கலைஞர் டிவிக்கும், 2ஜி ஊழலுக்கும் தொடர்பு
படுத்தி கேள்வி கேட்பது விஷமத்தனமானது –
கலைஞர் சிபிஐ யைச் சொல்கிறாரா ?
கலைஞர் இன்று அறிவாலயத்தில் நிருபர்களின்
கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது கூறியது –
“2ஜி அலைக்கற்றை ஊழலுக்கும், கலைஞர் டிவிக்கும்
தொடர்பு இருப்பதாக வெளியான செய்திக்கு இன்று
கலைஞர் டிவி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பிறகும் இது தொடர்பாக கேள்வி எழுப்புவது
விஷமத்தனமானது.”
கேள்விகளை எழுப்புவது பத்திரிகையாளராக இருந்தால்
கலைஞர் கூறுவது சரியாக இருக்கலாம்.
ஆனால் என்ன செய்வது –
கேட்பது சிபிஐ ஆயிற்றே !
அப்படியானால் சிபிஐ கேள்வி கேட்பதும்
விஷமத்தனமானது என்று கலைஞர் சொல்கிறாரா ?
கீழ்க்கண்ட கேள்விகளுக்கு மட்டும் விளக்கம்
சொல்லப் பட்டால் போதும். பின்னர் இது விஷயத்தில்
யாரும் எந்தவித விஷமமும் பண்ண இயலாது !
1)முன் பின் அறியாத சினியுக் நிறுவனம் ஏன்
கலைஞருக்கு (டிவி க்கு தான்) 214 கோடி ரூபாய்
கடன் (என்றே வைத்துக் கொள்வோமே ) கொடுக்க
வேண்டும் ?
2) எதை நம்பி இவ்வளவு பணம் கொடுக்கப்
பட்டது ?
3) 30 % ஷேர் வாங்க அட்வான்ஸ் என்று
சொல்லப்படுகிறது. பின்னர் விலை படியவில்லை
அதனால் ஷேர் வாங்கவில்லை-அதனால்,
அந்த தொகை கடனாகக் கருதப்பட்டது
என்றும் சொல்கிறார்கள்.
விலை தீர்மானம் செய்யாமலே இவ்வளவு
பெரிய தொகையை கொடுக்கும் அளவிற்கு
சினியுக் காரர்கள் இளிச்சவாயர்களா ?
4) இதற்கெல்லாம் எழுத்தில் எதாவது கடிதங்கள்/
பத்திரங்கள் / பரிமாற்றங்கள் இருக்குமே .
அதில் எதையாவது வெளியிடலாமே.
சந்தேகங்களைத் தீர்க்க உதவுமே.
5) 30% ஷேரின் (உத்தேச) மதிப்பு விலை
214 கோடி என்றால் கலைஞர் டிவியின் அன்றைய
மொத்த மதிப்பு (100%) சுமார் 700 கோடி என்று
ஆகிறது.
6) இந்த பரிமாற்றம் நடந்திருப்பது 2009-2010-ல்.
அப்போது கலைஞர் டிவி ஆரம்பித்து ஒரு வருடம்
கூட ஆகவில்லை. கலைஞர் டிவி ஆரம்பிக்கும்போது
போட்ட மூலதனம் வெறும் 3 லட்சம் மட்டுமே
என்று ஆர்க்காடு ஒரு தடவை சொல்லி இருக்கிறார்.
அது எப்படி ஒரு வருடத்துக்குள் 700 கோடி ஆனது ?
7) 214 கோடி கடனை (?) திருப்பிக்
கொடுத்த தேதியை மட்டும் யாரும் சொல்ல
மாட்டேன் என்கிறார்களே – அது ஏன் ?
8) அந்த தேதி, சிபிஐ பிடி இறுக்கமான பிறகா
முன்னதாகவேயா ? (சிபிஐ டிபி ரியால்டர், சினியுக்
மீது ரெய்டு நிகழ்த்தியது ஜனவரி 2010 -ல்.)
9) கடனாக (!) வாங்கிய 214 கோடி ரூபாய்
கலைஞர் டிவியில் எந்த விதத்தில்
பயன்படுத்தப்பட்டது ?
10) அந்த 214 கோடி ரூபாயை திரும்பக் கொடுக்க
கலைஞர் டிவி மீண்டும் எப்படி பணம் திரட்டியது ?
மீண்டும் வேறு எங்கேயாவது கடன் வாங்கியதா ?
இவ்வளவு பெரிய பணத்தை திரட்டியது எப்படி ?
யாரிடமிருந்து ?
11) கனிமொழியோ – ஒரு வருடமாக கலைஞர் டிவி
ஆபீசுக்கே போனதில்லை என்கிறார்.
தயாளு அம்மாளோ என்றுமே போகும் பழக்கமில்லை.
முக்கிய பங்குதாரர்களான அவர்கள்
இருவரின் தலையிலும் 214 கோடி ரூபாய் அளவிற்கு
கடனை சுமத்தும் அளவிற்கு சரத் ரெட்டிக்கு
உரிமை கொடுக்கப்பட்டிருந்ததா ?
12) கலைஞருக்கும் தெரியாமலே அவர்கள்
இவ்வளவு பெரிய கடனாளி ஆக்கப்பட்டு விட்டார்களா ?
13) கடைசி கடைசியாக ஒரே ஒரு கேள்வி –
கலைஞர் டிவிக்கு என்று போர்டு ஆப் டைரக்டர்ஸ்
மீட்டிங் எதுவும் நடந்ததே இல்லையா ?
ஷேர் விற்பது அல்லது 214 கோடி அளவிற்கு
பெரிய தொகை கடன் வாங்கும்போது, அதில்
ஒப்புதல் வாங்கி இருக்க மாட்டார்களா ?
மினிட் புக் கிலாவது –
எதுவும் பதிவு பண்ணி இருக்க மாட்டார்க்ளா ?
அப்படி எதாவது இருந்தால் அதை நகல் எடுத்து
கேள்வி கேட்பவர்களின் முகத்தில் வீசி எறிய
வேண்டியது தானே ?
அதற்குப் பிறகு –
யாரால் கேள்வி கேட்க முடியும் ?
(நான் ஒரு முட்டாள் – இதை எல்லாம்
கலைஞருக்கு நான் சொல்லித் தர வேண்டுமா ?)
…….(முடிந்தால் அவரே
செய்திருக்க மாட்டாரா !! )



மீண்டும் நல்ல பதிவு இதே பாணியில் தொடர்க.
அன்புள்ள கா.மை அவர்களுக்கு …………..
வரும் தேர்தலில் வாக்களர்களுக்கு தி.மு.க பணம் கொடுக்க முயற்சிக்கும் செய்திகள் தெரியுமா?…..
வரும் தேர்தலில் ஒருவருக்கு 50000 .ரூ வரை பட்டுவாடா செய்ய முயற்சிகள் நடந்துவருகின்றன …….தெரியுமா ?????????????????????????????
உங்களது பதிவை படித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. இந்த ஊழல் பெருச்சாளிகளை என்ன தான் செய்வது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
பொறுத்திருந்து பாருங்கள்… உண்மையான உண்மை வெளியாகும் போது இவர் எப்படி மா(ற்)றிப் பேசப்போகிறார் என்பதை.. இந்த வாரத்தில், ஏன் இன்றே கூட முக்கிய தலைகளில் ஒன்று சீ(தீண்டப்படலாம் என்கிறது புதுதில்லிப் பறவை. பார்ப்போம்.
WOW wow WOW wow WOW wow WOW WOW wow WOW WOW wow WOW …………………………..keep the good work going 🙂
very use