ஜெகத் கஸ்பர் – எப்படி இன்னும் “வெளியே” ? “அன்னை”யின் அருளா ?

ஜெகத் கஸ்பர் – எப்படி இன்னும்  “வெளியே” ?
“அன்னை”யின்  அருளா ?

ஏற்கெனவே  ஜெகத் கஸ்பர்   நடத்தும் தமிழ் மையத்திற்கு
ராஜாவின்  கருணையால் கிடைத்த  சில “கொடை”களைப்
பற்றிய விவரங்கள் வந்திருந்தன.

இப்போது இன்னும் கொஞ்சம் விவரங்கள்
வெளிவந்திருக்கின்றன. யார் யாரிடமிருந்து,
எவ்வளவு   நன்கொடைகள் வந்திருக்கின்றன  பாருங்கள் –

யுனிடெக் – 50 லட்சம்
டாடா டெலிசர்விசஸ் – 25 லட்சம்
ஷ்யாம் டெலிகாம் – 10 லட்சம்
ரிலயன்ஸ் கேபிடல் – 25 லட்சம்
இந்தியா புல்ஸ் – 50 லட்சம்
பன்னாரி அம்மன் சுகர்ஸ் -5 லட்சம்(மதுபான தயாரிப்பாளர்கள்)
சாதிக் பாட்சாவின் க்ரீன் ஹவுஸ் – 5 லட்சம்
மெட்றாஸ் சிமெண்ட்ஸ் – 2.5 லட்சம்
ஈடிஏ ஸ்டார் (மருத்துவ காப்பீடு) – 1 கோடி

இந்த நிறுவனங்கள் எல்லாம்  தமிழ்க்  கலைகளும்,
பண்பாடும்  வளர வேண்டும் என்று  மிகவும் வேண்டி,
விரும்பி, ஆசைப்பட்டு –
2ஜி அலவரிசை  ஒதுக்கப்பட்ட
2008 ஆம் ஆண்டு  மட்டும்  ஜெகத் கஸ்பரின்
நிறுவனத்திற்கு  இந்த அளவு “கொடை”  
அளித்துள்ளனவாம்.  

இந்த நிறுவனங்கள்  ஜெகத் கஸ்பரின்
புகழ்  தெரிந்து தாமாகவே  முன்வந்து கொடுத்தனவா –
இல்லை கஸ்பர்  போய் அவர்களைக் கேட்டு பெற்றாரா-
அல்லது வேறு எப்படி வந்தது –
என்பது சிபி ஐ விசாரித்தால் தெரிய வரலாம் !

“2ஜி அலைக்கற்றையை  முறைகேடான வழிகளில்
பெற்ற நிறுவனங்கள்,  ராஜா கூறியபடி  பல வழிகளில்
பணம்  பட்டுவாடா செய்திருக்கின்றன.  அதில் ஒரு வழி
தமிழ் மையத்திற்கு நன்கொடை” –  

என்று  கூறியுள்ள  பிரசாந்த் பூஷன் –
சிபி ஐ  இது குறித்து தீவிரமாக
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில்
மனு  கொடுத்திருக்கிறார்.

2ஜி யில் தொடர்புடைய   பெரிய பெரிய தொழில் புள்ளிகளை
எல்லாம்  சிபி ஐ  அள்ளிக் கொண்டு போய்  “உள்ளே”
வைத்திருக்கும்போது  ஜெகத் கஸ்பர் மட்டும்
இன்னும் “வெளியே”  இருப்பது எப்படி ?
இலங்கை விஷயத்தில் “அன்னை”க்கு  செய்த
“பணி”கள்  காரணமாக காட்டப்படும் “கருணை”யா ?

கொஞ்ச நாட்களாக  ஆள் வெளியே தலையே
காட்டுவதில்லை பார்த்தீர்களா ?   முகத்தைப் பார்த்தால்
யாருக்காவது இது பற்றி ஞாபகம் வந்து விடப்போகிறதே
என்கிற  பயமோ ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கனிமொழி, கருணாநிதி, குடும்பம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to ஜெகத் கஸ்பர் – எப்படி இன்னும் “வெளியே” ? “அன்னை”யின் அருளா ?

  1. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    எங்கள் இந்திய குடும்பம் பெரிசு!!
    ===========================
    ஒரு தாத்தா

    இரண்டு பாட்டி

    மூன்று அம்மா

    நான்கு பசங்க

    ஐந்து பேரன்கள்

    ஒரு அம்மாஞ்சி(அம்மான் சேய்)
    ==========================
    உருப்பட்டா போலதான்!!

  2. raja natarajan's avatar raja natarajan சொல்கிறார்:

    //2ஜி யில் தொடர்புடைய பெரிய பெரிய தொழில் புள்ளிகளை
    எல்லாம் சிபி ஐ அள்ளிக் கொண்டு போய் “உள்ளே”
    வைத்திருக்கும்போது ஜெகத் கஸ்பர் மட்டும்
    இன்னும் “வெளியே” இருப்பது எப்படி ?
    இலங்கை விஷயத்தில் “அன்னை”க்கு செய்த
    “பணி”கள் காரணமாக காட்டப்படும் “கருணை”யா ?//

    நம்ம ட்யூப் லைட் மண்டைக்கு மெதுவாத்தான் புரியுது.

  3. RAJASEKHAR.P's avatar RAJASEKHAR.P சொல்கிறார்:

    MOTTAI
    ___
    *(~_~)*
    ) (
    TAMILANSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

  4. RAJASEKHAR.P's avatar RAJASEKHAR.P சொல்கிறார்:

    M___
    *(~_~)*
    …..) (…..
    TAMILANSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

  5. Ponraj Mathialagan's avatar Ponraj Mathialagan சொல்கிறார்:

    இன்னும் வேடிக்காயான் விஷயம் ஒன்று சொல்கிறேன். “கஸ்பார் குறித்து ஞானி சொன்னது”: ‘இவர் ஒரு போலிப் பாதிரி. ஒரு பயங்கரவாத கூட்டத்தை ஆதரிப்பவர். தமிழர்கள் நிம்மதியாக வாழ விடாமல் இன்றும் புளிகொசம் போட்டு காசு பார்ப்பவர்’….. “ஞானி பற்றி கஸ்பார் சொன்னது:” ‘ஞானி ஒரு மனநோயாளி. வெளியில் அறிவிஜீவியாக தெரியும் இவருடன் நெருங்கி பழகினால் தான் அசிங்கம் தென்படும்’…..!!!! நிற்க. இந்த இருவரைடந்து கருத்துகளையும் நாம் உண்மை என்று தான் கொள்ளவேண்டும்.

  6. Ponraj Mathialagan's avatar Ponraj Mathialagan சொல்கிறார்:

    ‘கஸ்பார் – பிரபாகரன் சந்திப்பு குறித்து’ எனக்கு நெடுநாளாக இருந்த ஒரு கேள்வியை என் (புலிகள் மீது என்னை விட அதிக ஈடுபாடு கொண்ட) நண்பரிடம் கேட்டேன். “ஏம்ப்பா? கஸ்பார் தான் இந்திய உளவாளின்னு புலிகளுக்கு தெரியுமே? அப்புறம் எதுக்குப்பா கூப்பிட்டு வச்சு பேசுனீங்க? பேட்டி கொடுத்தீங்க? முக்கியமான இடங்களை சுத்தி காட்டுனீங்க? முட்டாள்தனமா இல்லை?”…. என் நண்பன் சொன்ன பதில்: “அதற்க்கு அர்த்தம் ‘புலிகள் ஒன்றும் சின்ன பாப்பாக்கள் அல்ல என்பதை ஆதாரத்துடன் உன் இந்தியாவிடம் கொண்டு போய் காட்டு’ என்பதே….!!!!”

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.