but not many… is he getting the same importance in media during birth / death anniversary like other leaders, the answer would be no…. only corrupt leaders, pseudo-seculars, fake tamil language protectors are highlighted…..but still there are pockets of society which remembers him, his contribution to the country, tamil nadu, language and society…
you said u r father worked with him… did u ever hear any interesting stories from your father on this experience being close to bharathi….if so, please share with us… it would be interesting to know..
regards
Srini
ஸ்ரீநி,
உங்கள் கருத்துக்கு நன்றி.
நான் இளைஞனாக இருந்தபோதே என் தந்தையை
இழந்து விட்டேன். ஆனால், என் இளவயதிலேயே
பாரதியைப் பற்றி என் அப்பாவிடம் நிறைய கேள்விகள் கேட்டிருக்கிறேன்.
ஆனால் – என் அப்பாவிற்கும், பாரதிக்குமான
நெருக்கம் மிகச் சில மாதங்களுக்கே இருந்தது.
அந்த காலங்களில் சென்னையில் சுதேசமித்திரன்
பத்திரிகை அலுவலகம், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் தற்காலிகப் புகலிடமாக, அடைக்கலமாக இருந்தது.
இளம் வயதில் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக
ஈடுபட்ட லட்சக்கணக்கானோரில் என் அப்பாவும்
ஒருவர். தஞ்சாவூரில் இருந்த அவரை பிரிட்டிஷ்
அரசின் போலீஸ் தேடியதை அடுத்து,
அவர் சென்னை சென்று தற்காலிகமாக சில
மாதங்களுக்கு சுதேசமித்திரன் அலுவலகத்தில்
அடைக்கலம் புகுந்து,பணிபுரிந்து வந்திருக்கிறார்.
அந்த சமயத்தில் தான் அவருக்கு பாரதியுடன்
பரிச்சயம் ஏற்பட்டிருக்கிறது.
பாரதி மிகவும் வித்தியாசமான ஒரு மனிதர்
என்கிற அளவிற்கு தான் அப்போது அவருக்குத்
தெரிந்திருக்கிறது.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்