புதிய 2 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் ..
பதறலுக்கிடையே ஒரு ஆறுதலான செய்தி !
இன்று காலை இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை
ஏற்படுத்திய செய்தி ஒன்றை பிரசுரித்தது
ஹிந்து ஆங்கிலப் பத்திரிகை.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான
இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவு –
ஆன்ட்ரிக்ஸ் கார்பொரேஷன் லிமிடெட் –
தேவாஸ் மல்டிமீடியா பிரைவேட் லிமிடெட்
என்கிற தனியார் நிறுவனத்துடன் செய்துகொண்ட
“எஸ்”பாண்டு அலைக்கற்றை விற்பனை
ஏற்பாடுகளின் மூலம் சுமார் 2 லட்சம் கோடி
அளவிற்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது
என்பதே அந்த செய்தி.
இஸ்ரோவிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரியான
டாக்டர் எம்.ஜி.சந்திரசேகர் உருவாக்கியுள்ள
தனியார் நிறுவனம் தான் தேவாஸ் மல்டிமீடியா.
பிரதமர் மன்மோகன் சிங்கின் நேரடி கண்காணிப்பில்
உள்ளது விண்வெளி ஆராய்ச்சித் துறை.
இதில் இவ்வளவு பெரிய முறைகேடு எப்படி நிகழ்ந்தது ?
இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் யார் என்பதெல்லாம்
இனிமேல் தான், போகப் போகத்தான் தெரியும்.
மிகப்பெரிய அளவிற்கான ஊழல் நிகழ்வதற்கான
எல்லா அடிப்படை ஏற்பாடுகளும்,
ஒப்பந்தங்களும் முடிந்து விட்ட நிலையில்,
அதிருஷ்டவசமாக, ஒப்பந்தம் செயல் முறையில்
வரும் நிலையில் – விஷயம் வெளியாகி விட்டது.
இதையும் வெளிக்கொண்டு வந்திருப்பது
2g விவகாரத்தை அம்பலப்படுத்திய தணிக்கை
அலுவலகமான CAG தான்.
2005 ஆம் ஆண்டிலேயே அஸ்திவாரம்
போடப்பட்டு விட்ட இந்த ஊழல் ஒப்பந்தம்
அமுலுக்கு வருவதை
தள்ளிப் போட்டு விட்டது
இரண்டு செயற்கைக் கோள்கள் விண்வெளியில்
செலுத்தப்படுவதில் ஏற்பட்ட காலதாமதம் !
இந்த தாமதத்தை – இறைவனோ, இயற்கையோ
மீண்டும் பெருந்துயர் ஒன்றில் மூழ்கவிருந்த
இந்திய மக்களைக் காப்பதற்காக காட்டிய
கருணையாகவே கருத வேண்டும் !
இன்னும் தடுத்து நிறுத்தைக்கூடிய நிலையிலேயே
இந்த திட்டம் இருக்கிறது என்பது
மிகப்பெரிய ஆறுதல்.
விஷயம் மிகப்பெரிய அளவில் வெளிவந்து விட்டதால்,
இதைத் தவிர்க்க மத்திய அரசு உடனடியாக
நடவடிக்கை எடுக்கும் என்று நம்பலாம்.
இருந்தாலும் – இத்தகைய பேரதிர்ச்சி தரும் அளவிற்கு
ஊழல்கள் நடைபெற வாய்ப்பு கொடுக்கும் அளவில்
நமது நடைமுறைகள் இருப்பது மிகவும்
வியப்பாகவே இருக்கிறது.
checks & balances என்று சொல்லக்கூடிய
சுய கட்டுப்பாடு முறைகள் எதுவும் பலமாகவே இல்லையே.
இத்தனை கோடி ரூபாய்களை யார் வேண்டுமானாலும்
கூட்டு சேர்ந்து சுருட்டும் அளவிற்கு நமது நடைமுறைகள்
பலவீனமாக இருக்கின்றனவே !
இந்த ஊழலின் பின்னால் எத்தனை ராஜாக்கள் /ராணிக்கள்
ஒளிந்திருக்கிறார்களோ ?



AYYO AYOO
இதில் கேரளத்துக்காரர்கள் பலரும் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள். ஜார்ஜுக்கும், தாமசுக்கும் இதில் ஏதேனும் தொடர்புகள் இருக்கலாம். மேலதிகத் தகவல்கள் விரைவில் கிட்டும் என்று நம்புகிறேன். அவசரம் அவசரமாக ஐ எஸ் ஆர் ஓ ரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளது. ஏன் முதலில் இந்த ஒப்பந்தத்தைப் போட்டார்கள்? இதற்கு ஏதேனும் ஏல அறிவிப்பு நடந்ததா என்பதை மாதவன் நாயரிடம் ஆரம்பித்து விசாரிக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதனால்தான் சி ஏ ஜி லாப இழப்பு என்கிறது. முறைப்படி ஏலம் நடந்திருந்தால் இதை விடக் கூட பணத்திற்கு போயிருந்திருக்கும். இன்னும் எத்தனை துறைகளில் மன்மோகன் புகுந்து விளையாடிக்கிறாரோ யார் கண்டது. படித்தவன் சூது செய்தால் கண்டுபிடிக்கவே முடியாது என்று நம்பி விளையாடி விட்டிருக்கிறார் தாடிக்காரர். ஹர்ஷத் மேத்தா ஊழலில் இருந்து ஐ எஸ் ஆர் ஓ ஊழல் வரை அனைத்து மெகா ஊழல்களுமே இந்தா ஆளின் தலைமையில்தான் நடந்திருக்கிறது. படித்த படிப்புகள் மோசம் செய்யவில்லை பல நூறு பில்லியன் டாலர்கள் கொள்ளையடிக்க உதவியிருக்கிறது. உலக மகா அயோக்யர்களில் முதல் இடத்தை மன்மோகன் உறுதியாகப் பிடிக்கிறார்
சமீபத்தில் வெளிவந்த ஊழல்கள் அரசியல்வாதி – அதிகாரிகள் கூட்டணி கைவினை.
இது ISRO வைச் சேர்ந்த TECHNOCRAT சந்த்ரசேகர் சுருட்ட முனைந்தது போல் உள்ளது.
வழக்கம் போல் தாடிக்காரர் தனக்கு ஒன்றும் தெரியாது என பாட்டு பாடுவார். அது உண்மையாகவும் இருக்கலாம். அவர் அரசில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளாத தலைவராகவே அவர் காலம் கடத்திவிட்டார். அவர் போகவேண்டியது தான். .
ஊமை குசும்பன் நரசிம்ம ராவை விட மோசமான ஆளா இருப்பான்போல இந்த சர்தார். சர்தார் ஜோக் எல்லாம் இனி இல்லை. சர்தார் ஷாக்தான். Shock!!!!