ஹரியானா மாநிலம் ஹிஸ்ஸாரைச் சேர்ந்த வர்மா என்பவர்
தகவல் தெரியும் உரிமை சட்டத்தின் கீழ் திருமதி சோனியா
காந்தியின் வெளிநாட்டுப் பயணச் செலவுகள் எவ்வளவு,
அதை செலுத்துவது யார் என்பது குறித்த விவரங்களை
கேட்டிருந்தார்.
– அவர் கேட்டது ஜூலை 2010ல்.
இது குறித்த செய்தி ஒன்றை மே 2012ல் குஜராத் இதழ்
ஒன்று வெளியிட்டிருந்தது. அதில் வர்மாவுக்கு கிடைத்த
பதில் மூலம் திருமதி சோனியா காந்தியின் வெளிநாட்டுப்
பயணங்களுக்கு ரூ.1880 கோடி செலவிடப்பட்டிருப்பதாக
தகவல் கிடைத்துள்ளது –
என்று செய்தி வெளியிட்டிருந்தது.
அதை மேற்கோள் காட்டி ராஜ்கோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, சோனியா காந்தியின் வெளிநாட்டுப்
பயணங்களுக்கு பொது மக்களின் வரிப்பணம் ரூ.1880 கோடி
செலவிடப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த விஷயம் மீடியாக்களில் அடிபட்டபோது – இந்த தகவல்
குறித்த கேள்வியைக் கேட்ட வர்மா என்பவர் கருத்து
தெரிவிக்கையில்,
“நான் கேட்ட ஆர்டிஐ தகவலுக்கு இதுவரை மத்திய அரசு பதில்
தரவில்லை. எவ்வளவு பணம் செலவானது என்பதை மத்திய அரசு
இதுவரை எனக்குத் தெரிவிக்கவில்லை. சோனியா காந்தியின்
வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பாக நான் கோரியிருந்த ஆர்டி ஐ
கேள்விக்கு இதுவரை எனக்குப் பதில் வரவில்லை” –
என்று கூறி இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து திக் விஜய் சிங் மோடியை
பொய்யர் என்றும், கோயபெல்ஸ் என்றும்
மோடி பொய்யான தகவலை வெளியிட்டதற்காக
மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் காரசாரமாகப் பேட்டி
கொடுத்தார்.
இதற்கு பதில் கூறிய மோடி – “என் வாயை அடைக்க வேண்டும்
என்றால், மத்திய அரசு உண்மையான செலவுத் தொகையை
வெளியிட்டு நான் சொன்னது பொய் என்று நிரூபிக்கட்டும். பிறகு
மன்னிப்பு கேட்கிறேன்” என்றார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.
1) 2004 முதல் 2012 செப்டம்பர் வரை திருமதி சோனியா
காந்தி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் எத்தனை ?
எந்தெந்த நாடுகளுக்கு, எவ்வளவு முறை சென்றார் ?
அவைகளுக்கான மொத்தச் செலவு எவ்வளவு ?
2) அவருடன் பயணம் செய்தவர்கள் யார் யார் ?
3) இதில் எவருடைய செலவுகளை எல்லாம் மத்திய அரசு
ஏற்றுக் கொண்டது ? யாருடைய செலவுகளை எல்லாம்
காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டது ? மற்ற செலவுகளை
எல்லாம் ஏற்றுக் கொண்டவர் யார் ?
4) திருமதி சோனியா காந்தி அமெரிக்காவில் –
கேன்சர் மருத்துவ மனையில் சுமார் 6 வாரங்கள்
உள்நோயாளியாக தங்கி இருந்து எடுத்துக் கொண்ட
மருத்துவ சிகித்சைக்கான செலவுகளை ஏற்றுக் கொண்டது யார் ?
மத்திய அரசா ? காங்கிரஸ் கட்சியா ?
அல்லது திருமதி சோனியாவின் நலம் விரும்பிகள் யாராவதா ?
தனியார் செய்த செலவுகளுக்கெல்லாம்,
தனிப்பட்ட பயணங்களுக்கெல்லாம் –
மத்திய அரசு எப்படி தகவல் கொடுக்க முடியும் –
என்று கேட்கப்பட்டால் – அது சரியே.
ஆனால் மத்திய அரசின் செலவில் செய்த பயணங்களைப்
பற்றிய தகவல்களை தந்து தானே ஆக வேண்டும் ?
மத்திய அரசு செலவழிப்பது, மக்களின் வரிப்பணம்.
அது எவ்வாறு, எப்படி, யாருக்காக செலவழிக்கப்படுகிறது
என்பதை தெரிந்து கொள்ள இந்த நாட்டின் ஒவ்வொரு
குடிமகனுக்கும் உரிமை இருக்கிறது.
வர்மா என்பவர் ஜூலை 2010ல் கேட்ட கேள்வியில்
அதற்குப் பிறகு செய்யப்பட்ட (மருத்துவ சிகித்சை பயணம்
உட்பட) செலவீனங்கள் கணக்கில் வராது.
இதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்று வர்மாவே
சொல்லி விட்ட பிறகு – மோடி சொல்லும் தொகை அப்பட்டமான
பொய் தானே என்கிறது காங்கிரஸ் கட்சி.
இதிலும் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.
ஒன்று – மோடி சொல்வது பொய் என்று நிரூபிக்க,
உண்மைத் தொகை என்ன என்பதை மத்திய அரசே வெளியிட
வேண்டியது தானே ? ஏன் தயக்கம் ?
இரண்டு – ஜூலை 2010ல் வர்மா கேட்ட கேள்விக்கு
இன்று வரை மத்திய அரசு பதில் அளிக்காமல் இருப்பது ஏன் ?
திருமதி சோனியா காந்தியைப் பற்றிய தகவல்களில்
இவ்வளவு ரகசியம் காக்கப்படுவது ஏன் ?
இதற்கு அப்புறம் – புதன் மாலை வெளிவந்திருக்கும்
செய்திகளின்படி –
தலைமைத் தகவல் கமிஷனர் திரு சத்யானந்த மிஸ்ரா
ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
அதன்படி, மொராதாபாத்தைச் (உபி) சேர்ந்த நவீன்குமார்
என்பவர் கேட்டிருந்த ஒரு கேள்விக்கு தான் -மே 2012ல்
ஒரு பதில் கொடுத்திருப்பதாகவும், அதன்படி –
காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி, தன்
மருத்துவச் செலவுகளுக்காக அன்றைய தினம் வரை
மத்திய அரசிடம் பணம் எதுவும்
கோரவில்லை என்றும் – எனவே மத்திய அரசு இந்த வகையில்
செலவு எதுவும் செய்யவில்லை என்றும்-
ஒருவர் தன் சொந்தப் பணத்தை செலவழித்த வகைக்கு
அரசாங்கம் பதில் சொல்ல முடியாது என்றும் -கூறுகிறார்.
இதுவும் சரியே.
மருத்துவச் செலவு என்பது கேள்வியின் ஒரு பகுதியே.
ஆனால் நமது மேலே காணும் 4 கேள்விகளை மீண்டும்
ஒரு முறை கண்டால்,தனிப்பட்டவர்கள் செய்த செலவுகளை
நீக்கி விட்டு, மத்திய அரசு இதுவரை மேற்கண்ட வகைகளில்
செய்த செலவு எவ்வளவு என்கிற கேள்விக்கு பதிலே இல்லையே !
இந்த கேள்விகளைக் கேட்பது நரேந்திர மோடி என்கிற
பிஜேபி முதலமைச்சர், பொய்யர், கோயபெல்ஸ் என்றெல்லாம்
காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் கூறிக்கொண்டிருந்தால்,
அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்
என்று தான் பொருள்.
இந்த கேள்விகளைக் கேட்பது யார் – நரேந்திர மோடியா ?
இல்லை – இல்லவே இல்லை !
இந்த நாட்டின் நலனில் அக்கரையுள்ள அனைத்து குடிமக்களும்
கேட்கும் கேள்விகள் இவை.
உதாரணத்திற்கு ஏற்கெனவே நமது விமரிசனம்
வலைத்தளத்திலேயே –
02/09/2012 தேதியிட்ட –
“எங்கே போனார் ?
எப்போது போனார் ?
எப்போது திரும்ப வருவார் ? … ”
என்கிற இடுகையிலிருந்து ஒரு சிறு பகுதி –
——————————–
அவர் வகிக்கும் பதவி –
பல சலுகைகளுக்கு வழி வகுக்கும் பதவி.
சென்றது அரசு பணத்திலா அல்லது சொந்த
செலவிலா ? – தெரியாது.
உடன் சென்றவர்கள் யார் யார் ? – தெரியாது.
உறவினர்கள், கட்சிக்காரர்கள், உதவியாளர்கள் –
பாதுகாப்பு அதிகாரிகள் யாராவது கூடச் சென்று
இருக்கிறார்களா ? – தெரியாது.
கூடச்சென்றவர்களுக்கெல்லாம் எப்போது,
எப்படி விசா வாங்கப்பட்டது ? இந்தப் பயணம்
எப்போது திட்டமிடப்பட்டது ?- தெரியாது.
அவர்கள் அரசாங்க செலவில் விமானப் பயணம்
மேற்கொள்ளத் தகுதி உடையவர்களா ? – தெரியாது.
இந்த பயணச் செலவு எல்லாம் எந்த கணக்கில்
வரும் ? – தெரியாது.
———————————–
நீங்களும், நானும் –
நம்மைப் போன்றே இந்த நாட்டின் குடிமக்கள்
பலரும் இந்தக் கேள்வியை கேட்டுக்கொண்டு தான்
இருக்கிறார்கள்.
இதே கேள்வி – அவர்களுக்கு மிக ஆபத்தான மனிதராகக்
காட்சி அளிக்கும் நரேந்திர மோடி என்கிற மனிதர்
மூலமாக இப்போது வெளிவந்திருப்பதால் – இவ்வளவு
டென்ஷன் – பரபரப்பு, ஆத்திரம், அவதூறு, நெகடிவ்
பப்ளிசிடி !
இதற்கு சரியான விளக்கங்கள் வரும் வரை
மோடியும் விடப்போவதில்லை –
மக்கள் மறக்கப்போவதில்லை !
மடியில் கனமில்லை என்றால் – கேட்கப்படும்
விவரங்களை வெளியிட வேண்டியது தானே ?
இதற்கு உரிய விளக்கங்களை அளிப்பதற்கு பதிலாக
குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யப்
போயிருக்கும் திருமதி சோனியா காந்தி கூறுகிறார் –
“மோடி இதற்கு முன்னால் எத்தனையோ முறை
எங்களைத் தாக்கி இருக்கிறார். நாங்கள் கடந்த
காலங்களில் எப்போதுமே அவற்றைப் பொருட்படுத்தியதே
இல்லை. இப்போதும், இனி எதிர்காலத்திலும்
பொருட்படுத்த மாட்டோம்.”
(“There are many attacks that have been made
against us in the past. But we didn’t consider
them then and won’t consider them in future,”
Gandhi said at the rally, refusing to
acknowledge Modi’s statements.)
அவருக்கு நாம் சொல்ல விரும்புவது –
-ரொம்ப நல்லது. திருமதி சோனியா காந்தி அவர்களே –
தயவு செய்து மாறாதீர்கள் -இப்படியே இருங்கள்.
இந்த நாட்டு மக்களும் இனி உங்களைப்
பொருட்படுத்தாமல் இருக்க இது பெரிதும் உதவும்.



மத்தியில் அடுத்த முறை ஆட்சிக்கு காங்கிரஸ் வரவே கூடாது. திறமையற்ற நிர்வாகம். விலைவாசி எவரஸ்டு உயரத்தில் சென்று விட்டது, விவசாயிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள்,ஏமாற்றபட்டுளனர் அரசு துறைகள் . கறுப்பு பணம் பதுக்கல் மற்றும் ஊழல் போன்றவைகளால் தோற்று விட்டது. மோடி, அத்வானி ஆகியோரது குற்றச்சாட்டுகளுக்கு நேரடி பதில் கூறாமல் பொதுமக்களை திசை திருப்பும் வகையில் பேசப்பட்டு வருகிறது.
எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் மரண அடி கொடுப்பார்கள்.
we r indians incredible india believe everything
Mr. Kavirimainthan,
I agree with your view point.
Whether Mr.Modi is good or bad ?
Whether BJP is to be supported or not ?
Without going into these questions
we can definitely support the issue.
Citizens of this country have every right
to know how & in what manner tax payers
money is being spent.
Govt. as well as congress party cannot
escape from its responsibility.
Dr.S.Phillips
Kaviri, I like this analysis. You are correct, we need to ask these questions.
பொதுவாக சோனியா மற்றும் அவர் குடும்பம் இந்தியாவில் இருந்து துபாய் போன்ற ஒரு நாட்டுக்கு சாராரணமாக சென்று பின் அங்கிருந்து பிரத்தியேக சொகுசு ஜெட் மூலம் அவர்கள் செல்ல வேண்டிய நாட்டுக்கு செல்வதாக சு சுவாமி கூறி படித்தாக ஞாபகம்.
காரணம் இவ்வாறான ஜெட் களில் இங்கிருந்து போனால் அதை பற்றிய விபரமும் அது யாருக்கு சொந்தமானது யார் பணம் கொடுத்தார்கள் என்பது எல்லாம் எப்படியாவது வெளியில் வந்து விடும் என்ற பயம் மற்றும் முன் எச்சரிக்கை. மேலும் ஒரு விமானம் புறப்படும் முன் அது பறக்க இருக்கும் பாதை, மற்றும் சேரும் இடம் சம்பந்தமான முழு விபரங்களை ‘flight plan ‘ எனும் தகவல் அறிக்கை மூலம் பதிவு செய்ய வேண்டும். அதனால் இங்கிருந்து கிளம்பினால் எங்கு போகிறோம் எனபது தெரியவரலாம் என்பதால் கூட அவ்வாறு செய்யலாம்.
அது சரி நாம் கேட்ட உடனே அந்த அம்மா சொல்லிடுவாரா என்ன? மாமனா மச்சானா? நாம் எல்லாம் (அந்த அம்மாவுக்கு) அந்நிய அடிமை பதர்கள் !
2ஜியில் இருந்தே மடியில் கணம் சேர ஆரம்பித்து விட்டதே?