கனிமொழி அவர்களின் அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் ……

கனிமொழி அவர்களின் அறிவிக்கப்பட்ட
சொத்துக்கள் ……

நாடாளுமன்ற மேலவைத் தேர்தலின் போது
(2009 ஆம் ஆண்டு )
கனிமொழி அவர்கள் தேர்தல் அதிகாரியிடம்
சமர்ப்பித்த விவரங்களின்படி அவரது
சொத்து விவரங்கள் –

அசையும் மற்றும் அசையா
சொத்துக்களின் மொத்த மதிப்பு –
ரூபாய் 8,56,02,536/-(எட்டு கோடியே
ஐம்பத்திஆறு லட்சத்து இரண்டாயிரத்து
ஐந்நூற்று முப்பத்தி ஆறு ) -அவ்வளவே.

தமிழகத்திலிருந்து சென்றிருக்கும் நாடாளுமன்ற
மேலவை (ராஜ்ய சபா) உறுப்பினர்களில்
அதிக சொத்து மதிப்பு உள்ளவரும் இவரே.

தேர்தல் கமிஷனுக்கு ஒரு விண்ணப்பம் –
வெறும் சொத்து மதிப்பை மட்டும் கொடுத்து
விடுவதோடு நில்லாமல், இந்த சொத்தை
வேட்பாளர்கள்  எப்போது வாங்கினார்கள்,
எப்படி வாங்கினார்கள் ?( காசு கொடுத்தா,
கொடையா,வாரிசு முறையிலா )
என்கிற விவரங்களையும் சேர்த்து
கொடுத்து விட்டால் – அது பல பேர்
அநாவசியமாக மண்டையைக் குடைந்து
கொள்ள வேண்டிய அவசியத்தை
தவிர்க்க உதவும் !)

– இந்த  செய்தி இத்துடன்  தீர்ந்தது !
இதற்கு மேல் நான் எழுதுகின்ற விஷயங்களுக்கும்
இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை
என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன் !!

வக்கீல் நோட்டீஸ் வாங்க எனக்கு
வக்கோ, வசதியோ இல்லை என்பதால்
இதை மீண்டும் ஒரு முறை உறுதியாகவும்,
இறுதியாகவும் தெரிவித்துக் கொள்கிறேன் !

—————————————-

நானும் கிட்டத்தட்ட  40 வருடங்களாக –
நாயாய், பேயாய், ஊர் ஊராய்
அலைந்து திரிந்து உழைத்து ஓடாகி விட்டேன்.
இத்தனைக்கும் எந்தவித உழைப்பிற்கும்
அஞ்சியதில்லை.இதில்
இரட்டைப் பட்டதாரி (double graduate)
என்கிற தகுதி வேறு.

இருந்தாலும் என் இத்தனைக் கால உழைப்பில்
என்னால் சேர்க்க முடிந்தது – வாங்க முடிந்தது
நான் குடி இருக்கும் ஒரு இரண்டு அறைகளைக்
கொண்ட குடியிருப்பு (2 bed room flat)
மட்டுமே. மற்றபடி கைக்கும் வாய்க்குமே
போதவில்லை.

அதெப்படி சில பேர் மட்டும் சிறு வயதிலேயே
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து விடுகிறார்கள்
என்பது என்னைப் பொறுத்த வரையில்
புரியாத புதிராகவே இருக்கிறது !

டாட்டா, பிர்லா போன்ற பரம்பரை பணக்காரர்கள்
என்றால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் முதல் பரம்பரையிலேயே எப்படி
கோடீஸ்வரர் ஆவது ?

பல சுய முன்னேற்ற புத்தகங்கள் வருகின்றன.
நிறைய புத்தகங்களைப் படித்துப் பார்த்து விட்டேன்.
எதுவும் உபயோகத்திற்கு ஆகாது.
இதற்கான வழியை எதிலும் காண முடியவில்லை !

“அரசியல்வாதியாக ஆகிப் பார்” என்கிறீர்களா ?
அதிலும் நம்பிக்கை வர மாட்டேன் என்கிறது.

அரசியலில்  என்னத்தை சம்பாதித்து என்னத்தை
பெண்டு பிள்ளைகளுக்கு எழுதி வைத்து விட முடியும் ?

எனவே  முதல் தலைமுறையிலேயே
பெரும் கோடீஸ்வரர்களாக உருவெடுத்தவர்களுக்கு
ஒரு வேண்டுகோள் வைக்கலாம் என்றிருக்கிறேன்.

தாங்கள்  என்ன தொழில் செய்து,
எப்படி முன்னுக்கு வந்து பெரிய அளவில்
சொத்து சேர்த்தார்கள் என்பதை –

அவர்கள் பெரிய மனது பண்ணி
விளக்கமாக எடுத்துச் சொன்னால் –
என்னைப் போல்,
உங்களைப் போல்
உள்ள மற்ற ஏழை பாழைகளும்
பிழைத்துப் போகலாம் அல்லவா ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், ஸ்பெக்ட்ரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

13 Responses to கனிமொழி அவர்களின் அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் ……

  1. Lotus12's avatar Lotus12 சொல்கிறார்:

    I find it very interesting, very good style. First time iam reading your blog.

  2. RAJASEKHAR.P's avatar RAJASEKHAR.P சொல்கிறார்:

    சபாஷ் அய்யா சரியாக சொன்னீர்கள் ……….இவர்கள் இப்படி சொத்து சேர்ப்பதை பார்த்தால் அடுத்த ஜென்மத்தையும் புக் செய்திருப்பாங்க போல இருக்கு ……….???????!!!!!

  3. ரேவதிநரசிம்ஹன்'s avatar ரேவதிநரசிம்ஹன் சொல்கிறார்:

    எனக்குக் கூட அறிய ஆசைதான்.
    நல்ல பதிவு.

  4. YOGA.S's avatar YOGA.S சொல்கிறார்:

    ஒண்ணு மட்டும் புரிய மாட்டேங்குது நண்பரே.இவ்ளோ சேத்து வச்சிருக்காங்க, ஓ.கே. போறப்போ(பாடயில)என்னாத்த எடுத்துக்கினு போவாங்க??????!

  5. JoARF's avatar JoARF சொல்கிறார்:

    You have raised a qn how such a wealth has been amassed at an young age by this woman politician.

    The wealth has been revealed to the public and the government boldly. Which means, she must be paying her IT regularly. For IT people, it is not necessary to reveal the total wealth, but also, complete break up, and the sources.

    Therefore, you are wrong to assume that all her weath came through illegal means. If illegal, she will have faced Enforcement Directorate, IT department and Competent Authority (SAFEMA and NDPS Act). She hasnt. Which means, nothing illegal.
    From where she got the wealth need not be revealed to the public but only to the relevant authorities. They why attribute motives ?

    However, there can be both fair and wild guesses. My guess is that she must have got a lion’s share of paternal (i mean MuKa’s) wealth. Only that can be the source. Her own employment which is not only as an MP, earlier as a sub editor in the Hindu, will make her like you only.

    Joining politics may make you rich ? Not necessary. The best way to become wealthy is to become a bureucrat, which is not possible for all.

    The civil servants make more money. Recently, an IAS couple in MP were caught with Rs.350 cr unaccounted wealth ! Why dont write a blogpost on them, asking: How can I learn from them?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      முக்கியமாக நண்பர் JoARF கவனத்திற்கு –

      கனிமொழி அவர்களின் தந்தை சென்ற 40 ஆண்டுகளில்
      மொத்தம் 7 திரைப்படத்திற்கு தான் வசனம்
      எழுதி இருக்கிறார். அதில் கடைசி 3 படங்களில்
      கிடைத்த பணத்தை கொடையாக கொடுத்து விட்டார்.

      மீதி உள்ள படங்கள் எல்லாம் 1970 க்கு முன்னர்
      எழுதியது. அவர் அந்த காலத்தில் எழுதிய
      மொத்த படங்களுக்கும் சேர்த்தே அவர் சம்பாதித்தது
      ஒரு கோடியையே தாண்ட வாய்ப்பில்லை.

      அவரது வருமானமே இவ்வளவு தான் என்கிறபோது,
      இவ்வளவு ஆண்டுகளாக வாழ்க்கை நடத்தி, மீதியை
      அவரது 2 மனைவிகளுக்கும்,4 பிள்ளைகளுக்கும்,
      2 பெண்களுக்கும் பிரித்துக் கொடுத்தால் –
      ஆளுக்கு 8 கோடி வருமா ?

      கேள்வி நல்ல வருமானம் வரக்கூடிய தொழிலோ,
      வியாபாரமோ பண்ணாதபோது இத்தனை பணம்
      வந்தது எப்படி என்பது பற்றி தான்.

      தந்தைக்கே இவ்வளவு பணம் சம்பாதிக்கக் கூடிய
      பின்னணியும், வாய்ப்பும் இல்லாதபோது வாரிசுகளுக்கு
      இவ்வளவு பணம் எப்படி வந்தது என்பது தான்.

      நாம் தெரிந்து கொள்ள விரும்புவது எல்லாம்,
      அரசியல்வாதியாகி பொது வாழ்க்கைக்கு
      வந்து விட்டவர்களைப் பற்றி மட்டும் தான்.

      தேர்தலில் நின்று நம்மிடம் ஓட்டு கேட்பவர்களின்
      பின்னணியை நாம் தெரிந்து கொள்ள விரும்புவது
      எப்படி தவறாகும் ?

      எங்களிடம் ஆட்சியைக் கொடுங்கள், அதிகாரத்தை
      கொடுங்கள் என்று கேட்பவர்களின் பின்னணி
      நமக்கு தெரிய வேண்டாமா ?
      அவர்கள் பின்னணி வாக்காளர்களுக்கு
      தெரிய வேண்டும் என்று தேர்தல் கமிஷனே
      கருதுவதால் தானே இந்த விவரங்களை
      கேட்டு வாங்கி, வெளிப்படையாக அறிவிக்கிறது ?

      என் பதிலின் பின்னணியில் இந்த கட்டுரையை
      மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள்.
      இதன் அவசியத்தை நீங்களும்
      புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

      – வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

      • JoARF's avatar JoARF சொல்கிறார்:

        நீங்கள் எழுதியது: கனிமொழி கோடிக்கணக்கில் தேர்வாணையத்தில் கணக்கு கொடுத்தார். அவரிடம் அவ்வளவு பணம் வந்தது எப்படி என்பதே,

        அவரிடம் அவர் தந்தை கொடுத்திருக்கலாம் என்பதை சரியல்ல எனச்சொன்ன நீங்கள் நான் சொல்ல்வற்றைப் பற்றி ஒன்றுமே அறிய விழையவில்லை.

        தேர்வாணையத்திற்கு சமர்ப்பித்த கணக்கு பொதுவில் வைக்கப்பட்டது. அவர் நினைத்திருந்தால் குறைத்துக் காட்டியிருக்கலாம். செய்யவில்லை ! அக்கணக்கில் ஒரு பிரதியை அவ்வாணையம் வருமானவரித்துறைக்குக் கொடுக்கவேண்டும். அதை வைத்து அவர்கள் கனிமொழியை விசாரிக்கலாம். அல்லது அக்கணக்கு வருமானவரி சரியாகக் கட்டினாரா என்பதற்கும் உதவும். ஐயமிருப்பின் அவர்கள் மேற்கொண்டும் சோதனை செய்யலாம்.

        எதுவே அப்படி நடக்கவில்லை. வருமான வரித்துறைக்கு, எல்லாச்சொத்துக்களின் விவரங்களை அக்கு வேறு ஆணி வேறாகக் கொடுக்க வேண்டும்.

        ஆக கனிமொழியின் கணக்கு சரியாக கொடுக்கப்பட்டது மட்டுமல்ல, தவறாக பெறப்பட்ட பணமும் அல்ல என்பது தெளிவாகிறது. உங்களுக்கு ஏன் தெளிவாகவில்லை?

        உங்கள் கணிப்பின்படி அரசியல்வாதிகளிடம் இவ்வளவு பணம் இருக்கக்கூடாதென்பதா ?

        அப்படியானால் சொல்லுங்கள்.

        • JoARF's avatar JoARF சொல்கிறார்:

          கள்ளப்பணம் இல்லையென்பதாயிற்று. பின்னே அவர் எப்படி அதைச்சம்பாதித்தார் ? இதற்குப் பதில் வரு.துறைக்கேத் தெரியும். கள்ளப்பணம் என்றால், அவர்கள் பிற சம்பன்தப்பட்ட துறைக்குத் தெரிவித்தேயாக வேண்டும் தகுன்த நடவடிக்கை எடுப்பதற்கு.
          ம. அரசில் ஒவ்வொரு துறையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. பொது மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும் என விழப்பமா? ஏன்?

          என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். என் ஈ.மெயில் உங்களுக்கு மட்டுமே தெரியும். தெரியவேண்டும் எனக்கட்டாயமிருப்பதால். பிறருக்கு நீங்கள் ஏன் தெரியப்படுத்தவில்லை? பிறர் ஏன் தெரின்து கொள்ள்வேண்டும் முதலில்.

          Just like that. What more do you want ? Is it your point that politicians with low income only should stand for elections ? Or persons with low income only enter politics ? What is the gurantee that such persons will have unimpeachable integrity ?

          If income is the only criterian, then catch a beggar and make him the CM.

          He is better qualified than all of us. Why not?

  6. JoARF's avatar JoARF சொல்கிறார்:

    Yoga, the answer is in your query.

    பாடையிலே போகும்போது மட்டுமே வெறுங்கையாக இருக்க வேண்டும். அதற்கு முன் வாழ்க்கை நிறைந்ததாகவே இருக்கவேண்டும் என்பதுதான் உங்கள் கருத்து.

    இல்லென்றால், உங்களால் நான் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லவியலாது.

    என் கேள்வி:

    இருக்கும்போது ஏன் வெறுங்கையராக இருக்கவேண்டும் ? ஆராவது சட்டம் போட்டிருக்கிறார்களா ?

    பணம் நிறையக்கொண்டு, வசதிகளோடு தானும் தன் சுற்றமும் இரசித்து வாழம் வாழ்க்கை.

    பராரியாக தான் ஒன்றும் இல்லாமல் கேளிரையும் பராரிகளாக்கி அப்பராரித்தனமே உயர்ந்தது என வாழும் வாழ்க்கை.

    இருவகையிலும் மக்கள் உள – இரண்டாவதில் ஒரு சிலரேயாயினும்.

    அவரவர் வாழ்க்கையை அவரவருக்குப் பிடித்தவண்ணம் வாழலாம் பிறரைத் துன்புறுத்தாமல்.

    உடனே குதித்துவிடாதீகள் கோடி சேர்த்தவன் பிறரைக் கொள்ளைய்டித்து துன்புறுத்திதான் அப்படி ஆனான் என்று!

    பராரியும் தன் பராரித்தனமே மேன்மை வாய்ந்தது என தன் பெண்டு பிள்ளைகளைப் பட்டினி போட்டது பிரசித்தம்.

    The poet Subramania Bharathi is one example.

  7. JoARF's avatar JoARF சொல்கிறார்:

    Kaveri Mainthan can do this:

    He want to know how to become rich in one generation. But to know that from Kanmozhi is wrong. She has not become rich in one generation as she got the legacy of the earlier generation.

    There is one Rajarathinam. He owned the brand Atta named Asservath.
    ஆசிர்வாத் கோதுமை மாவு.

    In a scandal he lost all. But he was not downhearted. He said, I will become crorepathis in a few months. Give me a few thousands and I will make it a few crores in a few months.

    He did it. He created the Aseervath brand. He is from Covai.

    He buys and sells companies.

    Kaveri Maintha can approach him.

  8. raja natarajan's avatar raja natarajan சொல்கிறார்:

    இதுக்கு பேருதான் நாசுக்கா!

    A different platform of expression.

  9. johan paris's avatar johan paris சொல்கிறார்:

    கனிமொழி கவிதை எழுதியாங்க இவ்வளவு சம்பாதித்துள்ளார்.???

  10. Suresh kumar's avatar Suresh kumar சொல்கிறார்:

    எட்டு கோடி மட்டுமல்ல கலைஞர் டிவின் இருபது சதவீத பங்குகளும் கனிமொழியிடம் தான் இருக்கிறது. இப்போ கனிமொழியின் சொத்துக்கள் நூறு கோடியை தாண்டலாம் . சிபிஐ விசாரித்தால் மட்டுமே கனிமொழியிடம் எப்படி இவ்வளவு பணம் வந்தது என்பது தெரியும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.