ராஜா கைதுக்கு கலைஞர் ஏன் பதறினார் ?
சிபிஐ ரெய்டை தாமதப்படுத்தச் சொன்ன அமைச்சர் !
214 கோடி விஷயத்தை வெளிப்படுத்துகிறது
டைம்ஸ் ஆப் இந்தியா !!
இங்கே யாருக்கும் ஒன்றும் தெரிய வாய்ப்பில்லை
என்கிற எண்ணத்தில் எப்படி எல்லாம் பேசினார் ?
நான் மாவலி. ராஜா ஒரு தலித் மாவீரன்.
தாழ்ந்த ஜாதிக்காரர்கள் ஆட்சியை/வளர்ச்சியை
பொறுக்க முடியாமல், பார்ப்பனர்களும்,
உயர்ஜாதிக்காரர்களும் செய்யும் சதி.
செல்போன் விலையைக் குறைத்ததற்காக
தன்னையே தியாகம் செய்துக் கொண்டார் ராஜா
டெல்லியில் அநியாயமாக சிறைவாசம்
அனுபவிக்கிறார் –
என்னவெல்லாம் கூறி நாடகமாடினார் ?
இன்று எல்லாம் வெட்ட வெளிச்சமாகி
மானம் கப்பலேறுகிறதே !
இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்
அளிக்கும் செய்திகளின் சாரம் –
ஒரு வருடத்திற்கு முன்னதாகவே, அதாவது –
ஜனவரி 2010 -லேயே DB ரியல்டார்
மற்றும் அதன் துணை நிறுவனங்களான
டைனமிஸ்ட் ரியல்டி, குசேகாவ்ன்,
சினியுக் ஆகிய நிறுவனங்களில் சிபிஐ மேற்கொண்ட
அதிரடி ரெய்டுகளின்போது, தமிழகத்தைச்
சேர்ந்த ஒரு மத்திய அமைச்சர் (திமுகவின்
பழனிமாணிக்கம் ? ) பேருக்கு ரெய்டு நடத்தினால்
போதும் என்றும், தலைவரின் தொலைக்காட்சி
சம்பந்தப்பட்ட விஷயங்களை பெரிது படுத்த
வேண்டாம் என்றும் சிபிஐ அதிகாரிகளிடம்
கேட்டுக்கொண்டாராம்.
வருமான வரி இலாகாவில் உயர் அதிகாரியாக
பணி புரிந்து, ஓய்வுபெற்றபிறகு, டிபி ரியல்டாரில்
அதிகாரியாக பணி புரிந்து வந்த ஒரு தமிழரும்,
தலைவர் சம்பந்தப்பட்டிருப்பதால், சினியுக் மற்றும்
கலைஞர் தொலைக்காட்சி சம்பந்தப்பட்ட
214 கோடி ரூபாய் விஷயத்தை மேற்கொண்டு
தொடர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டாராம்.
ஆக – ஒரு ஆண்டிற்கு முன்னதாகவே கலைஞருக்கு
விஷயம் தெரிந்திருக்கிறது – தலைக்கு மேல் கத்தி
தொங்கிக் கொண்டிருப்பது.
இருந்தாலும் வெளியே தான் என்னென்ன சவால்கள்,
ஆர்ப்பாட்டங்கள் – அடேயப்பா !
எல்லாரையும் மடையர்களாக்கி விட்டார்களே !
நேரடியாகப் பணப் பரிமாற்றம் இருந்தால்
யாராவது மோப்பம் பிடித்து விடப்போகிறார்களே
என்று சுற்றி வளைத்து, 3-4 கைகள் மாறி பணம்
வந்திருக்கிறது.
டிபி ரியால்டாரிடமிருந்து
டைனமிஸ்ட் ரியல்டி,
பிறகு அங்கிருந்து குசேகாவ்ன்,
பிறகு அங்கிருந்து சினியுக்
பின்னர் கடைசியாக சினியுக் – கிலிருந்து
கலைஞர் தொலைக்காட்சிக்கு.
கேட்டால் கடன் என்கிறார்கள்.
பிறகு (சிபிஐ ரெய்டுக்குப் பிறகு)வட்டியுடன்
திரும்பக் கொடுத்து விட்டோம் என்கிறார்கள்.
எங்கோ மும்பையில் இருக்கும் ஒரு துக்கடா கம்பெனி
(சினியுக்) இவர்களுக்கு 214 கோடி ரூபாயைத்
தூக்கித் தந்து விட்டதாம் – கடனாக !
இப்போதாவது வெட்கப்படுவார்கள் என்று
நினைத்தால் நாம் தான் ஏமாந்து போவோம் –
இதற்கும் எதாவது வியாக்கியானம் வரும் –
அதையும் பார்ப்போம் !
உச்ச நீதி மன்றத்திடம் சென்றபிறகு தான்
விஷயமே நகர ஆரம்பித்திருக்கிறது.
————————————————————————————-
இன்றைய தினம் உச்ச நீதிமன்றத்திலிருந்து
கிடைத்திருக்கும் உத்திரவுகள் இந்த வழக்குகள்
பற்றி சிறிது நம்பிக்கை
அளிக்கின்றன –
1) 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்குகளை விசாரிக்க
தனி நீதி மன்றம் (ஸ்பெஷ்ல் கோர்ட் ) அமைக்கும்படி
மத்திய அரசுக்கு உத்திரவு இடப்பட்டுள்ளது.
2) தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுபவர்கள்
யாராக இருந்தாலும், எத்தகைய உயர் பதவியில்
இருந்தாலும், சற்றும் தாமதிக்காமல் உடனடியாக
தீவிரமான விசாரணையில் இறங்க வேண்டும் என்று
சிபிஐ க்கு உத்திரவு இடப்பட்டுள்ளது.
3) ராஜா, மற்றும் சம்பந்தப்பட்ட மற்றவர்கள்
மீது மார்ச் 31 ந்தேதிக்குள்ளாக சார்ஜ் ஷீட்
சமர்ப்பிக்க உத்திரவு கொடுக்கப்பட்டுள்ளது.



//ஆக – ஒரு ஆண்டிற்கு முன்னதாகவே கலைஞருக்கு
விஷயம் தெரிந்திருக்கிறது//
அட என்னங்க நீங்க… விஞ்ஞான பூர்வமாக ஊழல் புரிபவர்கள் என்று ஒரு நீதிபதி கையாலேயே சர்டிஃபிகேட் வாங்கினவங்களுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். 2ஜி விஷயத்தில் இதுவரை வெளியானதை விட இனி கொஞ்சம் கொஞ்சமாக (??) வெளியாகும் விஷயங்கள் பயங்கர அதிர்ச்சியைத் தரும். தேர்தலை ஒரு ஆறு மாதத்திற்குத் தள்ளி வைத்தால் பல குள்ள நரிகளின் சாயம் வெளுத்து உண்மை முகம் தெரிய வரும்.
விஷயம் சுப்ரீம் கோர்ட் கையில்
போய்ச் சேர்ந்தது பெரிய அளவில்
நம்பிக்கை அளிக்கிறது.
அடுத்த விசாரணை (hearing) நாளை
எதிர்பார்த்துக் காத்திருப்போம்.
வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
//ஆக – ஒரு ஆண்டிற்கு முன்னதாகவே கலைஞருக்கு
விஷயம் தெரிந்திருக்கிறது//
நீங்கள் என்னவோ ஒரு ஆண்டுக்கு முன்னாடி தான், அதாவது சி.பி.ஐ ரெய்டுக்குப் பின் தெரியும் எனக் கூறுகிறீர்கள். அந்த பணம் செக்யுரிட்டி இல்லாத கடனாக கலைஞர் டி வீக்கு வந்த போது தெரியாது என்கிறீர்களா?
நண்பரே,
நீங்க எங்கேயோ போயிட்டீங்க – பிரமாதம் !
வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
சார்
உங்க நடவடிக்கை சுப்ரமணிய சாமியோட ஒப்பிட்டு பாத்தா……………………ரொம்ப சூப்பர்.???!!!!!!!!!
அவர் எங்கே – நான் எங்கே !
அவரைப் பார்த்தால் நாமும் நம் பங்குக்கு
சிறியதாகவாவது எதாவது பணி செய்ய வேண்டும்
என்று தோன்றுகிறது.
ஊர் கூடித்தானே தேர் இழுக்க வேண்டும்.
வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்