உம்மன் சாண்டியின் வேடத்தை அவரது அட்வகேட் ஜெனரலே கலைத்தார் !!

உம்மன் சாண்டியின் வேடத்தை அவரது
அட்வகேட் ஜெனரலே கலைத்தார் !!

தெரிந்தோ தெரியாமலோ –
அறிந்தோ அறியாமலோ –
கேரளாவின் அட்வகேட் ஜெனரல் கே.பி.தண்டபாணி –
முதலமைச்சர் உம்மன் சாண்டியின் பொய் முகத்தை
கேரளாவின் உயர்நீதி மன்றத்தில்
வெளிப்படுத்தி விட்டார் !

கேரள முதல் அமைச்சரும், மற்ற அமைச்சர்களும்,
கேரள அரசியல்வாதிகளும், மீடியாக்களும்
தேவையின்றி விஷயத்தை பூதாகாரமாக்குகின்றன
என்கிற உண்மை அவர்களது அட்வகேட் ஜெனரலாலேயே
வெளிப்படுத்தப்பட்டு விட்டது.

முல்லைப் பெரியார் அணை உடைந்து விடும் என்று
அவர்கள் உள்நோக்கத்துடன் கிளப்பிய புரளி
அவர்களுக்கே எதிராகப் போனது.
வெள்ளிக்கிழமை அன்று கேரள உயர்நீதி மன்றம்
முன்பாக ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது.

அணை உடைந்தால் லட்சக்கணக்கான மக்கள்
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிர் இழப்பார்கள்.
எனவே அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கேரள அரசுக்கு
நீதிமன்றம் உத்திரவிட வேண்டும் –
என்று கோரி பல பொது நல மனுக்கள்
கேரள ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

இதற்கு உச்சகட்ட முக்கியத்துவம் கொடுத்த
தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் மற்றும்
நீதிபதி பி.ஆர்.ராமச்சந்திர மேனன் ஆகியோரைக்
கொண்ட உயர்நீதிமன்ற பென்ச் –
இந்த விஷயத்தில் அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன
என்று கேட்டு 24 மணி நேரத்தில் பதில் அளிக்குமாறு
கேரள அரசுக்கு உத்திரவு இட்டது.

இதற்கு அவசரம் அவசரமாக பதில் மனு சமர்ப்பித்த
கேரளாவின் அட்வகேட்
ஜெனரல் கே.பி.தண்டபாணி –
இதில் பொதுமக்கள் அநாவசியமாக அச்சப்படத்
தேவை இல்லை என்று கூறி  காரணங்களையும்
விளக்கியுள்ளார்.

அவர் கூறியுள்ள மற்ற விஷயங்களோடு,
தமிழ் நாட்டிற்கு மிகவும் சாதகமான –
கீழ்க்கண்ட தகவல்களையும் தந்திருக்கிறார்.

1) அணை உடைய நேர்ந்தாலும், அதிலிருந்து
வெளியேறும் நீர் அனைத்தையும் –
அதன் நேர் கீழே 36 கிலோமீட்டர் தொலைவில்
உள்ள  இடுக்கி அணையிலும்,செருதோனி,
குலமாவு போன்ற நீர்த்தேக்கங்களிலும்
தேக்கி விட  முடியும்.

2)முல்லைப்பெரியாறு அணைக்கும்,
இடுக்கி அணைக்கும் இடையே உள்ள பகுதிகளில்
வெறும் 450 குடும்பங்கள்
மட்டுமே பாதிக்கப்படக்கூடிய  நிலையில் உள்ளன.
ஆபத்து காலங்களில் வெகு சுலபமாக அவர்களை
பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றிவிட முடியும்.

3)இதில் பயப்பட வேண்டிய அளவிற்கு எந்த
ஆபத்தும் இல்லை. ஊடகங்கள்தான் மக்கள் மனதில்
அநாவசியமாக பீதியை உண்டாக்குகின்றன.

இந்த பதில் மனு கேரளாவில்  பலத்த புயலைக்
கிளப்பியுள்ளது.

அட்வகேட் ஜெனரலுக்கு பலத்த கண்டனத்தையும்
எதிர்ப்பையும் ஒன்று சேரத் தெரிவித்துள்ள
கேரள ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச்
சேர்ந்த அரசியல்வாதிகள் –
உடனடியாக அவரைப் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரள அரசின் பொய் வேடத்தை –
அவர்களது அட்வகேட் ஜெனரலே
அம்பலப்படுத்தி இருக்கும் இந்த வினோதத்தை –
தமிழக  அரசு சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும்போது
சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to உம்மன் சாண்டியின் வேடத்தை அவரது அட்வகேட் ஜெனரலே கலைத்தார் !!

  1. padithavan's avatar padithavan சொல்கிறார்:

    “தன் வினை தன்னைச்சுடும்” !

    உம்மன் சாண்டிக்கு –

    பட்டினத்தார் புத்தகத்தை அனுப்புங்கள் –
    படிக்கட்டும் !

  2. சத்ரியன்'s avatar சத்ரியன் சொல்கிறார்:

    அவரையும் “மனநிலை” பரிசோதனைக்கு அனுப்பி வெச்சி காமெடி பண்ணுவாங்க பாருங்களேன்.

  3. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    நம் அண்டை மாநிலங்கள் ஆந்திரா,கர்நாடகா,கேரளா
    இந்த மூன்றிலும் காங் அல்லது பா.ஜ க ஆட்சி அமைக்க வைப்பு உள்ளது.அதே போல மத்தியில் ஆட்சி அமைக்க இந்த இரண்டு கட்சிகளில் ஒன்றினால்தான் முடியும்.
    ஆனால் நம் மாநிலத்தை எடுத்துக்கொண்டால் இந்த இரண்டு கட்சிகளும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பே இல்லை.மேலும் தொடர்ந்து ஆட்சி செய்யும் தி.மு.க & அ(தே) தி மு.க இரண்டும் நேர்மையற்ற கொள்ளை அடிக்கும் கட்சிகள்.
    எனவே எந்த அண்டை மாநில பிரச்சினைகளிலும் மத்திய அரசு நமக்கு சாதகமான தீர்ப்பு வழங்காது.உச்ச நீதி மன்றம் நமக்கு சாதகமாக காவிரி நதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை இன்று வரை கர்நாடக அரசு நடை முறைபடுத்தப்படவில்லை.மத்திய அரசும் இதை கண்டுகொள்ள வில்லை!
    நாம் தேசீய நீரோட்டத்திலிருந்து விலகி தி.மு.க என்ற விஷமிகள் கையில் சிக்கியதறக்கு கொடுக்கும் விலை இது.

  4. Thamileean's avatar Thamileean சொல்கிறார்:

    உண்மை,சிற்றூராட்சி உறுப்பினர் தேர்தலில் கூட கட்டுத் தொகை யிழக்கும் காங்கிரசுக்கு எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்?
    மத்திய அரசும் இதை கண்டுகொள்ள வில்லை!
    நாம் தேசீய நீரோட்டத்திலிருந்து விலகி தி.மு.க என்ற விஷமிகள் கையில் சிக்கியதறக்கு கொடுக்கும் விலை இது- Ganpat

    தேசீய நீரோட்டத்திலிருந்து விலகி இருப்பது யார்? Ganpat
    நாமா ? மத்திய அரசா ? உச்ச நீதி மன்றமா ? Ganpat
    இறையாண்மை – வெங்காயம் இப்ப என்ன விலை? Ganpat
    பிரதமர் என்னும் அலுவலக பையன் பணி செய்ய மன்மோகன்
    இன்னும் வெட்கமில்லாது சட்டத்தைகாக்க ஒரு உச்சநீதி மன்றம் = சனநாயக நாடு?!
    இவர்களிடம் இன்னும் நீதி வேண்டி தமிழன் ?! Ganpat க்கு
    ரொம்ப வருத்தம்.. போய் கொலை வெறி பாட்ட கேளு கண்ணு,

  5. yatrigan's avatar yatrigan சொல்கிறார்:

    மலையாளிகளை வழிக்கு கொண்டு வர –
    ஒரே ஒரு மிகச்சிறிய முயற்சி –
    பயப்பட வேண்டாம் – அறவழியிலான முயற்சி தான் !

    தமிழ்நாட்டில் தொழில் செய்யும்
    மலையாளிகளின் கடைகளை பகிஷ்கரியுங்கள்.
    சாதாரண டீ கடையிலிருந்து –
    ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடை வரை அத்தனை
    மலையாளிகளின் கடைகளையும் பகிஷ்கரியுங்கள்.

    தேவைப்பட்டால் இந்த கடைகளின்
    வாசலில் கையில் வேண்டுகோள் அட்டையுடன்
    நிற்கலாம்.
    ஒரு தமிழன் கூட இந்த கடைகளுக்குள்
    போகக்கூடாது.

    உம்மன் சாண்டியின் மண்டையில் உறைக்கும் –
    வழி தன்னால் பிறக்கும்.

  6. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    @Thamileean:

    உடன்பிறப்பே,

    நான் கொலைவெறி பாட்டு கேட்பது இருக்கட்டும்.நீங்கள் உங்க தலைவரிடம் கேளுங்கள்.

    1974 இல் ஏன் அவர் இந்திராவின் மிரட்டலுக்கு பயந்து
    காவிரி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்று?

    இன்றும் ஏன் மத்தியில் காங்.அரசுடன் கூட்டணியைத்தொடருகிறார் என்று?

    யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உண்மை இதுதான்.
    கடந்த 45 ஆண்டுகளாக தமிழகம் சீரழிந்து போனது கருணா ஜெயா கருணையினால்தான்.

    அண்டை மாநிலங்களில் ஏதேனும் பிரச்சினை எனில் அந்த மாநில தலைவர்கள் நேரடியாக களம இறங்குகின்றனர்.நாமோ காவிரி பிரச்சினைக்கு பாரதிராஜாவையும்,ரஜினிகாந்த்தையும்
    போராட அனுப்புகிறோம். தன் குடும்பத் தகராறு என்றால் டெல்லி ஓடும தலிவர்,ஈழத்தமிழ பிரச்சினைக்கு ஈ-மெயில் போதும் என நினைக்கிறார்.காலை ஏழு மணி முதல் பத்து மணிவரை சாப்பிடாமல் பீச் காற்று வாங்கினால் போதும் என நினைக்கிறார்.

    நம் அரசியல் சட்டப்படி இந்தியாவிலிருந்து நாம் பிரியவும் முடியாது;மத்திய அரசின் ஆதரவு இன்றி ஏதும் சாதிக்கவும் முடியாது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள் ஐயா!

  7. அருள்'s avatar அருள் சொல்கிறார்:

    முல்லைப்பெரியாறு அநீதியும் முதுகெலும்பில்லாத தமிழ்நாடும்

    http://arulgreen.blogspot.com/2011/12/blog-post_09.html

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.